இடுகைகள்

பிப்ரவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

செருப்பு நின்னா செருப்ப ஆதரிப்போம்! வெளக்கமாறு நின்னா வெளக்கமாற ஆதரிப்போம்!!

சென்ற சட்டமன்றத் தேர்தலின் போது சீமான் பேசிய வசனங்களிலேயே பிடித்தது, "காங்கிரசுக்கு எதிரா யார் நின்னாலும் ஆதரிப்போம். செருப்பு நின்னா செருப்ப ஆதரிப்போம். வெளக்கமாறு நின்னா வெளக்கமாற ஆதரிப்போம்" என்றதுதான். எல்லாத் தேர்தல்களிலுமே அப்படியொரு தெளிவான முடிவை வைத்துக் கொண்டு தான் எல்லோருமே யாரை ஆதரிப்பது என்று முடிவு செய்கிறோம். பெரும்பாலானவர்கள் தி.மு.க.வோ அ.தி.மு.க.வோ செருப்பை நிறுத்தினால் செருப்புக்கும் வெளக்கமாறை நிறுத்தினால் வெளக்கமாறுக்கும் வாக்களிப்போராக இருக்கின்றனர். அவ்விரு கட்சிகளையும் தவிர்த்து அமைகிற அணி, செருப்பை நிறுத்தினால் செருப்புக்கும் வெளக்கமாறை நிறுத்தினால் வெளக்கமாறுக்கும் வாக்களிக்கத் தயார் என்ற ஒரு கூட்டம் உருவாகி இருக்கிறோம் இம்முறை. அப்படித்தான் மதவாத-இனவாத அரசியற் கட்சிகளுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கூட நிறையப் பேர் பிடிவாதமான முடிவு எடுத்துள்ளார்கள். "என் மதத்துக்காக - இனத்துக்காகக் கத்துவது செருப்பாக இருந்தால் செருப்பையும் வெளக்கமாறாக இருந்தால் வெளக்கமாறையும் ஆதரிப்பேன்" எனும் தெளிவு. அப்படி ஒத்துக் கொண்டு ஆதரிப்பது ஒருவிதம். அது செருப்பில்லை

பிரிவின் வதை

தோல் நோயுடையதைப் போல அதைச் சொறிந்து விடும் விரல்களாய்...  இணைந்திருந்த நினைவுகள்... "த்தூ... மூணு நாளுக்கே இவ்வளவு லூசாவியா?" என்று யாரோ ஓர் எதிர்க்கட்சித் தலைவர் துப்பித் தூவும் மழையின் சாரல் இங்கு வரை தெறிக்கத்தான் செய்கிறது...

உலகத் தாய்மொழி தினம்

இன்று உலகத் தாய்மொழி தினமாம். இது போன்ற தினங்களில் பெரும்பாலும் ஆர்வமில்லை. ஏதோவொரு தினமென்று சொல்லியாவது அதில் ஏதாவது ஒரு நல்லது நடந்தால் நல்லதுதானே! அந்த வகையில் இந்த தினத்தை வரவேற்போம். உலகமெங்கும் பெரும்பாலும் மொழிக்கொரு நாடு என்கிற கொள்கை இருப்பதால் பல மொழிகள் நம்முடையதைப் போல நெருக்கடிக்கு உள்ளாகாமல் இருக்கின்றன. பல மொழிகளைக் கொண்ட ஒரே மிகப் பெரிய நாடு இந்தியா மட்டுமே. ஒரு நாடு நீண்ட காலம் உயிரோடிருக்க அதன் பன்முகத்தன்மையை மதிப்பது எவ்வளவு முக்கியம் என்பதை இந்தியா முழுமையாக உணர்ந்து கொண்டுள்ளதா என்று தெரியவில்லை. ஒவ்வொருவருக்கும் அவரவர் தாய்மொழியில் படிக்கிற, படித்தால் வேலைக்குச் செல்ல முடிகிற, தாய்மொழியை மட்டுமே பயன்படுத்தி வாழமுடிகிற உரிமை உரிமைகளில் எல்லாம் தலையாய அடிப்படை உரிமை என்பதை இங்குள்ள மங்குனி மண்டையர்களுக்குப் புரிய வைக்கவே முடியவில்லை. தாய்மொழியில் பேசும் - படிக்கும் - வாழும் உரிமையைக் கோருதல் குறுகிற மனப்பான்மை என்றும், எல்லோரும் ஆங்கிலம் பேசி - படித்து - வாழும் நாளில் நாம் வல்லரசாக மாறிவிட்டதாகக் கணக்காகி விடும் என்றும் ஒரு கூட்டம் பிதற்றித் திரிகிறது. உலகில் ஒ

தமிழக அரசியல் பழங்கள் - யார் யார் எப்போது வந்தார்கள்?

தேர்தல் நேரம் என்பதால் கொஞ்சம் அரசியல் ஆர்வம் தலை தூக்கத் தொடங்கி இருக்கிறது. ஓர் அரசியல்வாதி பல்வேறு பண்புகளுக்காக - காரணங்களுக்காக மதிக்கப்படுகிறார் அல்லது ஏற்றுக்கொள்ளப்படுகிறார். அவருடைய மக்கள் நலன் சார்ந்த சிந்தனையில் தொடங்கி, பேச்சாற்றல் முதல் நிர்வாகத்திறன் வரை, நடிப்புத்திறன் முதல் தைரியம் வரை எத்தனையோ காரணிகள் இருக்கின்றன. ' அப்பிடி என்ன கருமத்தத்தான் இந்த ஆள்ட்டக் (இருபாலரும் அடக்கம்!) கண்டாங்களோ!?' என்று மண்டையைப் பிய்த்துக் கொள்ள வைக்கிற மாதிரியான ஆட்களையும் பார்த்து விட்டோம். இந்தியர் - தமிழர் நம்மைப் பொருத்தமட்டில், எல்லாத் துறைகளிலுமே திறமை ஒருபுறம் என்றால், அனுபவம் மற்றொருபுறம் நிறையவே மதிக்கப் படுகிறது. எங்கள் பணியில் கூட இந்தியாவில் பெரும்பாலும் அனுபவத்தை வைத்துத்தான் சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது. அதுவே மேற்குலகில் அப்படியில்லை. அனுபவமோ வயதோ பெரிதாக மதிக்கப் படுவதில்லை. திறமைக்குத்தான் கூடுதல் மரியாதை. திறமை என்று பேசத் தொடங்கினால் கட்சி சார்பு அடிமைகளோடு வாக்குவாதம் செய்து வாழ்க்கை வீணாகிப் போகும் என்பதால் அதற்குள் போகும் துணிச்சல் நமக்கில்லை. அனுபவம் என்ற