இடுகைகள்

2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேரள வெள்ளம் இன்னும் மோசமாக மாறும்

  கேரள வெள்ளம் இன்னும் மோசமாக மாறும் மனிதர்களின் செயற்கையான தலையீடுகள் அவலத்தின் அளவைப் பெரிதளவில் கூட்டிவிட்டன கேரளம் பல பத்தாண்டுகளில் கண்டிராத அளவுக்குப் பெரும் வெள்ளத்தை எதிர்கொண்டிருக்கும் இவ்வேளையில், 2010-இல் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட ‘மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுச்சூழல் வல்லுநர் குழு’ (மே.ம.சு.வ.கு.)-வின் தலைவர் சூழலியலாளர் மாதவ் காட்கில், சூழலிய உணர்மிகு (Ecologically Sensitive) பகுதிகளைக் கையாள்வதில் அரசின் வினைமை பற்றித் தீவிரக் கவலைகளை எழுப்பியுள்ளார். அரசு அமைத்த இந்த மே.ம.சு.வ.கு., அதன் 2011 அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலைக்குக் கீழ் வரும் கேரளத்தின் பல பகுதிகளை சூழலிய உணர்மிகு பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருந்தது. “பா.ஜ.க. ஆளும் மாநிலங்களும் சரி, சி.பி.ஐ.எம். ஆளும் மாநிலங்களும் சரி, மற்ற எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி, ஒவ்வொரு மாநில அரசும் எங்கள் அறிக்கையை எதிர்த்தது,” என்கிறார் Rediff.com-இன் சையத் ஃபிர்தவுஸ் அஷ்ரஃப்பிடம் பேசிய காட்கில். உங்களைப் பொருத்தமட்டில் கேரளத்தில் என்னதான் தப்பு நடந்தது? ஏகப்பட்ட பிரச்சனைக

இந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்

கடந்த இருபது ஆண்டுகளில் ஐந்து முறை இழுத்து மூடப்பட்ட பின்னும் தொடரும் ஸ்டெர்லைட் காப்பரின் உய்வு, இந்தியாவின் நெளிவுசுளிவான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு நிறையக் கடன்பட்டிருக்கிறது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டுள்ளது. இப்போதைக்கு. எதிர்பார்த்தபடியே, ஒரு மாசுபடுத்தும் தொழிலுக்கு எதிரான 23 ஆண்டு காலப் போராட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர், அது ஒரு மாபெரும் மனித விலை கொடுத்துப் பெறப்பட்டது என்றாலும் கூட. ஆனால் தமிழகத்தின் இந்தக் கடற்கரை நகரத்தில் ஓர் அமைதியான கலக்கம் இருக்கிறது. இத்தோடு போராட்டத்தை நிறுத்திவிட வேண்டுமோ என்று ஓர் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. 13 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்ட மே 22 காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் அம்மக்களிடம் பேசிப் பார்க்கும் போது அந்த உணர்வு நன்றாகப் புலப்படுகிறது. அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா லிமிடெடுக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய தாமிர உற்பத்தி நிறுவனமான இந்த ஆலையை மூடக்கோரி, சுமார் 15,000 மக்கள் தெருக்களுக்கு வந்திருந்தனர். தாமிர உருக்கு எ

கலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும்

கலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும் கடந்த ஜூன் மாத இதழைக் கலைஞர் சிறப்பிதழாகக் கொண்டு வந்த இதழ் ஒன்றுக்கு அவரைப் பற்றிய நல்லவைகளைப் பற்றி மட்டுமே எழுதுமாறு ஒரு கோரிக்கை வந்தது. அது நமக்கு அவ்வளவு எளிதில்லை. மூச்சுப் பிடித்து முக்கித் தக்கி எழுதி அனுப்பியதையும், "இதுதான் ஒங்க ஊர்ல நல்லபடியா எழுதுறதா?" என்று கேட்டு ஒதுக்கிவைத்துவிட்டார்கள். இயல்பிலேயே திராவிட அரசியல் மீது பெரிதாக ஈர்ப்பு இல்லை என்றபோதும், கண்ணை மூடிக்கொண்டு அவர்களை நிராகரிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எல்லோருக்கும் தன் பக்க நியாயத்தை எடுத்துவைக்க சட்டம் இடம் கொடுப்பது போல், அரசியலிலுமே கூட அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் இன்று போன்ற ஒரு நாளில். * கருணாநிதி என்றால் இப்படித்தான் என்று நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிம்பம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் அது பெரும்பாலும் மிகவும் எதிர்மறையானதாகவே இருக்கிறது. அவர்கள் பார்த்ததை வைத்து அவர்கள் சில முடிவுகளுக்கு வந்திருக்கிறார்கள். அதில் தவறும் இல்லை. ஈழப் போரின் போது அவரின் செயல்பாடுகள், ஒவ்வொருவராகக் குடும்ப உறுப்பினர்களை உள்ளே கொண்டுவந்து கட

அற்புதமது

எல்லோரும் அதை அருமை அற்புதம் என்றார்கள் அதை பார்த்திராதவர்கள் அனுபவித்திராதவர்கள் பாவம் செய்திருக்க வேண்டும் சபிக்கப்பட்டவர்களாயிருக்கக் கூடும் என்றார்கள் அப்படித்தான் இருக்குமோ என்றஞ்சி அதைப் பொய்ப்பிக்க விரும்பி நானும் சென்று பார்த்தேன் அனுபவித்தேன் அப்படியொன்றும் அருமையும் அற்புதமும் அதில் இருப்பது போலப் படவில்லை எனக்கு ஆனாலும் பார்க்காததற்கே பாவம் செய்திருக்க வேண்டும் சபிக்கப்பட்டிருக்கக் கூடும் என்றவர்கள் பார்த்துவிட்டு அருமை மறுத்தால் என்னவெல்லாம் சொல்வார்களோ அதற்குப் பின்னே ஆமாம் அருமைதான் அற்புதந்தான் என்று மாற்றிச் சொல்வதற்குப் பதில் இப்போதே சொல்லிவிடலாம் ஆகா! என்னே அருமை அது! அற்புதமது!!

நான் ஏன் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன்: சிவம் சங்கர் சிங்

நான் ஏன் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன்: சிவம் சங்கர் சிங் நரேந்திர மோதி ஆதரவாளரும் கட்சியின் பிரச்சார ஆய்வாளருமான ஒருவர் விளக்குகிறார் ‘இந்த அரசின் உண்மையான எதிர்மம் என்பது, நன்கு எண்ணித் தேர்ந்த ஓர் உத்தியோடு அது எப்படி தேசிய உரையாடலைப் பாதித்திருக்கிறது என்பதே. இது தோல்வியல்ல, இதுதான் திட்டமே.’ அரசியல் உரையாடல் ஆகக் கீழான புள்ளியில் இருக்கிறது, குறைந்தபட்சம் என் வாழ்நாளில் இதுதான் ஆகக் கீழான புள்ளி. கண்மூடித்தனமான சார்புநிலைப்பாடு நம்ப முடியாத அளவில் இருக்கிறது. என்ன ஆதாரம் என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லாமல் தன் பக்கம் எதுவோ அதை ஆதரிக்கிறார்கள் மனிதர்கள். அவர்கள் பொய்ச்செய்தி பரப்புகிறார்கள் என்பதை நிரூபித்தாலும் கூட எந்த மன உறுத்தலும் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு - கட்சிகள், வாக்காளர்கள், ஆதரவாளர்கள் என்று எல்லோரையுமே பழிக்கலாம். பாரதீய ஜனதா கட்சி, ஆற்றல்மிக்கதொரு பிரச்சாரத்தின் துணை கொண்டு சில குறிப்பிட்ட செய்திகளைப் பரப்புவதில் நம்பமுடியாத அளவுக்கு அருமையானதொரு பணியைச் செய்திருக்கிறது. இந்தச் செய்திகள்தாம் நான் அந்தக் கட்சியை இனியும் ஆதரிக்க முடியாது என்பதற்கான முதன

கில்லியர்மோ தெல் தோரோ (‘த ஷேப் ஆஃப் வாட்டர்’): 'துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை' [முழுமையான நேர்காணல் எழுத்துப்படி]

கில்லியர்மோ தெல் தோரோ (‘த ஷேப் ஆஃப் வாட்டர்’): 'துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை' [முழுமையான நேர்காணல் எழுத்துப்படி] கிறிஸ் பீச்சம், மார்கஸ் ஜேம்ஸ் டிக்சன்  திரைப்படம்  டிசம்பர் 26, 2017 11:00மு.ப.  கில்லியர்மோ தெல் தோரோ இதுவரை அவரது வாழ்க்கையில் ஒரேயோர் அகாடமி விருதுகளுக்கான பரிந்துரை மட்டுமே பெற்றுள்ளார் - "பான்’ஸ் லேபரிந்த்"-க்கான சிறந்த மூலத் திரைக்கதை (2006) - ஆனால் விரைவில் இதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம். அவரது சமீபத்திய திரைப்படமான “த ஷேப் ஆஃப் வாட்டர்”-இன் தயாரிப்பு, இயக்கம், மற்றும் எழுத்துக்காக சமீபத்தில் ‘கோல்டன் குளோப்’ மற்றும் ‘கிரிட்டிக்ஸ் சாய்ஸ்’ விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். உண்மையில், ஒளிபரப்புத் திரைப்பட விமர்சகர்களின் (Broadcast Film Critics) 14 பரிந்துரைகள் மற்றும் ஹாலிவுட் வெளிநாட்டுப் பத்திரிகைக் கழகத்தின் (Hollywood Foreign Press) 7 பரிந்துரைகளுடன் இந்தத் திரைப்படம்தான் இந்த ஆண்டில் ஒட்டுமொத்த விருதுகளுக்கான பரிந்துரைகளில் முன்னணி வகிக்கிறது. அவருடனான நம் சமீபத்திய உரையாடலில், இதை "துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை&