இடுகைகள்

புதினம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

போரும் அமைதியும்: வகைப்பாடுகளை மறுக்கும் காப்பியம்

போரும் அமைதியும்: வகைப்பாடுகளை மறுக்கும் காப்பியம் தல்ஸ்தோய் எழுதிய 'போரும் அமைதியும்', உலக இலக்கியத்தில் இதுவரை எழுதப்பட்ட புதினங்களிலேயே தலைசிறந்த புதினம் என்று பேசப்படுவனவற்றுள் ஒன்று. அந்த அளவுக்கு அதில் சரக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆயிரம் பக்கங்களுக்கும் மேலான இந்த நூலை முதற்பதிப்பில் சரியாக 1225 பக்கங்களாக வெளியிட்டார் தல்ஸ்தோய். நெப்போலியன் ஐரோப்பிய நாடுகள் மீது நடத்திய போரை மையமாக வைத்து, ரஷ்யாவின் உயர்குடிக் குடும்பங்களின் வாழ்வையும் வரலாற்றையும் மெய்யியலையும் பேசுகிறது இந்த நூல். தல்ஸ்தோயே இதை ஒரு புதினமாகக் கருதவில்லை. "நான் இதை ஒரு புதினமாகக் கருதவில்லை. காப்பியமாகவும் கருதவில்லை. வரலாற்றுக் குறிப்பாகவும் கருதவில்லை. அத்தகைய வகைப்பாடுகளைக் கடந்த, நான் விரும்பிய வகையில் எழுதித் தீர்த்த, ஒரு படைப்பு இது" என்றுதான் சொல்கிறார். இந்த வகைப்பாட்டு மறுப்புதான் இந்த நூலை இன்றும் முக்கியமானதாக வைத்திருக்கிறது. ஏன் இன்றும் இது முக்கியம் இன்றைய புவியரசியற் பதற்றங்கள் நிறைந்த காலத்தில், தல்ஸ்தோயின் மையக் கருத்து மிகவும் பொருத்தமானதாக இருக்கிறது: வரலாறு என்பது பெரிய ம...

சோளகர் தொட்டி

சோளகர் தொட்டி தமிழின் தலைசிறந்த புதினங்களில் ஒன்றாகக் கருதப்படுவது. நன்கு அறியப்பட்ட எழுத்தாளர்களின் புதினங்களைப் போல பெரிதும் பேசப்படாத நூல் என்பதால் எப்படி இருக்குமோ என்கிற சந்தேகத்தோடே தொடங்கினேன். தொடங்கிய சில அத்தியாயங்களிலேயே இந்தப் புதினத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு கூடியது. புதினத்தின் பாதியை நெருங்குவதற்குள் இதுதான் தமிழில் இதுவரை வெளிவந்த புதினங்களிலேயே சிறந்ததோ என்ற சந்தேகம் உருவாகி, முடிக்கும் போது இதுவரை நான் படித்த புதினங்களில் இதுதான் சிறந்தது என்று உறுதியாகப்பட்டது. ஜெயகாந்தன், ஜானகிராமன், கி. ரா. போன்ற பெரும் எழுத்தாளுமைகளின் புதினங்களோடு ஒப்பிடுகையில் இதில் புதினங்களுக்கென்று சொல்லப்படும் இலக்கணமோ அவ்விலக்கணத்தின்படியான அழகியலோ இலக்கிய மதிப்போ இல்லை என்று கூட வாதிடப்படலாம். இலக்கியத்திற்கென்று கறாரான இலக்கணங்கள் வைத்திருக்கும் சிலர், இந்தப் புதினத்தை இலக்கியமே இல்லை என்று முழுமையாக நிராகரிக்கவும் கூடும். நடந்ததை அப்படியே பதிவு செய்வதில் எங்கே இலக்கியச் சுவை இருக்கிறது எனக் கூடும். ஆனால் எனக்குப் படிக்கத் தொடங்கியதில் இருந்து, படித்து முடித்து விட்ட பின்பும் பல ...

புயலிலே ஒரு தோணி: இலக்கிய உலகத்தின் கரை சேராத கப்பல்

புயலிலே ஒரு தோணி: இலக்கிய உலகத்தின் கரை சேராத கப்பல் தமிழில் எழுதப்பட்ட மிகச் சிறந்த புதினங்களில் ஒன்று என்று சொல்லப்படும் ஒரு நூலைப் பற்றிப் பலரும் பேசிக் கேட்டதில்லை என்பது வியப்பான முரண். அந்தப் புதினத்தை எழுதியவரைப் பற்றித் தேடினால், புதினத்தைவிட வியப்பான வாழ்க்கை ஒன்று நம் முன்னால் விரிகிறது. ப. சிங்காரம் எழுதிய புயலிலே ஒரு தோணி அப்படிப்பட்ட ஒரு நூல். அதன் ஆசிரியரின் வாழ்க்கையும், அவர் எழுதிய புதினத்தின் இலக்கியச் செறிவும், தமிழ் இலக்கிய உலகம் எதை நினைவில் வைத்துக்கொள்கிறது, எதை மறந்துவிடுகிறது என்ற கேள்வியை எழுப்புகின்றன. தமிழ்நாட்டில் இலக்கிய வாசிப்பு ஒரு புறம் என்றால், இலக்கியம் சார்ந்த சந்திப்புகளும் செயல்பாடுகளும் இன்னொரு புறம் படு சுறுசுறுப்பாக நடந்துகொண்டே இருக்கின்றன. இலக்கிய வாசிப்பு என்பதே மிகச் சிறுபான்மையான ஒரு கூட்டத்தின் வேலையாக இருப்பதால், அவர்களில் பெரும்பாலோர் ஒரு குழுவாகக் கூடிக் கும்மாளம் போடுவது இயல்பான ஒன்றுதான். அந்தப் பத்துப் பேரே பல குழுக்களாகப் பிரிந்து அடித்துக்கொள்வது வேறொரு கதை. அதுவும் ஒரு போதைதான். அந்தக் கூட்டத்துக்குள் வராமலேயே, காலம் முழுக்கத் தன்...

சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்

தமிழில் எழுதியவர்களிலேயே தலைசிறந்த எழுத்தாளர் ஜெயகாந்தன்தான் என்று சொல்லப்படுவதைப் போல இதுவரை தமிழில் எழுதப்பட்ட புதினங்களிலேயே சிறந்த புதினம் இதுதான் என்றும் சொல்லப்படுவதுண்டு. தீவிர வாசிப்புக்குள் சென்றுவிட்டவர்கள் இதை மறுக்கக் கூடும். தீவிர வாசிப்பின் தொடக்க நிலையில் இருப்பவர்களுக்குத்தான் ஜெயகாந்தன் எனக் கூடும். அந்த நிலையில்தான் தமிழர்கள் நிறையப் பேர் இருக்கிறார்கள் என்பதால் ஜெயகாந்தன்தான் சிறந்த எழுத்தாளர் என்பதும் மக்கள்மயமான (democratic) ஒரு கருத்துதான். சுஜாதாதான் அது என்பவர்களை அதற்கும் முந்தைய கட்டம் என்பது போல், ஜெயகாந்தன்தான் அது என்பவர்களையும் படிநிலையில் கீழே வைத்துப் பேசுபவர்கள் உண்டு. வணிக எழுத்துக்கு அடுத்தபடியாகத் தமிழில் நிறையப் பேரை வாசிக்க வைத்த பெருமை சுஜாதாவுக்கே சேரும். அது போலத்தான் ஜெயகாந்தனும். ஒரு தலைமுறையையே இலக்கியத்தின் பக்கம் இழுத்து வந்த பெருமை அவரையே சேரும். கிட்டத்தட்ட அவருக்கு அடுத்த தலைமுறையில் எழுத வந்தவர்கள் எல்லோருமே அவரால் ஊக்கம் பெற்றவர்களே. அதனால்தான் தமிழில் இதுவரை ஞான பீடம் பெற்ற இரண்டே இருவரில் அவரும் ஒருவர். ஞான பீடம் ஒன்றே தரத்தின் க...