ரிச்சர்ட் டாக்கின்ஸ் - நேர்காணல்
https://www.pbs.org/faithandreason/transcript/dawk-body.html ரிச்சர்ட் டாக்கின்ஸ் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அறிவியல் பொதுப் புரிதல் (Public Understanding of Science ) பேராசிரியராக உள்ளார். சர்வதேச அளவில் அதிகம் விற்பனையாகும் புத்தகங்களான "The Selfish Gene" (சுயநல மரபணு), "The Blind Watchmaker" (குருட்டுக் கடிகாரஞ்செய்பவர்), "Climbing Mount Improbable" (சாத்தியமின்மை மலை ஏறுதல்) உட்படப் பல புத்தகங்களை எழுதியவர். கேள்வி: பேராசிரியர் டாக்கின்ஸ் அவர்களே, மனிதர்கள் வெறும் "மரபணு இயந்திரங்கள்" (Gene Machines) என்ற உங்கள் நம்பிக்கையை விளக்க முடியுமா? திரு. டாக்கின்ஸ்: மனிதர்கள் வெறும் மரபணு இயந்திரங்கள் என்று நான் கூறும்போது, "வெறும்" (just) என்ற சொல்லுக்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. ஒரு மரபணு இயந்திரமாக இருப்பதில் மிகப்பெரிய சிக்கல் உள்ளது, உண்மையில் மரபணு இயந்திரமாக இருப்பது ஓர் அழகு. அதன் பொருள் என்னவென்றால், இயற்கைத் தேர்வு, டார்வினிய இயற்கைத் தேர்வு, அனைத்து உயிரினங்களையும் அவை இன்றிருக்கும் நிலைக்குக் கொண்டு வந்...