இடுகைகள்

கடிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடிதங்கள் கழிதலும்

எனக்குச் சிறு வயது முதலே கடிதம் எழுதுவதில் ஓர் ஈர்ப்பு இருந்தது. அது என் முன்னோர்களிடமிருந்து எனக்கு வந்தது. என் தாத்தா முதலில் காந்தியடிகளையும் பின்னர் நேதாஜியையும் பின்பற்றி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். காந்தியைப் போலவே அவரின் தொண்டர்களும் கடிதம் எழுதுவதில் ஆர்வமுடையவர்கள் என்பார்கள். சிறு வயதிலிருந்தே தாத்தா எழுதிய பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கடிதங்கள் பற்றி வீட்டில் அடிக்கடிப் பேசக் கேள்விப்பட்டது மட்டுமில்லாமல், தாத்தாவின் சீடர்களான சித்தப்பாக்கள் சிலரும் அப்படியே கடிதங்கள் எழுதுபவர்களாக இருந்தது, எனக்கும் கடிதங்கள் மீது அளவில்லா ஈடுபாட்டைக் கொடுத்தது. ஆண்டுக்கு ஒரு முறையோ அதைவிடவும் குறைவாகவோ சந்திக்கும் சில உறவினர்களோடு பேசும் போது, அவர்களுடனேயே இருந்து அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கும். அவர்களின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நமக்கும் படிக்க எவ்வளவோ கொட்டிக் கிடப்பது போல இருக்கும். ஏனென்றால் அவர்கள் வேறு யாரோ அல்லர்; நம்மில் ஒருவர் - நம்மைப் போன்ற பின்னணியிலேயே பிறந்து வளர்ந்து சாதித்திருப்பவர்கள். அவர்களின் சாதனைக் கதைகளைக் கேட்கும் போது நா...

என் மதுரை உறவினர்களுக்கு...

படம்
மதுரையைத் தம் தாய் மண்ணாக்கிக் கொண்டு வாழும் என் அன்பு உறவினர் அனைவருக்கும் உங்களில் ஒருவன் - உங்கள் அன்பு உறவினன் எழுதிக் கொள்வது. எப்போதும் போலவே, என் பேச்சுக்கள் உங்களுக்கு எரிச்சலை ஊட்ட வாய்ப்புள்ளது; நான் சொல்ல முனைவதை உங்களுக்குச் சரியாகச் சொல்லிப் புரிய வைக்க முடியுமா என்ற சந்தேகமும் அப்படியே உள்ளது. இப்போதைய சூழலில் ஒருவேளை எடுபடலாம் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஏதாவது அர்த்தமிருப்பதாகத் தெரிந்தால், தொடர்ந்து படியுங்கள், இல்லையேல், எப்போதும் போலவே, "போடா, நீயும் உன் புண்ணாக்கு எழுத்தும்!" என்று புறந்தள்ளி விட்டு அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள். "ஆக வேண்டிய வேலை என்றால்? என்ன வேலையெல்லாம் பார்க்கச் சொல்கிறாய்? கொழுப்புக் கூடி விட்டதா?" என்று கோபம் கொள்ள வேண்டாம். நான் சொல்ல வந்தது... வட்டி வசூலிக்கப் போவதோ, வாய்தாப் போடப் போவதோ, அடுத்த தலைவனை அடையாளம் கண்டு அடியாள் வேலைக்குப் போவதோ, சினிமாத் தியேட்டரில் கலாட்டா செய்யப் போவதோ, புதிதாய் ஒரு சாதிக் கலவரத்துக்குத் திட்டம் தீட்டப் போவதோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது உங்கள் ...