இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அடுத்து...

எல்லாம் முடிந்த பின்பு என்ன நடக்கும்? மண்ணின் மைந்தர்கள் எல்லோரும் கூடி கொரோனுவுக்கு ஒரு பாராட்டு விழா எடுக்கலாம் மில்லியன் வருடங்களாகத் தம் மண்ணையும் மற்ற குடியினங்களையும் மனச்சாட்சியில்லாமல் அழித்தொழித்த அரக்கர்களை இதுவரை எது எதுவோ யார் யாரோவெல்லாம் அழிக்க முயன்று முடியாமல் போய் அவர்களுக்குள்ளாகவே அடித்துக்கொண்டு சாவார்களென்றும் ஆசைப்பட்டுக் காத்திருந்து அதுவும் நடக்காமல் போய் இந்தக் கொடுமைக்கெல்லாம் ஒரு முடிவே இல்லையா கடவுளே என்று எல்லோரும் வெதும்பிக் கிடந்த வேளையில் வாராது வந்த மாமணியாய் வந்திறங்கி அழித்தொழித்த கிருமியாருக்கு அது கூடச் செய்யவில்லையென்றால் எப்படி? சிலர் செய்த சேட்டைகளுக்கு பிஞ்சுக் குழந்தைகள் உட்பட அவர்களில் எல்லோரையும் கொன்று குவித்தது எப்படிச் சரியாகும் என்று அவர்களின் ஐ. நா. மன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டு போர்க் குற்றங்கள் மீதான நேர்மையான விசாரணை ஒன்று நடந்தேறலாம் வெறுப்பு தலைக்கேறி கிருமிகளுக்குரிய அடிப்படை அறங்கூட இல்லாமல் இப்படி மனிதத்தனமாக நடந்துகொண்டுவிட்டோமே என்று அவர்களில் பலர் போருக்குப் பிந்தைய மன உளைச்சலில் தற்கொலை

கொரோனா: முடிவு தெரியாத போரின் தொடக்கம்

புதிய கொரோனா நோய்க்கிருமி சீனாவின் உஹான் நகரத்திலிருந்து புறப்பட்டு உலகையே உலுக்கிக்கொண்டிருக்கிறது. அதைவிடப் பற்பல மடங்கு வேகமாக அது பற்றிய புரளிகள் பரவிக்கொண்டிருக்கின்றன. இது போன்ற கொள்ளை நோய்கள் என்று மட்டுமில்லை, பரபரப்பாக நடப்புச் செய்திகளில் எதுவெல்லாம் புழக்கத்தில் இருக்கிறதோ அது பற்றி அலசி ஆராயும் அந்தந்தத் துறையின் வல்லுனர்களும் அந்தந்தப் பருவத்திற்கு ஏற்ப வல்லுனராகிக் கொள்கிறவர்களும் ஈசல் போலப் புறப்பட்டு வருவது நாம் அன்றாடம் காண்பதுதான். இதெல்லாம் செய்தால் அல்லது செய்யாவிட்டால் நோய் வேகமாகப் பரவும், இதெல்லாம் செய்தால் அல்லது செய்யாவிட்டால் அப்படி வேகமாகப் பரவுவதைத் தடுக்கலாம் என்பது போன்ற மருத்துவக் குறிப்புகளும் நோய்த் தடுப்பு ஆலோசனைகளும் நோயைவிட வேகமாகப் பரவுவது நோயைக் கட்டுப்படுத்துவதற்கு நல்லதுதான். அத்தோடு சேர்ந்து பல புரளிகளும் பரவுவதும் எவையெல்லாம் புரளிகள் என்று விளக்கங்கள் வலம் வருவதும் இயல்பானதுதான். அதுவே வாட்சாப் வந்த பிறகு ஒவ்வொரு மனிதனும் நூறு வாய்களும் இருநூறு காதுகளும் கொண்டவனாக மாறிவிட்டது போல் ஆகிவிட்டது. இது ஒருபுறம் என்றால், இப்படியான நடப்புச் செய்தி ஒவ