இடுகைகள்

பிப்ரவரி, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறில் நெடில்

நி குறில் நீ நெடில் நீதி குறில் நிதி நெடில்

நீயின்றி

நீயில்லாத உன் வீடும் தெருவும் எப்போதும் போலவேதான் இயங்கிக் கொண்டிருக்கின்றன எனக்குத்தான் அவற்றைக் கடக்கும்போதெல்லாம் பாழடைந்த பழைய பங்களா போலவும் அணுகுண்டு வீச்சில் அழிந்த பொட்டல் போலவும் ஒரே பிரம்மையாக இருக்கிறது.

அவளும் நானும்

எல்லாரும் #அவளும் #நானும்-னு எழுதித் தள்ளுறாங்க. நம்மளும் நாலு வரி எழுதிப் போடுவோம். இல்லன்னா சாமிக் குத்தம் ஆயிப்பூடும். அவளும் நானும்... ம், சொல்லுய்யா... அவளும் நீயும்??? சொல்லு... எவளும் நீயும்??? அவளும் நானும்... தம்பி, அந்த வெளக்கமாத்த எடு... ஆம்பள பத்து மணி வரைக்கும் படுக்கைய விட்டு எந்திரிக்காம... என்ன பொலப்பம் வேண்டிக் கெடக்கு?! அவளும் நானும்... சின்ன வயதில் அம்மா-அப்பா விளையாடிய அவளும் நானும்... ஆசைப்பட்டபடியே அம்மா-அப்பாவாகவும் செய்தோம் வெவ்வேறு குழந்தைகளுக்கு! அவளும் நானும்... அஞ்சாம் வகுப்பிலிருந்தே ஒரே வகுப்புதான் அவளும் நன்றாகப் படித்தாள் நானும் நன்றாகப் படித்தேன் அவளுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்தது எனக்கு நல்ல பெண் கிடைத்தது அம்புட்டுத்தேன்! அவளும் நானும்... அடிக்கடி நகைத்துக் கொள்வோம் எனக்கு அவளைக் காணும் போதெல்லாம் மகிழ்ச்சி அவளுக்கு என்னைக் காணும் போதெல்லாம் நகைச்சுவை அவளும் நானும்... பெரும் ஏமாற்றுக்காரர்கள் அவளுக்கு என்னை ஏமாற்றுவதில் அம்புட்டு இன்பம் எனக்கு நானே அதைச் செய்து கொள்வதில் அதனினும் இன்பம்! இனிமே கேப்பிங்க? :D

கோபம்

என் கோபமெல்லாம் என் மீதுதான் உன் மீதான கோபத்தை ஒரு நாளும் ஒரு நாளுக்கு மேல் நீட்டிக்க முடியவில்லையே என்று