இடுகைகள்

மார்ச், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இதழியள்

  “ஐயோஓஓஓ! கடவுளேஏஏஏ! ஆஆஆ… என்னை விட்டுவிடு. ப்ளீஸ்ஸ்ஸ். நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். ப்ளீஸ்ஸ்ஸ். என்னை விட்டுவிடு.” வெள்ளைச்சட்டைக்காரன் கையெடுத்துக் கும்பிடுகிறான். கதறுகிறான். கெஞ்சுகிறான். ஆசிய முகம் போல் இருக்கிறது. அதனால்தான் கும்பிடுகிறான். குத்துபவன் நிறுத்துவதாக இல்லை. திரும்பத் திரும்பச் சதக் சதக் என்று குத்துகிறான். சகிக்க முடியவில்லை. மிருகம் போலக் குத்துகிறான். மிருகத்தை எதற்குக் கேவலப்படுத்த வேண்டும்! எந்த மிருகம் இப்படித் தன் இனத்து மிருகத்தையே கத்தியால் குத்துகிறது! ஐயோ எனக்குத் தலை சுற்றுகிறதே! பளிச் என்று வெள்ளைச்சட்டை வேறு போட்டிருக்கிறான். பளிச் வெள்ளையில் பளிச் சிவப்பு… பார்க்கவே கொடுமையாக இருக்கிறதே! நல்ல வேளையாகப் பாதியிலேயே ஒலி அணைக்கப்பட்டது. காட்சி மட்டுமே. மார்க் ஒரு சொடுக்குச் சொடுக்கி அந்தக் காணொளியை நிறுத்தினான். நான் வகுப்பறையில் இருக்கும் பெரிய திரைக்கு ஓரத்தில் நிற்கிறேன். “இதை அனுமதிக்கலாமா? கூடாதா?” இப்படிக் காணொளிகளை நிறுத்துவதையும் அடுத்து திரைக்கு ஓரத்தில் நிற்பவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதையும் ஓர் இயந்திரம் போலப் பழகியிருக்கிறான். எத்தனை ஆண்ட