இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 6/6

படம்
தொடர்ச்சி... "பதிமூனில் ஒண்ணு" கதையில் பள்ளியில் இடம் வேண்டிக் காத்திருக்கும் மாணவர்கள் பற்றியும், நல்ல ரிசல்ட் காட்ட வேண்டும் என்று மாணவர்களைச் சல்லடை போட்டு வடிகட்டிக் கொடுமை செய்யும் பள்ளிகள் பற்றியும் பேசப்படுகிறது. எப்படியும் இடம் பெற்று விட வேண்டும் என்று கெஞ்சிக் கூத்தாடி, காத்துக் கிடந்து, கடைசியில் சாதித்து விடும் ஒரு மாணவனின் கதை. அப்படி வந்து காத்திருக்கும் பதிமூனு மாணவர்களில் பனிரெண்டு பேர், வாழ்க்கையை வெறுத்து, நம்பிக்கை இழந்து, மறுநாள் வராததால், நம்ம நாயகனுக்கு இடம் கிடைத்து விடும். ஆனால், அந்த ஒருநாட் கூத்தை மட்டும் பேசுவதில்லை கதை. கிட்டத்தட்ட அவனுடைய பள்ளி வாழ்க்கையே அலசி ஆராயப்படுகிறது. அது அவனுடைய கதை மட்டுமல்ல. தமிழ் நாட்டில் உள்ள முக்கால்வாசிப் பள்ளிப் பையன்களின் கதை. ரிசல்ட் பைத்தியம் பிடித்த பள்ளிகளின் - அவற்றின் நிர்வாகத்தின் - தலைமையாசிரியர்களின் - ஆசிரியர்களின் - பெற்றோர்களின் கதை! மற்ற எல்லாப் பாடங்களிலும் குட்டிக் கரணம் போட்டுத் தப்பி விடுபவன், சுட்டுப் போட்டாலும் கணக்கும் ஆங்கிலமும் வராது தவிப்பான் பாவம். இந்தக் காம்பினேசன் நிறையப் பேரு

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 5/6

படம்
தொடர்ச்சி... "உபரி" என்ற கதையில் கணக்குத் தெரியாமல் கொஞ்சம் மிஞ்சி விடுகிற பணத்தை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று பலவற்றை நினைத்துக் குழம்புகிறார் நம் கீழ் நடுத்தர வர்க்கத்துக் கதை நாயகர். தான் நீண்ட காலமாக ஆசைப் பட்டுச் செய்ய முடியாமல் போன பல செலவுகள் பற்றி யோசிக்கிறார். ஒவ்வொன்றாக மனதில் வந்து செல்கின்றன. உடல்நலம் குன்றிய மனைவிக்கு மருந்து மாத்திரை வாங்கிக் கொடுக்கலாம் என்று எண்ணுகிறார். தம் பிள்ளைகள் அதிகம் ஆசைப்படும் தின்பண்டம் ஏதாவது வாங்கிக் கொடுக்கலாம் என்று விரும்புகிறார். அவருடைய மனதில் வந்து செல்லும் ஒவ்வொரு ஆசையும் மிக நியாயமானவை-உணர்வு பூர்வமானவை. நாமெல்லாம் நினைப்பதற்கு முன்பே செலவு செய்து விடக் கூடியவை. அவ்வளவு குழப்பத்தில் குரங்கு போல ஒன்றில் இருந்து ஒன்றாகப் பல ஆசைகளுக்குத் தாவி, இப்படிச் செய்யலாம் என்று ஒரு முடிவுக்கு வரப் போகும் நேரத்தில், நீண்ட காலமாக மாற்றப் படாமல் பிய்ந்து கிடக்கும் பாத்ரூம் வாளியைப் பார்க்கிறார். அதைப் பார்த்துப் பரிதாபப் பட்டு இறுதியில் வாளியையே மாற்றி விடலாம் என்று முடிவு செய்வார். இதுவும், இதற்கு முன்பு வந்த பல கதைகள் போலவே

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 4/6

படம்
தொடர்ச்சி... "அப்பாவின் பிள்ளை" என்கிற கதையும் நம்மில் பலருக்கு எளிதில் சட்டென உரைக்கும் விதமானது. தினமும் வேலைக்குச் சென்று வரும் அப்பா எப்போதும் சிடுமூஞ்சியாகவே இருப்பார். வேலை முடிந்து வீடு திரும்புகையில், இரவில் எப்போதுமே கதவை ஓங்கி ஓங்கித்தான் தட்டுவார். அதனால் அவருடைய மகனான நம் கதைத் தலைவனுக்கு அவரைக் கண்டாலே பிடிக்காது. இப்படியிருக்கையில், இவனும் ஒரு நாள் வேலைக்குப் போக ஆரம்பிப்பான். அப்படி வேலைக்குப் போன முதல் நாளே அவனை நாயாய்ப் படுத்தி, சக்கையாய்ப் பிழிந்து எடுத்து விடுவார்கள். அத்தனை அலைக்கழிப்புகளையும் தாங்கிக் கொண்டு வீடு திரும்பி, அன்றிரவு இவனும் கதவைத் தட்டும் சூழ்நிலை வரும். இவனும் தனக்குப் பிடிக்காத தந்தை போலவே ஓங்கி ஓங்கிக் கதவைத் தட்டுவான். அப்போதுதான் உணர்வான் - "நம்மளும் அப்பா மாதிரியா அப்ப?" என்று. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறார்கள். அதற்கான நியாயங்களை அவர்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து பார்த்தால் ஒழிய நம்மால் புரிந்து கொள்ள முடியாது என்கிற தத்துவத்தைச் சொல்லாமல் சொல்லும் கதை இது. இன்னொன்று, வேலைக்குச் சென்ற இடத்தில் காட்ட முடியாத கோபத்

பாரதியார் கட்டுரைகள் - 3/N

படம்
தொடர்ச்சி... "கவனி! நல்ல பச்சைத் தமிழில் சொல்லுகிறேன்; ஆணாகிய நீ கும்பிடுகிற தெய்வங்களில் பெண் தெய்வம் எல்லாம், உன் தாய், மனைவி, சகோதரி, மகள் முதலிய பெண்களினிடத்தே வெளிப்படாமல் இதுவரை மறைந்து நிற்கும் பராசக்தியின் மகிமையைக் குறிப்பிடுகின்றன. அம்மன் தாய். அவளைப் போலவே நம்முடைய பெண்கள், மனைவி, சகோதரி, மாதா முதலியோர் ஒளி வீச நாம் பார்க்க வேண்டும் என்பது குறிப்பு" என்கிறார் ஓரிடத்தில். அப்படியானால், அவருக்கே தெரிந்திருந்திருக்கிறது, அவர் முழுமையாகப் பச்சைத் தமிழில் சொல்லவில்லை எல்லாத்தையும் என்பது! பெண் தெய்வம் என்பதே நம்மைச் சுற்றியுள்ள பெண்களை மதிப்பதற்காக அமைத்துக் கொடுக்கப் பட்டது என்கிற விளக்கம் நன்றாக இருக்கிறது. அதையெல்லாம் எவ்வளவு கடைப் பிடிக்கிறோம் என்பது வேறு கதை. அப்படியாவது சாமிப் பெயரைச் சொல்லிப் பயமுறுத்தினால்தான் நம்ம பயல்கள் வழிக்கு வருவார்கள் என்றும் யோசித்துச் சொன்னாரா என்றும் தெரியவில்லை. எது எப்படியிருப்பினும் பெண்ணுரிமைக்கு உண்மையான தொண்டாற்ற முயற்சித்திருக்கிறார் என்பது மட்டும் திண்ணம். "சிவன் நீ; சக்தி உன் மனைவி. விஷ்ணு நீ; லக்ஷ்மி உன் மனைவி.

தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 3/6

படம்
தொடர்ச்சி... மீடியம் என்ற கதை, கீழ்நடுத்தர வர்க்கத்து மனிதர்களின் பொருளியற் சிக்கல்களைச் சிறப்பாகச் சொல்கிறது. விபரம் தெரிந்த காலத்தில் இருந்து அண்டர்வேர் அணிந்து கொண்டிருந்த ஆள், குற்றாலம் போகையில் எல்லோரும் பார்த்துச் சிரிப்பதால், அவமானப் பட்டு தானும் நவ நாகரிக சமூகத்தின் ஒரு பங்காகி விட வேண்டும் என்று விரும்பி ஒரு ஜட்டி வாங்குகிறார். இன்னொரு ஜட்டி வாங்கக் காசு இல்லாமல் ஒரே ஜட்டியைத் தினமும் போடுகிறார். கொஞ்ச காலம் போனதும், அவருடைய வண்டவாளம் வெளியே தெரிய ஆரம்பித்து விடுகிறது. பிடுங்கி எடுக்கும் நாற்றத்தால் புதியதோர் அவமானத்துக்கு உள்ளாகிறார். அதிலிருந்து தப்பிப்பதற்காக, பிச்சை எடுக்காத குறையாக நண்பர் ஒருவரிடம் கடன் வாங்கிக் கொண்டு மாற்று ஜட்டி வாங்கப் போகிறார். போகிற இடத்தில் அவர் வைத்திருக்கும் காசுக்கு ஜட்டி இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். அதை விடக் குறைந்த விலைக்கு ஏதாவது கிடைக்குமா என்பதை மிக நாகரிகமாக, "மீடியம் ரேட்டில் ஏதாவது இல்லையா?" என்பார். இருப்பதிலேயே குறைந்த விலை ஜட்டியை எடுத்துப் போட்ட கடைக்காரன் தன்னைப் பார்த்து ஏளனப் பார்வை பார்க்கிறானோ என்று அங்கும்

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 5/7

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும் வியப்புகள்... குடியேற்றம் (IMMIGRATION) தொடர்பான குற்றங்களைப் பொறுத்துக் கொள்வதே இல்லை என்பது போல், குடியேறுபவர்களை வரவேற்று உபசரிப்பதிலும் சிங்கப்பூருக்கு இணை சிங்கப்பூரே. மனிதவளத் துறையின் அலுவலகத்துக்கு பணி அனுமதி (EMPLOYMENT PASS) வாங்கச் செல்லும் போது ஒரு விருந்தினருக்குக் கொடுக்கும் உபசரிப்பில் எந்தக் குறையும் இல்லாமல் கொடுப்பார்கள். பெரும்பாலான நாடுகளில் விசா வழங்கும் இடத்தில் - குறிப்பாக இந்தியர்களுக்கு - மூன்றாம் தர மரியாதைதான். அது போன்ற நடத்தையை சிங்கப்பூரில் யாரிடமும் காட்ட மாட்டார்கள். சரியாகக் கு

பாரதியார் கட்டுரைகள் - 2/N

படம்
தொடர்ச்சி... யாரைத் தொழுவது? என்ற கட்டுரைதான் நூலின் முதற் கட்டுரை. கடவுள் வாழ்த்து போல ஆரம்பிக்கும் அக்கட்டுரையில், "சிவனுக்கும் பார்வதிக்கும் விவாகம் நடந்தபோது, முதலாவது கணபதிக்குப் பூஜை நடந்ததாக வேதம் சொல்லுகிறது" என்கிற வியப்பூட்டும் தகவல் ஒன்று வருகிறது. வேதம் தெரியாததால் அப்படி வியப்பாக இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஆனால், பாரதி வேதங்களை எந்த அளவுக்குக் கற்றுத் தேர்ந்திருந்தார் என்பது நன்றாகப் புரிகிறது. அவரை மிகவும் பிடித்த சிலரால் கூட அவர் மீது வைக்கப் படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று, அவரும் ஓர் இந்துத்துவர் என்பது. அதற்கான முக்கியக் காரணம், அவர் வேதம் படித்தார், கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தார், இந்து மதக் கோட்பாடுகளில் ஈடுபாடு கொண்டிருந்தார் போன்றவை. ஒவ்வொரு காலகட்டத்துக்கும் என்று மாறிக் கொண்டே இருக்கும் வரையறைகள் இருக்கின்றன. ஒருவன் ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராகப் பேசும் போது அவன் எல்லா விதத்திலும் நூறு விழுக்காடு முழுமையான புரட்சியாளனாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பதன் மூலம் வரும் பிரச்சனை அது. ஒடுக்கப் பட்ட மக்களுக்காகப் பேசுவதையும் இந்து மதத்தின் மீது ஈ

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் - 1/N

படம்
இன்றைய தலைமுறைக்கு, வாசிக்க அளவிலாத நூல்கள் இருக்கின்றன தமிழில். எழுதுவதற்கு எண்ணிலடங்காத எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். புதிதாக வாசிக்கத் துவங்கும் எவருக்கும் எதில் இருந்து ஆரம்பிப்பது என்பது பெரும் குழப்பம்தான். எல்லாத் தலைமுறையையும் சேர்ந்த எல்லா எழுத்தாளர்களும் கவிஞர்களும் சொல்லும் மூன்று - திருக்குறள், கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம். "யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணும் பிறந்ததில்லை" என்று அதைத்தானே பாரதியும் சொல்கிறார். இவை மூன்றும் ஒவ்வொரு வேறுபட்ட வகை இலக்கியம். திருக்குறள் புனைவற்ற இலக்கியம் (NON-FICTION). கம்பராமாயணம் வேற்று மொழியில் எழுதப் பட்ட ஒன்றின் தழுவல். கிட்டத்தட்ட மொழிபெயர்ப்பு போன்றது. சிலப்பதிகாரம் தமிழிலேயே எழுதப்பட்ட முழுமையான புனைவிலக்கியம் (FICTION). ஆக, தமிழில் எழுதப் பட்ட தலைசிறந்த புனைவிலக்கியம் என்று சொல்லத் தக்க ஒன்று இதுதான். மொத்த இந்தியாவுக்கு இராமாயணம்-மகாபாரதம் எவ்வளவு பெரிய காப்பியங்களோ அந்த அளவுக்கு சிலப்பதிகாரம் தமிழகத்துக்கு முக்கியம். இந்தியர் நாம் இராமாயணம்-மகாபாரதத்தை தொலைக்காட்சித்

ஜெயகாந்தனின் 'ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்' - 4/4

படம்
தொடர்ச்சி... வக்கீல் ராகவன் பாத்திரம் சூப்பராக இருக்கிறது. பெரும் திறமைசாலியாகவும் அறிவாளியாகவும்  இருப்பான். ரங்கா அவன் பற்றிச் சொன்னதும் 'ஐயரா?' என்று கல்யாணி கேட்பதுதான், கதையில் வரும் கதைக்குச் சம்பந்தமில்லாத கேள்விகளிலேயே முக்கியமான கேள்வி என்று நினைக்கிறேன். சரியோ தவறோ, ஒருத்தன் இப்படி என்று சொன்னதும் அவன் இன்ன ஆளா என்று கேட்பதுதானே நம் பரம்பரைப் பழக்கம்!? ராகவன் பற்றிய இளமைக் காலக் கதை அருமையாக இருக்கும். இந்த நாவல் படிக்கிற அளவுக்குப் படித்த முக்கால்வாசித் தமிழ் இளைஞர்கள் அது போன்றதொரு வாழ்க்கையைக் கனவு கண்டிருப்போம். அது பெரும்பாலும் ஐயர் பையன்களுக்கு மட்டும்தான் நனவு என்கிற நிலைக்குச் சென்றிருக்கும். மற்றவர்களுக்கெல்லாம் இளமைக் காலக் கனவாகவே இருந்து விடும். அல்லது பிள்ளைகளுக்கான பிளான் ஆகி விடும். "எந்த விஷயத்தையும் - எல்லா விஷயத்துக்குமே ஒரு ஆழமிருக்குமில்லையா? அந்த ஆழத்தோடதான் பேசுவான்..." என்கிற அவன் பற்றிய அறிமுகம் ஜெயகாந்தன் பற்றியது போலவும் இருக்கும். பெரிய வக்கீல் என்று சொல்லி அழைத்துச் செல்வான். நேரில் போய்ப் பார்த்தால் பங்கரை போல் இருப்பான். சிக