இடுகைகள்

தமிழ்நாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கர்ணன் பேசும் அரசியல்

மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ பெரிதளவில் பேசப்பட்டாலும் எல்லோரும் சொன்னதைப் போல் மனதைக் குத்திக் குடையவில்லை. அதைவிட வெற்றிமாறனின் ‘அசுரன்’ கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது வந்திருக்கும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’, ‘பரியேறும் பெருமாளை’ விடப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. முதலில் இலக்கியங்கள் எந்தப் பாதையில் செல்கின்றனவோ அதே பாதையை அடுத்துத் திரைத்துறை பின்பற்றும். அழகியல் என்ற பெயரில் தஞ்சாவூரின் வாழ்க்கையையும் சென்னையில் வாழ்க்கையையும் மட்டும் பேசிய இலக்கியங்கள் பின்னர்தான் பாண்டிய நாட்டின் - கரிசல் பூமியின் பக்கமெல்லாம் வந்தன. உயர் - ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையை மட்டும் பேசிய இலக்கியங்கள் அடுத்து நடுத்தர - போலி ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையைப் பேசின. பின்னர்தான் அடித்தட்டு - ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் வந்தன. அதற்குப் பின்னால் உயர் - ஆதிக்க வர்க்கத்தின், நடுத்தர - போலி ஆதிக்க வர்க்கத்தின் படைப்பாளிகளும் இருந்தார்கள். அந்த வாழ்க்கையைப் பட்டு உணர்ந்த அடித்தட்டு - ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வெளிவந்த படைப்பாளிகளும் இருந்தனர். “என் வலியை உணர்ந்து அதை...

ஸ்டெர்லைட்-கோவிட் அரசியல்: ஐயங்கள்

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படப் போகிறது. நான்கு மாதங்களுக்கு மட்டும், அதுவும் ஆக்சிஜன் கிடைக்காமல் செத்து விழும் கோவிட் நோயாளிகளைக் காக்கும் பொருட்டு, ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் என்று தொடங்கியிருக்கிறார்கள். இது இப்படியே முடியுமா என்றால், அதற்கான விடை நம் எல்லோருக்குமே தெரியும். இது எதில் போய் முடியும் என்பதும் நமக்குத் தெரியும். இப்போதைய கோவிட் நோயின் பரவல் வேகத்தையும் கொடூரத்தையும் வைத்துப் பார்த்தால், இந்தியா இதைவிட்டு முழுமையாக வெளியே வர இன்னும் ஓர் ஆண்டாவது ஆகும் போலத் தெரிகிறது. நோம் சோம்ஸ்கியின் சொற்களில் சொல்வதானால், ஒரு கோமாளியின் கையில் சிக்கிச் சீரழிந்துகொண்டிருந்த அமெரிக்கா இப்போது வெகுவேகமாக அந்தக் கொடுங்கனவிலிருந்து மீண்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது. அது போலவே சென்ற ஆண்டில் கோவிட் வரைபடங்களில் முன்னணியில் இருந்த மற்ற பல நாடுகளும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன. “பிறப்பிலேயே எதிர்ப்பு சக்தியோடு பிறந்தவர்கள், எங்களை எந்தக் கிருமியும் நெருங்க முடியாது” என்று சொல்லிக்கொண்டு திரிந்தோம். நம் கேடு கெட்ட அரசியலும் அடிப்படை அறிவற்ற நம்பிக்கைகளும் சேர்ந்து விளையாண்ட வி...

இந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்

கடந்த இருபது ஆண்டுகளில் ஐந்து முறை இழுத்து மூடப்பட்ட பின்னும் தொடரும் ஸ்டெர்லைட் காப்பரின் உய்வு, இந்தியாவின் நெளிவுசுளிவான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு நிறையக் கடன்பட்டிருக்கிறது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டுள்ளது. இப்போதைக்கு. எதிர்பார்த்தபடியே, ஒரு மாசுபடுத்தும் தொழிலுக்கு எதிரான 23 ஆண்டு காலப் போராட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர், அது ஒரு மாபெரும் மனித விலை கொடுத்துப் பெறப்பட்டது என்றாலும் கூட. ஆனால் தமிழகத்தின் இந்தக் கடற்கரை நகரத்தில் ஓர் அமைதியான கலக்கம் இருக்கிறது. இத்தோடு போராட்டத்தை நிறுத்திவிட வேண்டுமோ என்று ஓர் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. 13 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்ட மே 22 காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் அம்மக்களிடம் பேசிப் பார்க்கும் போது அந்த உணர்வு நன்றாகப் புலப்படுகிறது. அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா லிமிடெடுக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய தாமிர உற்பத்தி நிறுவனமான இந்த ஆலையை மூடக்கோரி, சுமார் 15,000 மக்கள் தெருக்களுக்கு வந்திருந்தனர். தாமிர உருக்கு எ...

கலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும்

கலைஞர் கருணாநிதி - நல்லவை மட்டும் கடந்த ஜூன் மாத இதழைக் கலைஞர் சிறப்பிதழாகக் கொண்டு வந்த இதழ் ஒன்றுக்கு அவரைப் பற்றிய நல்லவைகளைப் பற்றி மட்டுமே எழுதுமாறு ஒரு கோரிக்கை வந்தது. அது நமக்கு அவ்வளவு எளிதில்லை. மூச்சுப் பிடித்து முக்கித் தக்கி எழுதி அனுப்பியதையும், "இதுதான் ஒங்க ஊர்ல நல்லபடியா எழுதுறதா?" என்று கேட்டு ஒதுக்கிவைத்துவிட்டார்கள். இயல்பிலேயே திராவிட அரசியல் மீது பெரிதாக ஈர்ப்பு இல்லை என்றபோதும், கண்ணை மூடிக்கொண்டு அவர்களை நிராகரிப்பதையும் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. எல்லோருக்கும் தன் பக்க நியாயத்தை எடுத்துவைக்க சட்டம் இடம் கொடுப்பது போல், அரசியலிலுமே கூட அதைச் செய்ய வேண்டியிருக்கிறது. குறைந்தபட்சம் இன்று போன்ற ஒரு நாளில். * கருணாநிதி என்றால் இப்படித்தான் என்று நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிம்பம் இருக்கிறது. இன்றைய இளைஞர்கள் மத்தியில் அது பெரும்பாலும் மிகவும் எதிர்மறையானதாகவே இருக்கிறது. அவர்கள் பார்த்ததை வைத்து அவர்கள் சில முடிவுகளுக்கு வந்திருக்கிறார்கள். அதில் தவறும் இல்லை. ஈழப் போரின் போது அவரின் செயல்பாடுகள், ஒவ்வொருவராகக் குடும்ப உறுப்பினர்களை உள்ளே கொண்டுவந்து கட...

மனிதனுக்கு அஞ்சலி

“நினைத்த போதெல்லாம் வருவதல்ல கவிதை; மனம் கனத்த போது வருவதுதான் கவிதை” என்ற மிகச் சிறிய வயதிலேயே படித்துப் பதிந்த வரி ஒன்று இன்று பயன்பாட்டுக்கு வருகிறது. அப்படியொன்றும் கவிதை கொட்டவில்லை இப்போது. ஆனாலும் ஞாநியின் மரணம் பற்றிக் கேள்விப்பட்ட காலை முதல் மனம் கனத்துப் போய்க் கிடக்கிறது. அவ்வப்போது முகநூல் வரவைக் குறைத்துக் கொள்ள முயன்று மீண்டும் மீண்டும் தோற்கும் பாவப்பட்ட பிறவிகளில் ஒருவன்தான் நானும். இப்படி ஏதாவது ஒன்று நடந்து விடுகிற போது நோன்பு கலைந்து குதித்து விட நேரிடுகிறது. கல்லூரிக் காலங்களில் வாராவாரம் விடாமல் தினமணிக் கதிர் படிக்கிற பழக்கம் இருந்தது. கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், கேலிச்சித்திரம் என்று ஒவ்வொன்றும் ஒரு வகையில் மனதைப் பிழியும். அதில் ‘ மனிதன் பதில்கள் ’ என்றொரு கேள்வி-பதில் பகுதியும் உண்டு. அது மனதுக்கு மிகப் பிடித்த பகுதி. கேள்வி-பதில்கள் என்று வண்டி வண்டியாகக் குப்பைகளைக் கொட்டிக் கொண்டிருந்த இதழ்களுக்கு நடுவில் இப்படியும் நெற்றிப்பொட்டில் அடித்த மாதிரிப் பதில் சொல்ல முடியுமா என்று பெரும் வியப்பாக இருக்கும். இப்படியும் ஒரு மனிதன் இருக்கிறானா என்று திக...