இடுகைகள்

செப்டம்பர், 2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வம்ச அரசியல் மோகம் (TRYST WITH THE DYNASTY)

படம்
முன் குறிப்பு: ஈழப் பிரச்சனையையும் அதில் காங்கிரசின் நிலைப்பாட்டையும் பற்றிய கோபங்களை மட்டும் சிறிது நேரம் ஒதுக்கி வைத்து விட்டு இதைப் படியுங்கள். அந்த கோபங்கள் அனைத்தும் எனக்கும் அப்படியே உண்டு. ஆனாலும், நாமெல்லாம் இப்போதைக்கு இந்த நாட்டின் ஓர் அங்கமாக இருப்பதால், அதற்கு அப்பாற்பட்டும் இந்திய அரசியல் பற்றிப் பேச வேண்டியுள்ளது என்பதும் காலத்தின் கட்டாயம். 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் பதினைந்தாம் நாள் விடியலுக்கு முந்தைய இரவில் பேரறிஞர் (இந்த அடைமொழி அண்ணாவுக்கு மட்டுமே சொந்தம் எனப் பிடிவாதமாய் இருக்கும் தம்பி அல்ல நான்!) நேரு ஆற்றிய உரையின் பெயர் "TRYST WITH THE DESTINY". அதாவது, கிட்டத் தட்ட "விதியோடு உல்லாசம் / விளையாட்டு" என்று பொருள் படும் என வைத்துக் கொள்ளலாம். அதையே சிறிது சுளுக்கினால் TRYST WITH DYNASTY என்றாகிறது. அதன் பொருளோ "வம்ச அரசியலோடு உல்லாசம் / விளையாட்டு" என்றாகிறது. அதையே இன்னும் கொஞ்சம் சுளுக்கி "வம்ச அரசியல் மோகம்" என்றாக்கி விடுவோம் தமிழில். மோகம்தானே உல்லாசங்களின் மூலம். இதுவரை இந்த நாட்டை ஆண்டோரிலேயே அதிகம் தக

விவாதக்காரத் தமிழர்?!

படம்
நோபல் பரிசு பெற்ற பொருளியல் மேதை அமர்த்யா சென் அவர்களின் ஆங்கில நூல் “THE ARGUMENTATIVE INDIAN” வாசித்துக் கொண்டிருக்கிறேன். தமிழில் நேரடியாக மொழி பெயர்த்துச் சொல்லவேண்டுமென்றால் “விவாதக்கார இந்தியர்” என்று வரும். பொருளியல் மட்டுமல்ல, அவர் வரலாறு மற்றும் சமூகவியலிலும் கைதேர்ந்தவர்; தாகூருக்கும் சத்யஜித் ரேக்கும் அடுத்தபடியாக வங்க மண்ணில் தோன்றிய தலை சிறந்த அறிவாளி; இந்திய அளவிலும் ஒரு முக்கியமான இடம் கொடுக்கப்பட வேண்டிய அறிவாளர். அவர் சொல்ல வருவது என்னவென்றால் ஒரு ஜனநாயக நாட்டில் விவாதங்கள் மிக முக்கியமானவை. எதைச் சொன்னாலும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமல் அதைக் கடுமையாக விவாதிக்கும் கலாச்சாரம் இந்தியாவில் தொன்று தொட்டே இருந்து வந்திருக்கிறது. அதுதான் இன்று நாம் நல்ல ஜனநாயக நாடாக இருக்க உதவுகிறது என்பது. நூல் முழுக்கவே வங்காள வாடை நிறைய அடிக்கிறது. வங்காளியாகப் பிறந்த ஒருத்தருடைய நூலில் வங்காள வாடை வருவதொன்றும் பெரும் குற்றமில்லை. அது மிக இயல்பானதே. அதற்கு அவர் “The Argumentative Bengali” (விவாதக்கார வங்காளி) என்றே பெயரிட்டிருந்தாலும் அது ஓரளவு ஒத்துத்தான் போயிருக்கும். அதைப் படிக்

அயோத்தி: எங்கே நிற்கிறேன்?

படம்
அயோத்திப் பிரச்சனையைப் பற்றிப் பேச இதை விடச் சிறந்த தருணம் இருக்க முடியாது. கடந்த சில மாதங்களில் எத்தனையோ பெரிதாகச் சொல்ல முடியாத பிரச்சனைகள் பற்றிப் பேச முடிந்த எனக்கு இது போன்றதொரு மிக முக்கியமான பிரச்சனை பற்றிப் பேச நேரம் செலவிடா விட்டால் அது நியாயமாகாது. வேலியின் எந்தப் பக்கம் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து இந்தப் பிரச்சனையின் கட்சிக்காரர்கள் அதை வெவ்வேறு விதமாக அழைப்பதால், நான் அதை அயோத்திப் பிரச்சனை என்றே அழைக்க விரும்புகிறேன். ஒரு சாரார் இராமர் கோயில் பிரச்சனை என்கிறார்கள்; இன்னொரு சாரார் பாபர் மசூதிப் பிரச்சனை என்கிறார்கள். அல்லது, இராமர் கோயில் - பாபர் மசூதிப் பிரச்சனை என்றோ பாபர் மசூதி - இராமர் கோயில்ப் பிரச்சனை என்றோ அவர்களுடைய கருத்தை உலகறியச் செய்யும் படி எது அவர்கள் மனதில் முதலில் வருகிறதோ அதன் படி வரிசையை மாற்றி அழைக்கிறார்கள். சர்ச்சைகளுக்குள் செல்ல எனக்கு விருப்பமில்லை. அதற்குப் பதிலாக, என் சுற்றத்தை மேலும் குழம்பிய நிலையில் விடுவதையே வசதியான வேலையாக நினைக்கிறேன். ஏனென்றால் அதுதான் நம்மை மேலும் தெளிவான நிலைக்கு அழைத்துச் செல்லும் என்பதைத் தீர்க்கமாக நம்புபவன் நான

தமிழன்னா என்ன பருப்பா?!

படம்
எந்த ஒரு பெருங்குழுவிலும் குறிப்பிட்ட சில உட்குழுக்கள் உயர்ந்தவர்களாகக் கருதப் படுவது இயல்பு. உயர்வு தாழ்வு என்பதைத் தவறான நோக்கம் எதுவும் கொண்டு சொல்லவில்லை. அறிவு ரீதியாக, ஆற்றல் ரீதியாக, சராசரி மக்கள் பார்வையில் படுவது பற்றி மட்டுமே பேசுகிறேன். ஏதோ ஒரு நூலில் கண்ணதாசன் கூட அது பற்றி ஏதோ சொல்லியதைப் படித்த நினைவு இருக்கிறது. அவர் சொல்ல முனைந்தது என்னவென்றால், இந்தியாவில் எல்லா இனங்களுமே சிறந்தவைதான் என்றாலும் தமிழர், வங்காளர், மராட்டியர் போன்றோர் இன்னும் சிறந்தோர் என்பது போன்ற ஒரு கருத்து. பின்பொரு நாளில் கர்நாடகத்து ஐயங்கார் பையன் ஒருவன் சொன்னான், “தமிழன், மலையாளி, பஞ்சாபி – இந்த மூவரையும் உலகத்தில் எந்த மூலையில் சென்றாலும் பார்க்கலாம்” என்று. அப்புறம் ஆந்திராவில் இருந்து வந்த ஒருநாள் நண்பர் ஒருவர் சொன்னார், “தமிழர்கள் அறிவாளிகள், கடுமையான உழைப்பாளிகள்” என்று. பின்பொரு காலத்தில், தமிழரையும் பஞ்சாபியையும் பிடிக்காத மலையாளப் பெண்மணி ஒருவர், “அவ்விரு இனங்களுமே ஒரே மாதிரிக் குணம் கொண்டவை; திருடர்கள் – மொள்ளமாறிகள் – சுயநல வாதிகள்; வளர்ச்சிக்காக எதையும் செய்வர்” என்பது போன்று ஒரு கருத்

மோதியும் அவர் அரசியலும்

படம்
கத்லால் இடைத்தேர்தல் வெற்றி மோதி மற்றும் அவருடைய அரசியல் பற்றிய என் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்யப் பணிக்கிறது. இந்திய அரசியலில் அவரை விரும்புவது மனிதாபிமானமற்ற குற்றமாகிவிடும் என்பதை நான் அறிவேன். தீவிரவாதிகளுக்கு எதிரான அவரது இரும்புக் கரம் பாராட்டப்பட வேண்டும். அதே வேளையில், தன் சொந்த 'அப்பாவி' மக்களையே கொடூரமாகக் கொன்று குவிக்க ஒரு முதலமைச்சர் பச்சைக் கொடி காட்டுவது நிச்சயமாக ஒரு மூன்றாம் தரமான வேலை. ஓர் உண்மையான தேசியத் தலைவர் அப்படியொரு வேலையைச் செய்ய முடியாது. ஒரு சனநாயக நாட்டில் அவ்வளவு பெரிய பதவியில் இருந்து கொண்டு ஒரு முதலமைச்சர் எவ்வளவு தரம் தாழ்ந்து போக முடியும் என்பதை நிரூபித்த பெருமை அவரையே சாரும். கோத்ரா ரயிலில் தீயிட்ட கொடூரர்கள் அனைவரையும் பிடித்து ஊடகங்களின் முன்னிலையில் அவர்களை வீதிகளில் தூக்கில் தொங்க விட்டிருந்தால் மகிழ்ந்திருப்பேன். அவர்களுக்கு அத்தகைய தண்டனை தகும். ஆனால், அதைச் செய்தோர் பிறந்த மதத்தில் பிறந்த ஒரே பாவத்துக்காக அம்மதத்தைச் சேர்ந்த அப்பாவிகள் எப்படிப் பொறுப்பாக முடியும்? எந்தத் தண்டனையும் தவறு செய்தவர்களுக்குக் கொடுக்கப் பட வேண்டும்; சாதி

தமிழகத்துப் பெயர்க் கூத்துகள்

படம்
நம்மை வெளியில் கோமாளிகளாக்கக் கூடிய பல குறைபாடுகளில் ஒன்று, நம்முடைய பெயரிடும் முறை. பெயரிடுவது தொடர்பாக பல்வேறு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன நம் ஊரில்.  கண்டிப்பாக ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினருக்கு வைக்கக் கூடிய பெயர் வாயில் நுழையக் கூடாது என்கிற ஒரே கொள்கையோடு பெயர் தேடுபவர்கள் ஒருபுறம். எப்படி வேண்டுமானாலும் ஆரம்பிக்கட்டும், எப்படி வேண்டுமானாலும் முடியட்டும், பெயரின் ஏதாவதொரு பகுதியில் ‘ஷ்’ என்ற வடமொழி எழுத்து மட்டும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொல்லித் தேடுபவர்கள் ஒருபுறம். இன்ன நட்சத்திரத்துக்கு இன்ன எழுத்தில் பெயர் ஆரம்பிக்க வேண்டும் என்று தேடுகிறவர்கள் ஒருபுறம். தனித்தமிழ் பெயர் தேடுபவர்களும் வைக்கப்பட்ட வடமொழிப் பெயர்களைப் பெரும் எண்ணிக்கையில் மாற்றிக் கொண்டிருக்கிறவர்களும் ஒருபுறம்.  சினிமா நடிகர் நடிகைகளின் பெயர்களைத்தான் என் பிள்ளைகளுக்கு வைக்கவேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே மிகவும் தெளிவாக இருக்கிறேன் என்று இருப்பவர்கள் ஒருபுறம். குறிப்பிட்ட சில திரைப்படங்களில் வருகிற கதாபாத்திரங்களின் பெயர்கள்தான் வைக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருப்பவர்கள் ஒருபுறம். அதையே இ

கலாச்சார வியப்புகள்: ஒரு ஸ்பானிய நண்பனுடன் 3 வாரங்கள்!

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! என் மேற்கு நோக்கிய பயணம் பற்றிய கடந்த இடுகையின் தொடர்ச்சி இது. மேற்கு நோக்கிய என் பயணத்தைத் தொடங்குவதற்கு சற்று முன்பு மேற்கத்திய நண்பன் ஒருவனுடன் இந்தியாவிலேயே நிறைய நேரம் செலவிட ஓர் அரும் வாய்ப்புக் கிடைத்தது எனக்கு. என்னுடைய பயணத்துக்கு என்னைத் தயார் செய்து கொள்வதற்கு அது பேருதவியாக இருந்தது. நானும் இந்தியாவின் எல்லா நல்ல விஷயங்களையும் அவனுக்குக் காட்ட விரும்பினேன். ஆனால், அதற்காக அவனை எங்கும் அழைத்துச் செல்ல முடியவில்லை. அதற்குப் பதிலாக, என்னால் அவனுடன் எவ்வளவு நல்ல பிள்ளையாக இருக்க முடியுமோ அவ்வளவு நல்ல பிள்ளைய

ஆதலினால் எழுதித் தள்ளுவீர் உலகத்தீரே!

படம்
எல்லாத் துறைகளிலும் வென்றவர்களும் தோற்றவர்களும் இருக்கிறார்கள். இது தவிர்த்து இன்னொரு பிரிவினரும் இருக்கின்றனர். ஒரு குறிப்பிட்ட துறையில் வெல்வதற்குரிய அனைத்துத் திறமைகளும் தகுதிகளும் இருப்பினும் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாமல் விட்டு விடுவோர். அப்படி விடுவதற்குப் பல காரணங்கள். ஒன்று சோம்பல். இன்னொன்று நேரமின்மை. மற்றொன்று தனக்குள் அப்படியொரு மிருகம் உறங்கிக் கொண்டிருப்பதை உணராமலேயே வாழ்க்கையை ஓட்டிவிடுவது. அப்படிப் போய் விடுவதற்குக் காரணம், அன்றாடப் பிழைப்பைப் பார்ப்பதிலேயே வாழ்க்கை முழுக்கக் கழிந்து விடுவது. பல வளர்ந்த நாடுகளில் உள்ளது போல, நம்ம ஊரில் நம் படிப்பும் நாம் செய்யும் தொழிலும் நம் திறமை மற்றும் ஆர்வத்தை அடிப்படையாக வைத்து முடிவு செய்யப் படுவதில்லை. அதற்குக் காரணம் நம் பொருளாதார சூழ்நிலை. இப்படி முயலாமல் விட்டு விட்ட பலருடைய வெற்றியைத்தான் முயன்று பார்த்து வென்றவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முயலாதது எந்த வகையிலும் முயன்று வென்றவர்களின் வெற்றியைச் சிறுமைப் படுத்தக் கூடாது. அது அவர்கள் முயலாமைக்குக் கொடுத்த விலை. இது இவர்கள் முயன்றதற்குக் கிடைத்த பரிசு.

மேற்கு நோக்கி...

படம்
தாத்தா பொதுவுடைமை இயக்கத்தில் இருந்ததால் மேற்படிப்புக்கு ரஷ்யா அனுப்பி வைக்கப்படுவதாகச் சின்ன வயதில் அதிகம் ஆசை காட்டப்பட்டவன் நான். பொதுவுடைமையாளர்களின் பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் மேற்படிப்புக்கு அதுவும் மருத்துவம் படிக்க ரஷ்யா அனுப்பி வைக்கப்படுவது அப்போது ஒரு சாதாரணம். சோவியத் நாடு சிதறுண்ட நாளில் நான் மிகவும் பெரிதாக எடுத்துக் கொண்டிராத அந்தக் கனவும் தகர்ந்தது. அது நடந்திராவிட்டாலும் இது நடந்திராது என்றே நினைக்கிறேன். ஏனென்றால், எல்லோரும் அதைப் பேச்சுக்குத்தான் பேசினார்கள் என்று எனக்குத் தெரியும். அவ்வளவு பெரிதாக யாரும் முயற்சித்திருக்க மாட்டார்கள். ஆனால், மிகச் சின்ன வயதிலேயே வெளிநாடு பறந்து செல்வது பற்றியும் வெளிநாட்டவரோடு கலந்து வாழ்வது பற்றியும் கனவு காண அது அடித்தளமிட்டது. அது தவிர்த்து, கணிப்பொறியியல் படிக்க முடிவெடுக்கும் வரை அனுதினமும் வெளிநாட்டவரோடு வேலை செய்யும் சூழ்நிலைகள் பற்றி யோசிக்கவே வாய்ப்பிருக்க வில்லை. அதற்குள், கணிப்பொறியியல் படித்த மச்சான் ஒருவர் சாப்ட்வேர் துறைக்குள் வந்து வெளிநாடுகள் பயணப்பட ஆரம்பித்திருந்தார். அதுவே எனக்கும் உலகமெலாம் சுற்றி வரும் கன

காவிரியும் கர்நாடகத் தமிழரும்

படம்
தமிழனாகப் பிறந்து பெங்களூரில் வந்து வாழ்வதில் நிறையப் புதுமையான அனுபவங்கள் கிடைக்கப் பெறுவதுண்டு. பொது இடங்களில் சத்தமாகத் தமிழில் பேசிக்கொண்டிருக்கிற நம்மவர்கள் நிறையப் பேரை இங்கே பார்க்க முடியும். அல்சூர் போன்ற பகுதிகளில் தமிழ்ச் செய்தித் தாட்கள் பரப்பிக் கிடக்கும் கடைகளைப் பார்க்க முடியும். சில இடங்களில் தமிழே உலகின் முதன் மொழி என்று எழுதிப் போட்டிருப்பதைப் பார்க்க முடியும். போகிற இடங்களில் எல்லாம் நாம் தயங்கித் தயங்கிப் பேச ஆரம்பிக்கும் முன், முகத்தை வைத்தே நம்மை அடையாளம் கண்டு கொண்டு அவர்கள் நம் மொழியை மிக அழகாகப் பேசுவது அடிக்கடிப் பார்க்க முடியும். அப்படிப் பட்ட ஓர் உறவுக்கார ஊர் பெங்களூர் நம்மவர்களுக்கு. காவிரிக்கு வெகு தொலைவில் இருக்கிற தென் பாண்டி நாட்டில் பிறந்து விட்டதால் காவிரிக்கும் எனக்கும் ஒரு சொட்டுக் கூட தொடர்பு இருக்கவில்லை. அவர்கள் விட்டாலும் விடா விட்டாலும் அதனால் எந்த இலாபமும் இழப்பும் நேரடியாக அடைந்ததில்லை. ஆனால், தஞ்சையில் இருக்கிற நம் உறவினருக்கு இவர்கள் எப்போதும் நீர் விட மறுப்பவர்கள், நீர் கேட்டால் பெங்களூரில் இருக்கிற உறவினரை அடித்து விரட்டுபவர்கள், இன