இடுகைகள்

மே, 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிற

"கட்டுனா அவளத்தான் கட்டுவேன். இல்லன்னா இப்பிடியே இருந்துட்டுப் போறேன்." "ராசா அப்பிடிப் பேசாத ராசா. உங்கப்பா இதெல்லாம் கேட்டாத் தாங்க மாட்டாரு. நானே மாமாவ விட்டுப் பேசச் சொல்றேன். நானும் உங்கம்மாட்டப் போய்ப் பேசுறேன். ரெண்டு பேர்ல ஒருத்தரு எறங்கி வந்துதானே ஆகணும். ரெண்டு பேரும் நாம் பிடிச்ச மொசலுக்கு மூணு கால்னு நின்னா எப்பிடி?" “நான் என்ன சீமைலயா போய்ப் பொண்ணு கட்டணுங்கறேன்? இந்தாருக்கு மாதலப்புரம். ஒன்ற மைல் தொலவட்டு. அதுக்கு எதுக்கு இம்புட்டு வீம்பு? பாத்துருவமே. நானா அவரான்னு. நாப்பத்தஞ்சு வயசுக் கெழவனுக்கு அம்புட்டு மொரண்டு இருந்தா இருபது வயசு எளவட்டம் எனக்கு எம்புட்டு இருக்கும்? நீங்க ஒன்னும் உங்கொண்ணங்கிட்ட எனக்காகப் பரிஞ்சு பேச வேணாம். நான் பாத்துக்கிறேன் எம் பிரச்சனய.” “இல்ல, ராசா. அவர் என்ன சொல்றாரு? நம்ம ஊர்ல இல்லாத பொண்ணா? நம்ம வம்சத்துலயே அந்தப் பழக்கம் இல்லையே ராசா. உள்ளூர்லயே சாதி மாறிக்கூட சம்பந்தம் செஞ்சிறலாம். ஊரு விட்டு ஊரு போயிச் செய்யிறது சாதாரணப்பட்ட வேலையா? நமக்கும் அவங்களுக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது ராசா. அவங்க பேச்சு, பழக்கவழக்கமே வேற மாதி

கர்ணன் பேசும் அரசியல்

மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ பெரிதளவில் பேசப்பட்டாலும் எல்லோரும் சொன்னதைப் போல் மனதைக் குத்திக் குடையவில்லை. அதைவிட வெற்றிமாறனின் ‘அசுரன்’ கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது வந்திருக்கும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’, ‘பரியேறும் பெருமாளை’ விடப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. முதலில் இலக்கியங்கள் எந்தப் பாதையில் செல்கின்றனவோ அதே பாதையை அடுத்துத் திரைத்துறை பின்பற்றும். அழகியல் என்ற பெயரில் தஞ்சாவூரின் வாழ்க்கையையும் சென்னையில் வாழ்க்கையையும் மட்டும் பேசிய இலக்கியங்கள் பின்னர்தான் பாண்டிய நாட்டின் - கரிசல் பூமியின் பக்கமெல்லாம் வந்தன. உயர் - ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையை மட்டும் பேசிய இலக்கியங்கள் அடுத்து நடுத்தர - போலி ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையைப் பேசின. பின்னர்தான் அடித்தட்டு - ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் வந்தன. அதற்குப் பின்னால் உயர் - ஆதிக்க வர்க்கத்தின், நடுத்தர - போலி ஆதிக்க வர்க்கத்தின் படைப்பாளிகளும் இருந்தார்கள். அந்த வாழ்க்கையைப் பட்டு உணர்ந்த அடித்தட்டு - ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வெளிவந்த படைப்பாளிகளும் இருந்தனர். “என் வலியை உணர்ந்து அதை

ஸ்டெர்லைட்-கோவிட் அரசியல்: ஐயங்கள்

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படப் போகிறது. நான்கு மாதங்களுக்கு மட்டும், அதுவும் ஆக்சிஜன் கிடைக்காமல் செத்து விழும் கோவிட் நோயாளிகளைக் காக்கும் பொருட்டு, ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் என்று தொடங்கியிருக்கிறார்கள். இது இப்படியே முடியுமா என்றால், அதற்கான விடை நம் எல்லோருக்குமே தெரியும். இது எதில் போய் முடியும் என்பதும் நமக்குத் தெரியும். இப்போதைய கோவிட் நோயின் பரவல் வேகத்தையும் கொடூரத்தையும் வைத்துப் பார்த்தால், இந்தியா இதைவிட்டு முழுமையாக வெளியே வர இன்னும் ஓர் ஆண்டாவது ஆகும் போலத் தெரிகிறது. நோம் சோம்ஸ்கியின் சொற்களில் சொல்வதானால், ஒரு கோமாளியின் கையில் சிக்கிச் சீரழிந்துகொண்டிருந்த அமெரிக்கா இப்போது வெகுவேகமாக அந்தக் கொடுங்கனவிலிருந்து மீண்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது. அது போலவே சென்ற ஆண்டில் கோவிட் வரைபடங்களில் முன்னணியில் இருந்த மற்ற பல நாடுகளும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன. “பிறப்பிலேயே எதிர்ப்பு சக்தியோடு பிறந்தவர்கள், எங்களை எந்தக் கிருமியும் நெருங்க முடியாது” என்று சொல்லிக்கொண்டு திரிந்தோம். நம் கேடு கெட்ட அரசியலும் அடிப்படை அறிவற்ற நம்பிக்கைகளும் சேர்ந்து விளையாண்ட வி