இடுகைகள்

செப்டம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 4/9

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... பருவங்கள் குடும்பமும் வந்து விட்டது. குளிரும் ஆரம்பித்து விட்டது. கோடை காலத்தில் காலை நாலரை மணி முதல் இரவு பத்தரை மணி வரை வெளிச்சம் அடித்தது. உச்சகட்டக் குளிரின் போது காலை பதினொரு மணிக்குக் கூட இருட்டியது போலிருக்கும். மாலை நான்கு மணிக்கெல்லாம் மங்கி விடும் மீண்டும். இருளின் தாக்குதலைச் சமாளிக்கத் தயாராகிக் கொண்டிருக்கிறோம். நம்ம ஊரில் ஆறு பருவ காலங்கள் இருப்பது போல, இங்கே நான்கு பருவங்கள் இருக்கின்றன. குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம், கூதிர் காலம் ஆகிய நான்கும்தான் அவை. அனைத்து மேற