இடுகைகள்

ஜனவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

யாதும் ஊரே: அமேரிக்கா 1

இவ்வளவு நாட்களாக பயணக்கட்டுரைகளை 'கலாச்சார வியப்புகள்' என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தேன். அவற்றையெல்லாம் தொகுத்து மின்நூலாகவும் வெளியிட்டாகிவிட்டது. காலம் கடந்து, அந்தப் பெயர் சலித்துப்போய் இருக்கிறது இப்போது. அதனால் இதுமுதல் பயணக்கட்டுரைகளுக்கு 'யாதும் ஊரே' என்று பெயர் மாற்றிக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நூலின் அடுத்த பதிப்புக்கும் இதே பெயரை இட்டுக்கொள்ளலாம் என்றும் எண்ணுகிறேன். எப்படி இருக்கிறது புதிய பெயர்? 'அமெரிக்கா'வை எல்லோரும் சொல்வது போல 'அமெரிக்கா' என்று சொல்லாமல் ஏன் 'அமேரிக்கா' என்று சொல்ல வேண்டும்? உண்மை என்னவென்றால், தமிழில்தான் அப்படி 'அமெரிக்கா' என்று எழுதுகிறோம். எழுதுவது மட்டுமே அப்படி. பேசும்போது கூடப் பெரும்பாலானவர்கள் 'அமேரிக்கா' என்றுதான் சொல்கிறோம். சிறு வயதில் 'அமேரிக்கா' என்று சொல்வது சிறிது பட்டிக்காட்டுத்தனமாக இருக்கிறது என்று எண்ணி, எழுதுவது போலவே 'அமெரிக்கா' என்று கவனமாக மாற்றிச் சொல்லப் பழகிக்கொண்டோம் என்கிற நினைவும் வருகிறது இந்த வேளையில். பின்னர் அதையே 'யூ. எஸ்.' என்