தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - 2/6

தொடர்ச்சி... கவிதை எழுதுவதுதான் உலகிலேயே உன்னதமான தொழில் என்றும் கவிஞர்களிடம்தான் நாட்டைக் கொடுக்க வேண்டும் என்றும் எண்ணித் திரிந்து கொண்டிருந்த இளமைக் காலத்தில், இலக்கியத்தில் இப்படியும் ஒரு வடிவம் இருக்கிறது என்று சிறுகதைகளை அறிமுகம் செய்து வைத்து, அதிலும் ஏதாவது கிறுக்கிப் பார் என்று எனக்கு நினைவு படுத்திய பெருமை கோணங்கியையே சாரும். இதே சொற்களில் இப்படியே சொன்னார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை. அவர் சொல்லாமலே அவரிடம் இருந்து எடுத்துக் கொண்ட விஷயங்கள் பல. அப்படியான ஒன்றுதான் இதுவும். "என்னடா, எங்கயோ வந்து எதையோ பத்திப் பேசுற?" என்று நீங்கள் படும் கோபம் புரிகிறது. பொறுங்கள், அதையெல்லாம் ஏன் பேசுகிறேன் என்று சொல்லி விடுகிறேன். இந்த நூலில் இருக்கும் கதைகளில் ஒன்றில் வரும் பட்டாளத்து மாமா பாத்திரம், பட்டாளத்தில் இருந்த ஒரே காரணத்துக்காகத் தன்னை இம்மானுவேல் சேகரனோடு ஒப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்வது போல, ஒவ்வொரு கதையையும் முடிக்கிற போது நானும் என்னால் முடிந்த ஓர் ஒப்பீட்டைச் செய்து கொண்டே இருந்தேன் தமிழ்ச்செல்வனோடு. அது முற்றிலும் கண்டிக்கத் தக்கது - காவாலித்தனம