இடுகைகள்

ஜூலை, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 9/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும்  வியப்புகள்... அடுத்து என்ன என்று பார்த்தால் உடனடியாக நினைவுக்கு வந்தது - இலண்டன் ப்ரிட்ஜ். நியூ யார்க் என்றால் சுதந்திர தேவி சிலையையும் பாரிஸ் என்றாலே ஈபிள் டவரையும் சிங்கப்பூர் என்றாலே சிங்கத்தின் வாயிலிருந்து அடிக்கும் தண்ணீரையும் டெல்லி என்றாலே இந்தியா கேட்டையும் சென்னை என்றாலே சென்ட்ரல் ஸ்டேசனையும் காட்டுவது போல இலண்டன் என்றாலே காட்டப்படும் முதல் படம் இதுதான். இலண்டன் சென்ற எல்லோருமே புகைப்படம் பிடித்து முகநூலில் (FACEBOOK) போட்டுப் படம் காட்டுவதும் இதை வைத்துத்தான். சுதந்திர தேவி சிலை மற்றும் ஈபிள் டவரைப்

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 8/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும்  வியப்புகள்... சிங்கப்பூர் போலவே ட்யூப் (பாதாள இரயில்) வழித் தடங்கலுக்கு வித விதமான பெயர்களும் நிறங்களும் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் சிங்கப்பூரை விட இரண்டு மடங்கு அதிகமான தடங்களும் பல மடங்கு அதிகமான ட்யூப்களும் இருக்கும் என நினைக்கிறேன். விலாவாரியாகப் புரிந்து கொள்ள கொசக்கொசவெனக் கோடுகள் நிறைந்த ட்யூப் மேப் இருக்கிறது (படம் கீழே). அதற்கொரு வலைத்தளமே வைத்துப் பராமரிக்கிறார்கள். அது GOOGLE  MAPS-ஐ விட நம்பிக்கைக்கு உரியதாக இருக்கிறது. கிளம்பும் இடத்தையும் சேர வேண்டிய இடத்தையும் குறிப்பிட்டு, கிளம்பும் நேரத்தைச்

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 7/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும்  வியப்புகள்... குறுகிய காலம் வெளிநாடு செல்லும் நம்ம ஆட்கள் பெரும்பாலும் கிளம்புவதற்கு முதல் நாள் இங்கேயே முடி வெட்டிக் கொண்டுதான் கிளம்புவார்கள். திரும்ப வந்திறங்கிய முதல் நாளே போய் தன் உள்ளூர்க் கடையில்  வெட்டிக் கொண்டு வருவார்கள். காரணம், அங்கே முடி வெட்டக் காசு அதிகம் ஆகும் என்று சொல்வார்கள். முடி வெட்ட ஐநூறு-ஆயிரம் என்று அதிர்ச்சி அளிக்கும் நம்பர் ஒன்றைச் சொல்வார்கள். அதனால் நானும் கிளம்பும் முன் முடி வெட்டிக் கொண்டு சென்று விட வேண்டும் என்றே திட்டமிட்டிருந்தேன். ஆனால், அதற்கெல்லாம் எங்கே நேரம் கொடுத்தார்க

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 6/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும்  வியப்புகள்... போய் இறங்கிய நாள் முதலே அடுத்த இரண்டு-மூன்று நாட்களில் பனிமழை (SNOW) பெய்யும் என்கிற பேச்சுகள் நிறையக் கேட்க முடிந்தது. எல்லோருமே அது பற்றி ஓர் ஆர்வமாகப் பேசிக் கொண்டார்கள். இரண்டாம் நாளோ மூன்றாம் நாளோ சாலையில் உப்பு போல ஏதோ இருந்தது. முதலில் அதுதான் முந்தைய இரவு பெய்த பனிமழையோ என்றொரு சந்தேகம். பின்னர் அது பனிமழையைச் சமாளிக்கப் போட்ட உப்பு என்று அறிந்து கொண்டேன். அதை சாலை உப்பு (ROAD SALT) அல்லது பனியகற்றும் உப்பு (DEFROSTING SALT) என்றே சொல்கிறார்கள். அடுத்து மற்றொரு மாலைப் பொழுதில் வெள்ளை வெள