இடுகைகள்

நவம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணுக்குத் தெரியாத வேற்றுலகவாசிகள் (Invisible Aliens)

வேற்றுலகவாசிகள் (aliens) பற்றி இந்த உலகத்தில் எவ்வளவோ பேசவும் எழுதவும் பட்டுவிட்டது. நிறைய ஆங்கிலப் படங்களும் வந்திருக்கின்றன. மனிதர்களைப் போலவோ மனிதர்களைவிடவும் ஆற்றல் மிக்கவர்களோ இம்மாம் பெரிய அண்டத்தில் இருந்தே தீர வேண்டும் என்றுதான் நிறைய அறிஞர்கள் சொல்கிறார்கள். அது உண்மையாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. பேரண்டத்தில் நம் பூமி எவ்வளவு சிறியது என்பதை வைத்துப் பார்த்தால், உயிர்கள் வாழும் கோள்கள் சூரிய மண்டலத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் பால் வழியில் இருக்கும் மற்ற சூரிய மண்டலங்களிலோ பேரண்டத்தின் வேறு விண்மீன் மண்டலங்களிலோ நிச்சயமாக உயிரினங்கள் இருக்கத்தான் வேண்டும். அவை மனிதர்களைப் போலவே அல்லது மனிதர்களைவிட ஆற்றல் மிக்கவையா என்பதுதான் தெரியவில்லை. உயிர்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற கணக்கின் படியே மனிதர்களை விடவும் ஆற்றல் மிக்க உயிர்கள் இருக்கவும் வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லலாம். மனிதர்களை விடவும் ஆற்றல் மிக்க உயிர்கள் மனிதர்கள் அடையும் தொலைவில் இல்லை என்று ஓரளவு நம்பிக்கையோடு சொல்லலாம். ஏனென்றால், மனிதர்களை விடவும் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தால் இந்நேரம் அவர்கள் நம்மை அட