இடுகைகள்

2010 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாதக்கார இந்தியன் (THE ARGUMENTATIVE INDIAN)

அமர்த்தியா சென் நடப்புச் செய்திகளில் அதிகம் இருந்த காலம் ஒன்று இருந்தது. நோபல் பரிசு வென்ற இந்தியர் என்ற முறையில் நம்மவர்கள் அவருக்குச் செய்த மரியாதை அது. அப்படியான காலத்தில் அவரின் பெயராலும் நூலின் தலைப்பாலும் ஈர்க்கப்பட்டு அதை வாங்கிப்போட்டுவிட்டு அதன் பின்பு பல ஆண்டுகள் அட்டையைக்கூடத் திறந்து பார்க்கவில்லை. பொருளியல் மேதை என்றால் ஏதோ உற்பத்தி, பயன்பாடு, வளம் என்று மட்டுமே பேசத் தெரிந்தவராக இருப்பார் என்று எண்ணுகிற அளவுக்குத்தான் அப்போதைய அறிவு இருந்தது. “என்னைப் போல் உருப்படியாக எதுவும் செய்யாமல் பேசிப்பேசி நேரத்தை வீணடிப்பவர்கள் இந்தியர்கள்” என்று நக்கலடித்திருப்பார் என்றுதான் நூலை வாங்கும்போது எண்ணினேன். நாம் நினைப்பது போலவே நினைப்பவராக இருந்தால் அவர் எப்படி நோபல் பரிசு பெற்றிருக்க முடியும்! நூல் முழுக்க இந்தியர்களின் உரையாடல் மரபு பற்றிப் பேசுகிறார். அதாவது, இந்தியர்களின் மக்களாட்சி மீதான மரியாதை பற்றியும் மூடிய மனதோடும் சொந்தக் கருத்துகளில் பிடிவாதத்தோடும் இராமல் எதையும் வெளிப்படையாக உரையாடுகிற பண்பு பற்றியும் விரிவாகப் பேசுகிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால், இந்தியர

உணர்ச்சிப் பெருநாள்!

படம்
என் வாழ்வில் முக்கியமானதொரு மைல்க்கல்லைக் கடக்கிறேன் இன்று. இப்போதுதான் என் மகளைப் பள்ளியில் சேர்த்து விட்டு வருகிறேன். இது ஒருவிதமான உணர்ச்சி மேலோங்கிய நாள். அவளை விட்டு விட்டு வெளியே வரும்போது அழுது விடுவேன் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். நல்ல வேளையாக, என் மனைவியைச் சிறிது நேரம் அங்கு இருந்து கொள்ளலாம் என்று அனுமதித்தார்கள். அது கொஞ்சம் கதையின் போக்கை மாற்றி விட்டது. அடுத்த மைல்க்கல்லைக் கடக்கும் போது சிந்திக் கொள்வதற்காகச் சிறிது கண்ணீரைச் சேமித்துக் கொண்டேன். இன்று காலை, என் மகள் முதல் நாளாக வீட்டை விட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பிய போது, மணப்பெண்ணாக வீட்டை விட்டுக் கிளம்பப் போகும் அந்த நாள் பற்றிய நினைவு திரும்பத் திரும்ப வந்து சென்றது. அந்த நாளை எப்படிக் கையாளப் போகிறேன் என்று தெரிய வில்லை. இப்போதே அது பற்றிச் சிந்திக்க விரும்ப வில்லை. அதே வேளையில், அது பற்றிச் சிந்திக்காமலே இருக்கவும் விரும்ப வில்லை. அவளுக்கு மூன்று வயதே ஆகும் இந்தப் பொழுதில் அது பற்றி எல்லாம் சிந்திப்பது பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறது. ஆனால், அவள் பிறந்த நாளன்று இன்றைய தினம் பற்றிச் சிந்தித்தேன்.

மாக்களாட்சி?!

படம்
எத்தனையோ கோளாறுகள் இருந்தாலும் மக்களாட்சிதான் இன்று அதிகம் ஏற்றுக்கொள்ளப் பட்டுள்ள அமைப்பு. மற்ற அமைப்புகள் அனைத்திலும் இதை விடப் பெரிய பிரச்சனைகள் (குறைவாக இருக்கலாம்) இருக்கின்றன. மற்ற அமைப்புகள் மக்களாட்சிக்குப் பக்கத்தில் கூட வர முடியாத அளவுக்குப் பிரபலமற்றவையாக இருப்பதால், இந்த மக்களாட்சி அமைப்பில் இருக்கிற பிரச்சனைகளைக் களைந்து இதை மேலும் மேம்பட்டதாக ஆக்கத் தேவையான மாற்றங்கள் பற்றிப் பேசுவதே நல்லதாகப் படுகிறது. குறிப்பாக, இந்திய மக்களாட்சியில். உலகிலேயே பெரிய மக்களாட்சி அமைப்பு இதுதான் என்றும் அதை இவ்வளவு பாதுகாப்பாக அழிய விடாமல் வைத்திருப்பதே பெரும் சாதனை என்றும் பீற்றிக் கொண்டு இருந்தாலும், கடந்த அறுபதாண்டு கால மக்களாட்சியின் விளைவுகள் உற்சாகமூட்டுவதாக இல்லை. நிச்சயமாக நாம் நிறையச் செய்திருக்கிறோம்; ஆனால், அவை நம் தரத்துக்கு மிக மிகக் குறைவு. எத்தனை முறை சாப்பிட்டிருக்கிறோம் - கடந்த அறுபது ஆண்டுகளில் எத்தனை இரவுகள் தூங்கியிருக்கிறோம் என்பது போன்ற மிக அடிப்படையான புள்ளி விபரங்கள் பேசுவதில் பிரயோசனமில்லை. இவ்வளவு அறிஞர்களையும் நிபுணர்களையும் வைத்துக் கொண்டு, குறைந்த பட்சம்

துரோகிகள், காட்டிக் கொடுத்தல்கள் மற்றும் சகோதர யுத்தம்

படம்
நம் இதிகாசங்கள், திரைப்படங்கள் மற்றும் கதைகள் ஆகிய எல்லாவற்றிலுமே இரண்டு கதாபாத்திரங்கள் உண்டு. ஒன்று நாயகன்; இன்னொன்று வில்லன். நாயகன் நல்லவன்; வில்லன் கெட்டவன். அவர்கள் இருவரும் எதிரிகள். எதிரி என்பவன் கண்டிப்பாக நமக்கு எதிராகச் செயல்படுபவன் என்பது நமக்கு எப்போதுமே தெரியும். இதிகாசங்களும் கதைகளும் துரோகிகளுக்கும் ஒரு முக்கிய இடம் கொடுத்திருக்கின்றன. துரோகி என்பவன் யார்? எதிரியை விட எந்த வகையில் அவன் வேறுபட்டவன்? எதிரியைப் போலன்றி, துரோகி என்பவன் நம்மில் ஒருவன்; ஏதோவொரு சூழலில் எதிர்பாராத விதமாக நமக்கு எதிராகத் திரும்பி விடுபவன். பாதி வழியில் பாதையை மாற்றிக் கொண்டவன்! அவனும் அதன் பின்பு நம் எதிரி ஆகியிருப்பான். ஆனால், முதலில் அவன் துரோகி; பின்புதான் பிரதான எதிரி ஆகிறான் - எதிரியை விடக் கூடுதல் எதிரி! துரோகிகளை எது அவ்வளவு முக்கியமானவர்கள் ஆக்குகிறது? கதைக்கு எதிர் பாராத திருப்பத்தைக் கொடுப்பவர்கள் அவர்களே. அந்த நிமிடத்திலிருந்து கதையின் போக்கும் திசையும் மாறுகிறது. அதன் பின்பு முற்றிலும் புதியோதோர் அணுகுமுறை - திட்டமிடுதல் - வியூகமமைத்தல் தேவைப் படுகிறது. நமக்கு எதிரியைப் பற்றி அத

மரியாதை - அளவுக்கு மிஞ்சினால்?

படம்
50 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததென்று தெரிய வில்லை. ஆனால், பத்தாண்டுகளுக்கும் மேலான என் பணியிட அனுபவத்தில் புரிந்து கொண்டது என்னவென்றால், சக மனிதர்களை மதிக்கும் கலையில் தேர்ச்சி பெற்றோர் எல்லையிலா வளர்ச்சி பெறுகிறார்கள். அது போலவேதான் அளவுக்கு அதிகமாக மரியாதை கொடோரும். எந்தத் துறையிலும் வளர்ச்சி என்பது அந்தத் துறை சார்ந்த தொழில் நுட்ப அறிவால் மட்டும் கிடைப்பதில்லை - அது சக மனிதரோடு பழகும் திறம் முதலான பல காரணிகளால் நிர்ணயிக்கப் படுவது - பழகும் திறம்தான் அந்தப் பட்டியலில் முதன்மையாக இருப்பது என்பதெல்லாம் அதிகமானோருக்கு அதிகமான அளவில் வெளிப்படியாகத் தெரிந்து விட்டது இப்போது. பழகும் திறம் என்று சொல்லும் போது, அது மனிதர்களை மதிப்பது மட்டும் ஆகாது.  சரியான முறையில் அவர்களைக் கையாள்வதும் அடங்கும். அதாவது, மனிதர்களுடன் நல்ல பிள்ளையாக நடந்து கொள்வதன் மூலம் அவர்களிடமிருந்து அதிகபட்ச உழைப்பை அல்லது பங்களிப்பைப் பெறுவது. தேவைப் படும் போது அவர்களைக் கடுமையாக நடத்துவதும் அதில் அடக்கம். சொல்லவே வேண்டியதில்லை - கடுமையாக நடந்து கொள்வதற்காகவோ அப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப் படும்போத

உயிர்களின் எதிரிகள்

அணு குண்டு வீச்சில் உயிர் பிழைத்த கரப்பான் பூச்சிகளெல்லாம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றன... தம் எதிரிகளின் முடிவை! எல்லா உயிர்களுக்கும் எதிரிகள் அவர்களே!! பாவிகள் எல்லைக்கு இருபுறமும் இருக்கிறார்கள்!!!

எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்

படம்
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும். எண் என் பணியில் கிடைக்கும் சம்பளம். எழுத்து என் வேட்கை. எண் ஈட்டி வருவதும் எழுத்து படைப்பதும் செய்து கொண்டே இருப்பேன். என்னால் முடியும் வரை. எண் என் குடும்பத்துக்காகவும் எனக்காகவும். எழுத்து எனக்காக மட்டும். என் சமூகத்துக்காகவும் எண் ஈட்டி வரும் ஆற்றல் கிட்டுமானால், என் சமூகத்துக்காகவும் என் எழுத்து பயன்பட முடியுமானால் அதை விடப் பேருவகை ஒன்று இருக்க முடியாதெனக்கு. என் பிறவிப் பெரும்பயன் எய்தி விட்டதாகக் கூடக் கொள்ளலாம். இல்லையேல், என் குடும்பத்துக்கும் எனக்குமாகவாவது எண் ஈட்டிக் கொண்டு வருவேன்; எனக்கு மட்டுமாகவாவது எழுதிக் கொண்டிருப்பேன். சம்பளம் எவ்வளவு வந்தாலும் பற்றாதுதான். சமாளித்து வென்றே தீர வேண்டும். எழுதி எழுதி பூமியின் சுழற்சிப் பாதையை மாற்றிய எழுத்தாளர் எவருமில்லைதான். சினிமா பார்த்துத் திருந்தி விடுகிற நல்லவர்கள் எவ்வளவோ பேர் இருக்கிற நம் மண்ணில் எழுத்தைப் படித்துப் பயனடைகிற பெருமக்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். எழுத்து படிப்பவரையும் எழுதுபவரையும் சிந்தனையைப் பட்டை தீட்டப் பணிக்கிறது. என்னுடையது அதற்கும் பயன்படாத எழுத்தாகுமானால் குறை