தமிழ்ப் படைப்பாளிகளில் தலை சிறந்த அப்பாடக்கர்
இன்றைக்குத் தமிழ் நாட்டில் இருக்கிற முக்கால்வாசிக் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தமிழின் தலை சிறந்த படைப்பாளி தான்தான் என்றும் மற்றவர்கள் எல்லாம் அதற்குப் பின்னால்தான் என்றும் தலை சிறந்த படைப்புகள் என்றால் தன்னுடையவை அனைத்துக்கும் பிறகுதான் பிறருடையவை எல்லாம் என்றுமே சொல்கிறார்கள். சில நேரம் இவர்கள் எல்லோருமே ஏதோ விதமான மனநோய்க்கு உள்ளானவர்களோ என்று கூடத் தோன்றுகிறது. இது தமிழில் மட்டும் இருக்கும் பிரச்சனையா அல்லது கணிப்பொறி பார்த்துக் கொண்டே இருந்தால் வரும் பிரச்சனைகள் போல பேனா பிடித்துக் கொண்டே இருந்தால் வரும் பிரச்சனைகளில் ஒன்றா? மற்ற மொழி எழுத்தாளர்கள் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது கொஞ்சம் வெளிச்சம் காட்டினால் நன்றாக இருக்கும். அச்சார நன்றிகள் (அட்வான்சுக்குத் தமிழில் சொல்லளித்த தமிழின் தலை சிறந்த படைப்பாளி வைரக் கவிஞருக்கு நன்றிகள்!). வைரக் கவிஞர் என்றதும்தான் நினைவுக்கு வருகிறது. பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பு காமராசன் என்றொரு கவிஞர் திரிந்தார். இப்போது அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை. கல்லூரிக் காலத்தில் அவருடைய பேட்டி ஒன்றைப் படித்து விட்டு எனக்கு மண்டையெல்லாம்