இடுகைகள்

பிப்ரவரி, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலாச்சார வியப்புகள்: இலண்டன் - 1/12

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! மேற்கு நோக்கிப் பயணிக்கப் போவதாகக் கட்டுரை எழுதி ஒன்றரை ஆண்டுகள் ஆகி விட்டது. அப்படியோர் ஆசைப் பட்டு அதற்கான வேலைகளைத் தொடங்கியது அதற்கு ஓராண்டுக்கு முன்னால். மேற்குதான் என்றில்லை; எங்காவது போய் விட்டால் நல்லது என்று துடியாய்த் துடித்துக் கொண்டிருந்தேன் (என் பயணக் கட்டுரைகள் அனைத்தையும் படித்து முடிக்காமல் "வெளிநாட்டு மோகம்" என்று ஓரிரு வார்த்தைகளில் கதையைச் சுருக்கி விடாதீர்கள். அது ஒரு பெரும் கதை. அதைச் சுற்றி எத்தனையோ கிளைக் கதைகள் இருக்கின்றன. அவையனைத்தையும் பற்றிப் பேசத்தான் இந்தத் தொடர்!). நினைத்தபடி எதுவ