இடுகைகள்

2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முடிவிலா உருள் (Infinite Scroll)

‘முடிவிலா உருள்’ (Infinite Scroll) கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம்? இல்லை? அது என்ன தெரியுமா? உங்களுக்குத் தெரியும். ஒன்று உங்களுக்கு அதைப் பற்றி நன்றாகத் தெரியும், அல்லது அது என்னவென்று தெரியும், ஆனால் அதைப் பற்றி ஒருபோதும் உணர்ந்திருக்க மாட்டீர்கள் அல்லது அதன் மீது கவனம் செலுத்தியிருக்க மாட்டீர்கள். ஆம். பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற உங்களுக்குப் பிடித்த அனைத்துச் சமூக ஊடகத் தளங்களிலும் உங்களை முடிவில்லாமல் உருட்டிக்கொண்டே இருக்க வைப்பது எது தெரியுமா? அது ஒரு பெரும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்பு. வலைப்பக்கங்கள் உருவாக்கும் மென்பொருள் பொறியாளர்கள் பயன்படுத்தும் ஒரு வடிவமைப்பு நுட்பம் (design technique).  நீங்கள் சமூக ஊடகங்களுக்கு முந்தைய காலத்தில் இணையத்தைப் பயன்படுத்தியவர் என்றால், அந்த நாட்களில் வலைத்தளங்கள் எப்படி இருந்தன என்பதை நினைவுபடுத்திப் பாருங்கள், அந்த வேறுபாடு உங்களுக்கே புரியும். அப்போது இணையத்தில் வலைத்தளங்கள் இருந்தன, அத்தகைய ஒவ்வொரு தளத்திற்குள்ளும் வலைப்பக்கங்கள் இருந்தன. முதல் பக்கத்தில் உள்ள உள்ளடக்கத்தைப் பார்த்துவிட்டு, அடுத்த பக்கத்தில் என்ன இருக்கிறது எ
  மன்னர் உள்ளே நுழையும் போதே அமைச்சர் சீவலப்பேரியாரின் பக்கம் திரும்பி: "அய்யர்வாள்! பாண்டியர்கள் ஏன் கொற்கையிலிருந்து கூடலுக்கு மாறினார்கள் என்ற தெளிவான விளக்கங்கள் உம்மிடம் இருக்கின்றனவா? அப்புறம் ஏன் தென்காசிக்கு மாறினார்கள்? இது பற்றியெல்லாம் இன்று இரவுக்குள் படித்து வந்து சொல்ல முடியுமா?" "கேள்விப்பட்டேன் அரசே! உங்கள் மனதில் ஓடும் குழப்பம் பற்றிக் கேள்விப்பட்டேன். நல்ல யோசனைதான். நாம் இப்போதே அனைத்தையும் மாற்ற வேண்டியதில்லை. இரண்டு தலைநகரங்கள் வைத்துக்கொள்வோம்." "அதுவும் உம் காதுக்கு வந்துவிட்டதா? கெட்ட காதய்யா உமக்கு!" "நல்ல காதென்று சொல்லும் அரசே!"  அமைச்சரின் முகத்தில் அதே வழக்கமான பெருமிதப் புன்னகை. * ஆனால் அங்கிருக்கிற அரண்மனை அவ்வூர்க்காரர்களுக்குத் தம் ஊரும் ஒரு தலைநகர வரலாறு உடையதுதான் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது. எட்டயபுரத்து ஜமீனின் வடக்கு எல்லையாக இருந்ததால் இங்கும் ஓர் அரண்மனை கட்டினாராம் எட்டயபுரத்து மன்னர். முதலில் இரட்டைத் தலைநகரங்கள் வைத்துக்கொள்ள விரும்பித்தான் நாலாரத்தில் அரண்மனை கட்டினாராம். 12 மைல் தொலைவுக்கு அங்

இதழியள்

  “ஐயோஓஓஓ! கடவுளேஏஏஏ! ஆஆஆ… என்னை விட்டுவிடு. ப்ளீஸ்ஸ்ஸ். நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன். ப்ளீஸ்ஸ்ஸ். என்னை விட்டுவிடு.” வெள்ளைச்சட்டைக்காரன் கையெடுத்துக் கும்பிடுகிறான். கதறுகிறான். கெஞ்சுகிறான். ஆசிய முகம் போல் இருக்கிறது. அதனால்தான் கும்பிடுகிறான். குத்துபவன் நிறுத்துவதாக இல்லை. திரும்பத் திரும்பச் சதக் சதக் என்று குத்துகிறான். சகிக்க முடியவில்லை. மிருகம் போலக் குத்துகிறான். மிருகத்தை எதற்குக் கேவலப்படுத்த வேண்டும்! எந்த மிருகம் இப்படித் தன் இனத்து மிருகத்தையே கத்தியால் குத்துகிறது! ஐயோ எனக்குத் தலை சுற்றுகிறதே! பளிச் என்று வெள்ளைச்சட்டை வேறு போட்டிருக்கிறான். பளிச் வெள்ளையில் பளிச் சிவப்பு… பார்க்கவே கொடுமையாக இருக்கிறதே! நல்ல வேளையாகப் பாதியிலேயே ஒலி அணைக்கப்பட்டது. காட்சி மட்டுமே. மார்க் ஒரு சொடுக்குச் சொடுக்கி அந்தக் காணொளியை நிறுத்தினான். நான் வகுப்பறையில் இருக்கும் பெரிய திரைக்கு ஓரத்தில் நிற்கிறேன். “இதை அனுமதிக்கலாமா? கூடாதா?” இப்படிக் காணொளிகளை நிறுத்துவதையும் அடுத்து திரைக்கு ஓரத்தில் நிற்பவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்பதையும் ஓர் இயந்திரம் போலப் பழகியிருக்கிறான். எத்தனை ஆண்ட