இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 1/9

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் ஆரம்பம்... மீண்டும்... பழங்கதை  சென்ற ஆண்டு இலண்டனில் ஒரு மாத வேலைக்குக் குடும்பத்தோடு பெட்டி படுக்கைகளையும் சேர்த்துக் கட்டிக் கொண்டு வந்திறங்கினேன். ஒருவேளை நீண்ட காலம் இருக்க நேர்ந்தால் அப்படியே இருந்து கொள்ளலாம் அல்லது சொந்தச் செலவில் குடும்பத்துக்கும் ஒரு சுற்றுலா அனுபவம் கிடைத்த மாதிரி இருந்து விட்டுப் போகட்டும் என்று அப்படிச் செய்தோம். வயிற்றில் ஒரு குழந்தையோடு இருந்த மனைவியோடு குளிர் காலத்தில் வந்திறங்கியதால் அதிகம் சுற்றியும் பார்க்க முடியவில்லை. அந்தப் பழம் புளித்து ஊர் திரும்பி விட்டோம். அது பற்