இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன். இந்தச் சிறப்பு அத்தியாயத்துக்காக மிக்க மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் உணர்கிறேன். ஏனென்றால், இன்று ஒரு சிறப்பு விருந்தினர் நம்முடன் இணைகிறார். அந்தச் சிறப்பு விருந்தினர் எனக்கு மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு நாயகன். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இருவருமே சுயதனிமையில் இருக்கிறோம். இது ஒரு சிறப்புச் சந்தர்ப்பமும் கூட. அறிமுகத்தை இன்னும் நீட்டிக்காமல்... இதைப் பார்க்கும் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு நோம் சோம்ஸ்கி யாரென்று தெரியும். நோம் இன்று நம்மோடு இணைகிறார் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஹலோ நோம்! எங்கே இருக்கிறீர்கள்? ஏற்கனவே சுயதனிமையில் இருக்கிறீர்களா? எவ்வளவு காலம்? இதையெல்லாம் எங்களுக்குச் சொல்வீர்களா? நோம் சோம்ஸ்கி: நன்று, நான் அரிசோனா மாநிலம் டுசாயன் நகரத்தில் சுயதனிமையில் இருக்கிறேன்.  ஸ்ரெச்கோ: சரி, நீங்கள் 1928-இல் பிறந்தீர்கள். எனக்குத் தெரிந்தவரை உங்கள் முதல் கட்டுரையை நீங்கள் பத்து வயதாக இருக்கும் போது எழுதினீர்கள

உங்கள் ஊர்

வணக்கம். என் ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் நாகலாபுரம் என்னுமொரு செம ஊர். என் ஊரைப் பற்றிப் பேசுவதென்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். எங்கள் ஊரைவிட நல்ல ஊர் இந்த உலகத்தில் இருக்குமா என்றொரு சந்தேகம் கூட எனக்கு உண்டு. உங்கள் ஊர் எப்படி? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். ஊர் என்றதும் உங்களுக்கு எந்த ஊர் நினைவுக்கு வருகிறது? நீங்கள் பிறந்த ஊரா? வளர்ந்த ஊரா? உங்கள் தந்தையின் ஊரா? தாயின் ஊரா? சொந்தமாக வீடு கட்டிய/வாங்கிய ஊரா? இது எல்லாமே ஒரே ஊர்தான் என்றால் நீங்கள் பாக்கியவன்தான். எனக்குத் தெரியும். நீங்கள் 5 வயதுக்கும் 20 வயதுக்கும் இடையில் அதிக காலம் வாழ்ந்த ஊர் எதுவோ அதைத்தான் சொல்வீர்கள். சிலர் ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறைக்குச் சென்ற பாட்டி ஊரைச் சொல்வார்கள். நீங்கள்? உங்கள் ஊர் கிராமமா? நகரமா? இரண்டுக்கும் இடையிலா? உங்கள் ஊரில் உள்ள எல்லோருக்குமே எல்லோரையும் தெரியுமா அல்லது பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூடத் தெரியாதா? இந்த ஊர் இதைவிடச் சிறிதாகவோ பெரிதாகவோ இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்திருக்கிறீர்களா? ஒவ்வோர் ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்குமே! அப்படி உங்