கலாச்சார வியப்புகள் - நெதர்லாந்து - 2/2
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும் வியப்புகள்... ஊழல் இரவில் அங்கே இருக்கிற இந்தியக் கடை ஒன்றுக்குச் சாப்பிடச் சென்றோம். ஏதோ சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்த போது எங்களோடு இருந்த உள்ளூர் சகாவிடம், "இங்கே ஊழல் இருக்கிறதா?" என்று கேட்டோம். குரலை உயர்த்தி அழுத்தம் திருத்தமாகச் சொன்னான், "அது எங்கள் மரபணுவிலேயே கிடையாது. ஊழல் மட்டுமில்லை. ஒரு பொருளுக்கு உரிய விலைக்கு மேல் பிடுங்க நினைக்கும் எண்ணம் கூட எங்கும் கிடையாது. எங்கள் நாட்டில் எங்கும் அதை நீங்கள் காண முடியாது". அந்தக் குரலில் இந்தியாவில் வந்து அடிபட்டுச் சென்ற ஆதங்கம் இருந்தத