பொம்மை பிரதமர்?

சரவணக்குமார் எழுதச் சொன்ன இன்னொரு விஷயம் - நம் மாண்புமிகு பிரதமர் மன்மோகன் சிங்கின் பல தோல்விகள் பற்றி. சரி. அதையும் எழுதி விடுவோம். 2004-இல் காங்கிரஸ் வெல்லட்டும் ஆனால் சோனியா பிரதமராகக் கூடாது என்று ஆசைப்பட்ட ஆட்களில் நானும் ஒருவன். கட்சி என்ற முறையில் எனக்கு பா.ஜ.க. மீது எனக்குப் பெரிதும் ஈர்ப்பு எதுவும் இல்லை. ஆனால், வாஜ்பாயை விட சோனியாதான் பிரதமராக அதிகத் தகுதிகள் கொண்டவர் என்று யாராவது சொன்னால் எனக்கு மண்டை கிர்ரென்று சுற்றும். அத்வானியோடு கூட அவரை ஒப்பிடப் பிடிக்காது. சரியான ஆளை மயக்கியதைத் தவிர இந்திய அரசியலில் அவருக்கு வேறு எந்தத் தகுதியும் கிடையாது. தான் பிரதமர் பதவி ஏற்கப் போவதில்லை என்று அவர் அறிவித்தபோது எல்லோரையும் போல நானும் அவரைப் பெரும் தியாகியாக ஏற்றுக் கொண்டேன். அது அவர் விரும்பி எடுத்த முடிவல்ல; சுப்பிரமணியசுவாமி என்கிற நம்ம ஆள் ஒருவர் போட்ட குண்டினால் அப்படி ஒரு முடிவெடுக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டார் என்று பின்னர் கேள்விப் பட்டபோது அதையும் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. வெளிநாட்டுக் காரர் என்பதற்காக அவர் இந்த நாட்டை ஆளக் கூடாது என்று கூட எண்ணவில்லை. அதற்க