கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 7/9
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... மொழி இங்கிலாந்து வந்ததில் எனக்கு நேர்ந்த மிகப்பெரிய மாற்றங்களில் ஒன்று - மொழி சார்ந்த பார்வை. பார்வை மாறியது என்று சொல்ல முடியாது. தெளிவடைந்தது எனலாம். சிறு வயது முதலே, நாம் பெரிதாக மதிக்கும் அறிஞர்கள் அனைவருமே தாய்மொழி வழிக் கல்வி பற்றிப் பெரிதாகப் பேசுவார்கள். மற்ற எல்லா விசயங்களிலும் அவர்களோடு ஒத்துப்போகும். ஆனால் இந்த விசயத்தில் மட்டும் ஏதோ இடிக்கிற மாதிரியே இருக்கும். அது பிற்போக்குவாதமோ என்று கூடத் தோன்றும். மொழியை வைத்துப் பிழைப்பு நடத்துகிற அரசியல்வாதிகளையோ - மொழி என்றாலே உணர்ச்சி பொங்