இடுகைகள்

செப்டம்பர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாம, தான, பேத, தண்டம்

சாம, தான, பேத, தண்டம்... இந்தச் சொற்களை எங்காவது கேள்விப் பட்டிருக்கிறீர்களா? சமீபத்தில் தொலைக்காட்சியில் ஓடிய படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சோ இது பற்றிச் சொல்வதைக் கேட்டேன். இதற்கு முன்பும் பல முறை கேட்டிருக்கிறேன் என்றாலும் இந்த முறை அவை பற்றி அறிய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இணையத்தில் வந்து தேடியபோது சுவாரசியமான விளக்கம் கிடைத்தது. இதோ... எந்தப் பிரச்சனையிலும் இந்த வரிசையில் போவதே முறை. முதலில் சாமம். அதாவது சமமாக மடித்துப் பேசுதல் அல்லது பிரித்துக் கொடுத்தல். அது ஒத்து வரவில்லை என்றால், தானம். அதாவது விட்டுக் கொடுத்தல். கூடுதலாகக் கொஞ்சம் விட்டுக் கொடுத்தல். கொஞ்சம்தான்... முழுமையாக அல்ல. அதற்கும் ஒத்து வரவில்லை என்றால் பேதம். அதாவது, ஒதுக்கி வைத்தல், மிரட்டல், மற்றும் வேறுபாடு காட்டுதல். இவை எதுவுமே ஒத்து வரவில்லை என்றால், இறுதியாக தண்டம். அதாவது, தண்டனை அல்லது அடிதடி. கையில் கட்டையை அல்லது கம்பியை எடுத்து நடு உச்சியில் நட்டு நட்டென்று போடுதல். நேரடியாக இரண்டாவதுக்குப் போனால் ஏறி மேய்ந்து விடுவார்கள். பாசக்கார பயபிள்ளை என்று சொல்லி ஏமாளிப் பயபிள்ளை ஆக்கி விடுவார்கள

பதிவிடுதல் - பல கேள்விகள்

படம்
சக ஆங்கிலப் பதிவர்  திரு. ஹரிஹரன்  அவர்கள், இன்று வெள்ளி விழா கொண்டாடுகிறார். Valady Views  என்ற தளத்தில் கடந்த இரண்டு மாதங்களாகத் தொடர்ந்து சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இன்று அவருடைய இருபத்தி ஐந்தாவது இடுகையை இட்டிருக்கிறார். அந்த இடுகையின் தலைப்பு ??? . அவ்வளவுதான். மூன்றே மூன்று கேள்விக் குறிகள். ஆனால், உள்ளே ஏகப் பட்ட கேள்விகள் கேட்டிருக்கிறார். அனைத்தும் சக பதிவர்களுக்கான கேள்விகள். முதலில் இவ்வளவு சீக்கிரமாக இருபத்தி ஐந்து இடுகைகள் இட்டமைக்கு அவரை வாழ்த்துவோம். இரண்டே மாதங்களில் இதைச் செய்திருப்பதுதான் சாதனை. அதிரடி ஆட்டம் ஆடியிருக்கிறார், இல்லையா? என் பதில்களை அவருடைய இடுகைக்குக் கீழ் ஒரு கருத்துரையாக இட்டிருக்கலாம். ஆனால், அது அவருடைய இடுகையை விடப் பெரிதாக வருவதால், அதையே ஒரு இடுகையாக என் பதிவில் இட்டு விடலாம் என்று முடிவு செய்து விட்டேன். நமக்கும் ஒரு நம்பர் கூடிய பெருமை கிடைக்கும் அல்லவா? இதோ... முதலில் அவரையே அவர் கேட்டுக் கொண்டிருக்கும் கேள்விகள். அவற்றுக்கு என் பதில்களையும் கொடுத்து விட்டு, பின்னர் அவர் மற்றவர்களுக்குக் கேட்டிருக்கும் கேள்விகளைப் பார்ப்போம்...

உள்ளாட்சித் தேர்தல் - கூட்டணிக் கூத்துகள்

படம்
அருமை. அருமை. அதிமுகவின் மாநகராட்சி மேயர் வேட்பாளர்களின் பட்டியல் வந்து விட்டது. எப்போதும் போல், தைரிய லட்சுமி அம்மா கூட்டணிக் கட்சிகளுக்கு ஓர் இடம் கூட விட்டு வைக்காமல் பத்து மாநகராட்சிகளுக்கும் தன் வேட்பாளர்களை அறிவித்து விட்டார். பத்துப் பேரும் சாமியைக் கும்பிட ஆரம்பித்திருப்பார்கள். சட்டப் பேரவைத் தேர்தலில் நடந்த மாதிரி சமரசம் ஏதும் ஆகி விடக் கூடாது. அப்புறம் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய் விடும். சமரசம் ஆகா விட்டாலும் கூட வேட்பு மனு திரும்பப் பெறும் கடைசி நாள் வரை அவர்கள் சாமி கும்பிடத்தான் வேண்டும். இந்த முறை சமரசத்துக்கு வாய்ப்பில்லை என்றே எனக்குப் படுகிறது. ஏன்? ஏனென்றால், போன முறை ஆட்சியைப் பிடிப்பதற்காக எது வேண்டுமானாலும் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது. அதைத்தான் பிடித்து விட்டாயிற்றே. இன்னும் ஐந்து வருடங்களுக்கு யாரையும் மதிக்க வேண்டியதில்லை. ஒருவேளை, சமரசம் ஆனால் எப்படி ஆகலாம்? அல்லது, ஏற்கனவே நியாயமான முறையில் முடிவு செய்திருந்தால், எப்படிச் செய்திருக்கலாம்? முன்பு போல், ஆறே ஆறு மாநகராட்சிகள் என்றால், நான்கை வைத்துக் கொண்டு இரண்டை தேமுதிகவுக்குக் கொடுக்கலாம்.

பொன்னியின் செல்வன் - சில குறிப்புகள்

படம்
இதுவும் சிவகாமியின் சபதம் - சில குறிப்புகள் போல், குறிப்புகளின் தொகுப்பே. நூல் விமர்சனம் அல்ல. அந்த அளவுக்குக் கூட நீளமானதோ விரிவானதோ அல்ல இது. மிகச் சில குறிப்புகளே. "ஆதித்த சோழன் காவேரி நதி உற்பத்தியாகும் இடத்தில் இருந்து கடலில் சேரும் இடம் வரையில் 64 சிவாலயங்கள் எடுப்பித்தான்." என்றொரு வரி வருகிறது. தமிழ் மன்னர்கள் பெரும்பாலும் கோயில் கட்டுவதை ஒரு பெரும் அரும் பணியாகவே செய்திருக்கிறார்கள். பக்தி மார்க்கம் தவறில்லை. ஆனால், அதே அளவு நேரத்தையும் ஆற்றலையும் மக்கள் நலப் பணிகளில் செலவிட்டிருந்தால் தமிழகம் இன்னும் நன்றாக இருந்திருக்குமோ என்றொரு எண்ணவோட்டம். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? "கூட்டாஞ்சோறும் சித்திரான்னமும் எடுத்துக் கொண்டு பலர் குடும்பங் குடும்பமாக வந்திருந்தார்கள்." என்றொரு வரி வருகிறது. சித்திரான்னம் என்பது இன்றைக்கும் கர்நாடகத்தில் ஒரு முக்கிய உணவு வகை. அது வேறொன்றுமில்லை. நம்ம ஊரில் எலுமிச்சை சாதம் என்றழைக்கப் பட்டு இப்போது லெமன் ரைஸ் ஆகியிருக்கும் அதே உணவுதான் கர்நாடகத்தில் சித்திரான்னம் என்றழைக்கப் படுகிறது. ஒரே ஒரு சின்ன வேறுபாடு - கர்நாடக சித

என் மதுரை உறவினர்களுக்கு...

படம்
மதுரையைத் தம் தாய் மண்ணாக்கிக் கொண்டு வாழும் என் அன்பு உறவினர் அனைவருக்கும் உங்களில் ஒருவன் - உங்கள் அன்பு உறவினன் எழுதிக் கொள்வது. எப்போதும் போலவே, என் பேச்சுக்கள் உங்களுக்கு எரிச்சலை ஊட்ட வாய்ப்புள்ளது; நான் சொல்ல முனைவதை உங்களுக்குச் சரியாகச் சொல்லிப் புரிய வைக்க முடியுமா என்ற சந்தேகமும் அப்படியே உள்ளது. இப்போதைய சூழலில் ஒருவேளை எடுபடலாம் என்ற நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். ஏதாவது அர்த்தமிருப்பதாகத் தெரிந்தால், தொடர்ந்து படியுங்கள், இல்லையேல், எப்போதும் போலவே, "போடா, நீயும் உன் புண்ணாக்கு எழுத்தும்!" என்று புறந்தள்ளி விட்டு அடுத்து ஆக வேண்டிய வேலையைப் பாருங்கள். "ஆக வேண்டிய வேலை என்றால்? என்ன வேலையெல்லாம் பார்க்கச் சொல்கிறாய்? கொழுப்புக் கூடி விட்டதா?" என்று கோபம் கொள்ள வேண்டாம். நான் சொல்ல வந்தது... வட்டி வசூலிக்கப் போவதோ, வாய்தாப் போடப் போவதோ, அடுத்த தலைவனை அடையாளம் கண்டு அடியாள் வேலைக்குப் போவதோ, சினிமாத் தியேட்டரில் கலாட்டா செய்யப் போவதோ, புதிதாய் ஒரு சாதிக் கலவரத்துக்குத் திட்டம் தீட்டப் போவதோ... எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அது உங்கள்

தற்கொலை

படம்
ஏதோ விதமாய் இருக்க நினைத்து எவருமே ஒத்து வராமல் எவருக்குமே ஒத்து வராமல் எதுவுமே செய்ய முடியாமல் பேசக்கூட ஆளில்லாமல் கேட்கக் கூடக் காதில்லாமல் விளிம்பு நிலைக்குத் தள்ளப் பட்டு விரக்திப் பட்டவர்கள் எல்லாம் முயன்று எதுவும் சரி வராமல் எடுக்கும் இறுதி முடிவு வாழ முடியாதவன் கோழை எனும் கூட்டத்தில் வீழ முடிந்தவன் வீரன் என்று விவாதித்தவர்கள் விரும்பி நாடிய முடிவு மனம் பொறுக்காமல் மாரடைப்பில் மாள்வது மட்டும் மன தைரியமா? மாவீரமா?  - என்று மாற்றி யோசித்தோர் மனமார ஏற்ற முடிவு மா-ரண வேதனையைவிட மரண வேதனை மேல் எனும் கருணைக் கொலை மட்டும் காருண்யமென்றால் வலி பொறுக்காமல் வலியப் போய் மாய்த்துக் கொளும்... வதை தாங்காமல் கதை முடித்து மடிந்து கொளும்... தற்கொலை எப்படித் தவறாகும்? - என்று தர்க்கம் பேசியோர் தவறாக எடுத்த முடிவு உயிரை ஒழித்துக் கொள்ளும் உரிமை இல்லையெனில் வாழ்வை வருத்திக் கொள்ளும் வசதியை மட்டும் எமக்கு வழங்கியது யார்? - என்று வழக்காடியவர்கள் வழியின்றி வரவேற்ற முடிவு முடித்துக் கொள்ள எடுத்த முடிவு... ஒருவருக்கு முடித்து வைத்து பலருக்குத் தொடங்கி

மாற்றுத் திறனாளி

படம்
என்னிடம் எந்தக் குறைபாடும் இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதில்லை நீங்கள் அது ஏதோ இருக்கிறதோ இருக்கிறதோ என்று நினைவு படுத்திக் கொண்டே இருப்பதாகவே உள்ளது * 1998 நாட்குறிப்பில் இருந்து...