இடுகைகள்

ஜூலை, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தாயுள்ளம்

ஒரு கொலைகாரனை கோபக்காரன் திமிர் பிடித்தவன் பொறுப்பற்றவன் சோம்பேறி என்று மற்ற எல்லாக் குறைகளையும் மட்டும் சொல்லித் திட்ட பெரும் தாயுள்ளம் வேண்டும்

நாயே

எவரையும் எளிதில் நாய் என்றிடுகிறீர்கள் நன்றியுடைமை நக்குதல் குரைத்தல் கடித்துக் குதறுதல் இடமறிந்து வாலாட்டுதல் இவை தவிர நாய்கள் பற்றி வேறேதும் இல்லையென்று எண்ணி விட்டீர்களா? நாய்களில்தான் எத்தனை வகை? துளியும் உழைக்காமல் எவர்க்கும் ஒரு பயனுமில்லாமல் ஒருத்தரின் அன்பை மட்டும் வெல்வதன் மூலம் அளவில்லாக் கவனிப்பு கிடைக்கப் பெற்று பிற நாய்களின் பொறாமைக்குள்ளாகுமளவு கொழு கொழுவென்று கொழுத்துப் போய்த் திரியும் பெரிய வீட்டு நாய்கள் உள்ளன இப்போது தான் எட்டுப் பேரின் குருதி குடித்துவிட்டு வந்தது போல கோபமும் கோரமும் நிறைந்த கொடூரமான முகத்தோடு தெருக்களைச் சுற்றி வந்து போவோர் வருவோரையெல்லாம் மிரட்டுதலில் மட்டுமே இன்பம் காணும் அழுக்குப் பிடித்த சொறி நாய்கள் உள்ளன என்றோ ஒரு நாள் நிகழப் போகும் நிகழாது போய்விடக் கூடும் ஒரு நாட் திருட்டிலிருந்து காத்துக் கொள்வதற்காக ஆண்டாண்டு காலமாய் நலம் பேணப்பட்டு அது நடக்கிற நாளில் எவனோ போடும் எலும்புத் துண்டுக்கு ஏமாந்து மயங்கித் தொலையும் மங்குனி நாய்கள் உள்ளன இப்படி மனிதரில் போலவே வகை வகையாய் விரிந்து கிடக்கிற நாயினத்தில் எந