இடுகைகள்

பிப்ரவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிரிக்கெட்: சில முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள்!

இவ்வளவு சூப்பரான ஒரு ஆட்டத்தைப் பார்த்து விட்டு (டை ஆன இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆட்டம்), அதைப் பற்றியே கொஞ்ச நேரம் யோசித்துக் கொண்டிருப்பது என்பது இயல்பானதே. குறைந்த பட்சம் அடுத்த ஆட்டம் பார்க்கும் வரையாவது இது நீடிக்கும். கிரிக்கெட் என்பதே அதுதானே?! ஒரு நாள் முழுக்கப் பார்ப்பதில் வீணாக்குவது; அதன் பின்னர் பல நாட்களை அதைப் பற்றி விலாவாரியாகப் பேசுவதில் வீணாக்குவது.  ஒரே ஆட்டத்தில் ஒரே நாளில் 676 ஓட்டங்கள் அடிப்பதைக் காணக் கண் கொள்ளாக் காட்சியாக இருந்த போதும், தொலை நோக்கில் அதுதான் இந்த விளையாட்டைக் குழி தோண்டிப் புதைக்கப் போகிறது என்று நினைக்கிறேன். ஆட்களை ஈர்க்கப் போகிறோம் என்று சொல்லிக் கொண்டு மொத்த விளையாட்டையும் பேட்ஸ்மேன்களின் விளையாட்டாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் T20 வந்த பிறகு இன்னும் கூடுதலாகி விட்டது. எல்லா நாடுகளிலுமே பந்து வீச்சாளர்கள் ஒன்னுக்கும் லாயக்கில்லாதவர்களாகிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் கிரிக்கெட் என்னும் படிவம் உண்மையான கிரிக்கெட்டை - அதாவது டெஸ்ட் கிரிக்கெட்டைக் கொன்று கொண்டிருக்கிறது என்பதைக் கேட்டுக் கேட்டு வளர்ந்

கீதாவுபதேசம்

கீதையைப் படிக்க மட்டுமே செய்கிற பலர் நினைக்கிறார்கள் கடமையைச் செய்து பலனை எதிர் பாராமல் போவது பைத்தியக்காரத்தனம் என்று அதெல்லாம் படிக்காமலேயே அதன்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் பலர் அவர்கள்தாம் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அதனால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் அவர்களால்தான் சோம்பேறிகளும் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள் நிரம்ப விவரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருப்பவர்கள் தினம் தினம் தோற்றுக்கொண்டிருக்கிறார்கள் கடமையை என்னவென்று கூடப் புரிய முயலாமல் பலனை அடைவதற்கான மற்ற எல்லா ஏற்பாடுகளையும் சிறப்பாகச் செய்து கொண்டு முன்னேறிக் கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருப்பவர்கள் ஏமாந்து கொண்டிருப்பவர்கள் தன்னையே ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள் ஏற்பாடுகள் மட்டுமே வாழ்வித்து விடா என்பதை உணரும் போது கீதை புரியும் ஆனால் வாழ்க்கை முடிந்திருக்கும் பலனை எதிர்பாராத பைத்தியக்காரருக்கு எதிரே பார்த்திராத பலன் வந்து சேரும்போது கீதை புரியும் அத்தோடு வாழ்க்கை நிறைவடையும்!

கிரிக்கெட் - ஒரு காதற் தோல்வி!

படம்
அடுத்த சில நிமிடங்களில், பத்தாவது உலகக் கோப்பையின் முதல்ப் பந்து வீசப்படப் போகிறது. ஒரு கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதற்காக நீண்ட காலத்துக்குப் பின் தொலைக்காட்சிப் பெட்டி முன் அமர்ந்திருக்கிறேன். நான் இதற்கு முன் கடைசியாகப் பார்த்தது ஐ.பி.எல்-1. ஆரம்பம் முதல் கடைசி வரை! வீட்டில் என்னைத் தனியாக விட்டு விட்டு, குழந்தை பெற்றுக் கொள்வதற்காக என் மனைவி ஊருக்குப் போயிராவிட்டால் அதுவும் நடந்திராது. பதினைந்து வருடங்களுக்கு முன்பு, எனக்கும் இந்த விளையாட்டுக்கும் இடையில் இவ்வளவு பெரிய இடைவெளி ஒன்று விழும் என்று நினைத்துக் கூடப் பார்த்திருக்க மாட்டேன். இன்று அது எதார்த்தமாகி இருக்கிறது. சும்மா - அப்படியே என்ன நடக்கிறதென்று பார்க்கலாமென்று ஈ.எஸ்.பி.என். பக்கம் வந்தேன். என் பால்ய காலத்தில் உயிருக்கும் மேலாக நேசித்த இந்த விளையாட்டுடனான என் உறவைப் புதுப்பித்துக் கொள்ளப் போகிறேனா? விளம்பர இடைவேளையின் போது கூட யாராவது சேனலை மாற்றினால் கிறுக்குப் பிடிப்பது போல் உணர்ந்த காலமொன்று உண்டு. பல சோலி பார்த்தலிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. இப்போது உணர்ந்திருப்பது என்னவென்றால், இது போன்றவைகளை எழுதுவதற்குப் பொ

நாகலாபுரம் - என் மால்குடி!

படம்
மிக நீண்ட இடைவெளிக்குப் பின் சமீபத்தில் சொந்த ஊருக்குச் சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. சொந்த ஊர் என்றால் என் பூர்வீகக் கிராமம் அல்ல. என் இளமைக் காலத்தின் பெரும்பான்மையான பகுதியைச் செலவிட்ட என் அம்மாவின் ஊர். உண்மையான சொந்த ஊரில் வளராத பெரும்பாலான மனிதர்களுக்குச் சொந்த ஊர் என்றாலே அப்படிப் பட்ட ஓர் ஊர்தான் நினைவுக்கு வருகிறது. தந்தை – தாத்தன் காலத்துப் பரம்பரை மண் எது என்று யோசித்தெல்லாம் அவர்கள் யாரும் சொல்வதில்லை. அப்படிப் பட்ட அனைவருமே, தந்தையுடனோ தாத்தாவுடனோ உடன் பிறந்த ஒரு பிடிவாதப் பேர்வழி நினைவு படுத்திக் கொண்டே இருந்தால் ஒழிய, தன் இளமைக் காலத்தின் அதிகப் பகுதியைச் செலவிடும் ஊரைத்தான் சொந்த ஊர் என்று சொல்கிறோம் அல்லது சொல்ல விரும்புகிறோம். அப்படிப் பெரும்பாலானவர்களுக்கு அமைகிற ஊர் அம்மாவின் ஊர் அல்லது அம்மாவின் அம்மாவுடைய ஊர். நமக்கு நேர்ந்ததே அம்மாவுக்கும் நேர்ந்திருக்குமல்லவா?! சிலருக்கு குடும்பத்தோடு பஞ்சம் பிழைக்கப் போன ஊராக இருக்கும் அது. இதில் அரசுப் பணி காரணமாக அடிக்கடி ஊரை மாற்றும் பெற்றோருடைய பிள்ளைகளின் சொந்த ஊர்களும் அடக்கம். அப்படித்தான் நிறையப் பேர் சம்பந்தம