இடுகைகள்

பொது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உங்கள் ஊர்

வணக்கம். என் ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் நாகலாபுரம் என்னுமொரு செம ஊர். என் ஊரைப் பற்றிப் பேசுவதென்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். எங்கள் ஊரைவிட நல்ல ஊர் இந்த உலகத்தில் இருக்குமா என்றொரு சந்தேகம் கூட எனக்கு உண்டு. உங்கள் ஊர் எப்படி? அதைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன். ஊர் என்றதும் உங்களுக்கு எந்த ஊர் நினைவுக்கு வருகிறது? நீங்கள் பிறந்த ஊரா? வளர்ந்த ஊரா? உங்கள் தந்தையின் ஊரா? தாயின் ஊரா? சொந்தமாக வீடு கட்டிய/வாங்கிய ஊரா? இது எல்லாமே ஒரே ஊர்தான் என்றால் நீங்கள் பாக்கியவன்தான். எனக்குத் தெரியும். நீங்கள் 5 வயதுக்கும் 20 வயதுக்கும் இடையில் அதிக காலம் வாழ்ந்த ஊர் எதுவோ அதைத்தான் சொல்வீர்கள். சிலர் ஒவ்வோர் ஆண்டும் கோடை விடுமுறைக்குச் சென்ற பாட்டி ஊரைச் சொல்வார்கள். நீங்கள்? உங்கள் ஊர் கிராமமா? நகரமா? இரண்டுக்கும் இடையிலா? உங்கள் ஊரில் உள்ள எல்லோருக்குமே எல்லோரையும் தெரியுமா அல்லது பக்கத்து வீட்டுக்காரர் பெயர் கூடத் தெரியாதா? இந்த ஊர் இதைவிடச் சிறிதாகவோ பெரிதாகவோ இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று நினைத்திருக்கிறீர்களா? ஒவ்வோர் ஊருக்கும் ஒரு சிறப்பு இருக்குமே! அப்படி உங்...

லியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை

லியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை ஆஸ்கர் விருது பெற்ற இந்த நடிகரின் சூழலியல் செயல்பாடுகள் அவருடைய முதல் ஆஸ்கர் பரிந்துரைப் படமான “வாட்’ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்” (‘What’s Eating Gilbert Grape’) காலத்திலிருந்தே தொடங்கியதில்லைதான். ஆனாலும் அவர் 1990-களிலிருந்தே கடல்கள் பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் தொடர்ந்து தன்னைப் பயிற்றுவித்து வருகிறார். லியனர்டோ டிகாப்ரியோ, ‘ரெவெணண்ட்’ (Revenant) படத்தில் தன் ஆஸ்கர் வென்ற பாத்திரத்திற்காக விலங்குச் சடலத்துக்குள் தன்னைச் சுற்றிக்கொண்டு, காட்டெருமையின் பச்சை ஈரலை வாந்தியெடுத்து, உடல்வெப்பக்குறைவு அபாயத்துக்கு உள்ளாவதற்குப் பல காலம் முன்பே காலநிலைப் போராளியானவர். டிகாப்ரியோ, தன் சிறந்த நடிகருக்கான ஏற்புரையை, உலகெங்கும் உள்ள பார்வையாளர்களை “பேராசை அரசியலை” நிராகரிக்கவும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வரும் தலைவர்களை ஆதரிக்கவும் வற்புறுத்துவதற்குப் பயன்படுத்தினார். “காலநிலை மாற்றம் மெய்யானது, அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது, அதுதான் நம் மனித இனம் முழுமையையும் எதிர்கொண்டிருக்கும் மி...

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்

பெரும வரலாற்றாசிரியரும் (Macro Historian), பேராசிரியரும், ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டேயஸ்’ஆகிய மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூல்களின் ஆசிரியரும், இந்த உலகின் மிகவும் புதுமையான மற்றும் கிளர்ச்சியூட்டும் சிந்தனையாளர்களில் ஒருவருமான யுவால் நோவா ஹராரி, தன் புத்தம்புதிய பணியான "21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்" நூல் பற்றி உரையாடுகிறார்.  இன்றைய மிக முக்கியமான பிரச்சனைகளின் வழியே “மிகவும் மனதை விரிவாக்கும்” ஒரு பயணமாகச் சொல்லப்படும் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூல், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் தலைசுற்றவைக்கும் - குழப்பமான மாற்றங்களுக்கு நடுவே நம் கூட்டு கவனத்தைப் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவுறுத்துகிறது.  நெறியாளர்: வில்சன் ஒயிட்.  நூல் வாங்க:  https://goo.gl/CVDJzG   யுவால் நோவா ஹராரியின் யூட்யூப் அலைவரிசை:  https://www.youtube.com/user/YuvalNoahHarari   யுவால் நோவா ஹராரி  21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்  செப்டம்பர் 14, 2018  வில்சன் ஒயிட்: அனைவருக்கும் மதிய வணக்கம், குறிப்பாக இங்கே கலிஃபோர்னியாவில் இருப்போரு...

இந்திய சுற்றுச்சூழல் ஆளுகையில் உள்ள அத்தனை கோளாறுகளுக்கும் சான்றாக இருக்கிறது ஸ்டெர்லைட்

கடந்த இருபது ஆண்டுகளில் ஐந்து முறை இழுத்து மூடப்பட்ட பின்னும் தொடரும் ஸ்டெர்லைட் காப்பரின் உய்வு, இந்தியாவின் நெளிவுசுளிவான கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு நிறையக் கடன்பட்டிருக்கிறது தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் காப்பர் ஆலை மூடப்பட்டுள்ளது. இப்போதைக்கு. எதிர்பார்த்தபடியே, ஒரு மாசுபடுத்தும் தொழிலுக்கு எதிரான 23 ஆண்டு காலப் போராட்டம் வெற்றிகரமாக முடிந்துவிட்டதால், எல்லோரும் மகிழ்ச்சியடைந்தனர், அது ஒரு மாபெரும் மனித விலை கொடுத்துப் பெறப்பட்டது என்றாலும் கூட. ஆனால் தமிழகத்தின் இந்தக் கடற்கரை நகரத்தில் ஓர் அமைதியான கலக்கம் இருக்கிறது. இத்தோடு போராட்டத்தை நிறுத்திவிட வேண்டுமோ என்று ஓர் உணர்வு ஏற்பட்டிருக்கிறது. 13 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்ட மே 22 காவல்துறை துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் கோபத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் அம்மக்களிடம் பேசிப் பார்க்கும் போது அந்த உணர்வு நன்றாகப் புலப்படுகிறது. அன்று, இங்கிலாந்தைச் சேர்ந்த வேதாந்தா லிமிடெடுக்குச் சொந்தமான இந்தியாவின் மிகப்பெரிய தாமிர உற்பத்தி நிறுவனமான இந்த ஆலையை மூடக்கோரி, சுமார் 15,000 மக்கள் தெருக்களுக்கு வந்திருந்தனர். தாமிர உருக்கு எ...