உளறல்.காம்
எத்தனையோ அரசியல் அறிஞர்கள், ஆன்மீக ஆய்வாளர்கள், இலக்கியச் சொற்பொழிவாளர்கள், தத்துவ ஞானிகளின் பேச்சுகளும் உரைகளும் கேட்கிறோம். ஒவ்வொருவருடைய பேச்சும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையதாக இருக்கிறது. சிலர் பேச்சில் அனல் பறக்கிறது; சிலர் பேச்சில் இடி இடிக்கிறது; சிலர் பேச்சில் கருத்துக்கள் கொத்துக் கொத்தாய் விழுகின்றன; சிலர் பேச்சில் நகைச்சுவையும் நையாண்டியும் அருவியாய்க் கொட்டுகின்றன; சிலர் பேச்சில் அடுக்கு மொழி வசனங்கள் அழகழகாய் அலங்காரம் செய்கின்றன; சிலர் பேச்சு கவிதைகளும் பாடல்களுமாக இனிக்கின்றன. சிலர் பேச்சில் எங்கெங்கிருந்தோ மேற்கோள்கள் வந்து இறங்குகின்றன. இப்படி அத்தனை விதமான பேச்சுகளிலும் ஒவ்வோர் அழகு. இவை எல்லாவற்றையும் விட குடிகாரர்களின் உளறலிலும் மனநிலைக் கோளாறு உள்ளவர்களின் பேச்சிலும் எனக்கொரு தனிவித சுவையை உணர முடிகிறது. சிலர் இயற்கையாகவே எது பற்றிப் பேசினாலும் தெள்ளத் தெளிவாகப் பேசும் ஆற்றல் படைத்தவர்கள். அவர்களைப் பேச விட்டுக் கேட்பதில் ஓர் அலாதி இன்பம் இருக்கிறது. அவர்கள்தாம் சரியான வாய்ப்புகள் கிடைக்கும் போது, மிகச் சிறந்த பேச்சாளர்கள் ஆவது. இயல்பாகவே பேசப் பிடிக்காதவர்கள் கூட