இடுகைகள்

மார்ச், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 8/9

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... ஓட்டுனர் உரிமம் வந்த இடத்தில் நீண்ட காலம் இருக்கப் போகிற ஆசையில் ஓட்டுனர் உரிமம் வாங்கிவிட வேண்டும் என்று இறங்கியது பெரிய தப்பாகி விட்டது. சிங்கப்பூரில் இருக்கும் போதே சொந்தமாக ஒரு கார் இல்லாமல் இருப்பது பெரிய பிரச்சனையாக இருந்தது. இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு முழுக்க முழுக்கப் பொதுப் போக்குவரத்தையே சார்ந்திருப்பதும் டாக்சிகளில் போய் வருவதும் சிரமந்தான். அதுவும் இந்தியாவில் எங்கு போவதாக இருந்தாலும் காரிலேயே போய் வந்து பழகி விட்டவர்களுக்கு இது கடினமாகத்தான் இருக்கும். இங்கே இருக்கிற எல்லோரு