தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் - என் தனிப்பட்ட நிலைப்பாடுகள்
எனக்கு விபரம் தெரிந்து அரசியல் கவனிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து , ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் இவர்கள் வென்றால் நல்லது அல்லது இவர்கள் தோற்றால் நல்லது என்று கணக்குகள் போட்டு வருகிறேன். எந்தக் காலத்திலும் இந்தக் கட்சிதான் எங்கள் கட்சி, அதனால் அவர்கள்தாம் வெல்ல வேண்டும் என்று கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்ததாக எனக்குத் தெரியவில்லை. மற்றவர்கள் அதை எப்படி எடுத்துக் கொள்வார்களோ தெரியவில்லை. நிலைப்பாடு எடுப்பதில் கூட ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிப்பிட்ட பாணி இருக்கிறது; சில அடிப்படைக் காரணங்கள் – உள் நோக்கங்கள் இருக்கின்றன. அப்படி நான் எப்போதும் முக்கியத்துவம் கொடுப்பது ஊழலின்மைக்கு. அதற்கடுத்தபடியாக மக்களுக்கான செயல்பாடு. அதன்பின்தான் கொள்கை, கோட்பாடு, சாதி-மத-இன-மொழிச் சார்புகள் போன்ற மற்ற காரணிகள் எல்லாம். யாருக்கு எப்படியோ எனக்கு என்ன தோன்றியது என்பதைப் பற்றிய ஒரு பார்வைதான் இந்தக் கட்டுரை. எனவே மொத்தக் கட்டுரையும் உங்களுக்கு உடன்பாடாக இருக்கப் போவதில்லை. கண்டிப்பாகப் பல முரண்பாடுகள் வரும். கவனம்! ஊழல் செய்யாமல் மட்டும் இருந்து விட்டால் போதுமா? அது நல்லாட்சி ஆகி விடுமா? ஊழல் அரசியலில