இடுகைகள்

ஏப்ரல், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மொழியும் மதமும்

உணர்ச்சி - வெறுப்பு அரசியல் செய்யும் ஆட்களில் பெரும்பாலும் முதலில் தமிழனாக இருந்து பின்னர் இந்துவான கூட்டங்களின் பிள்ளைகள் மொழிவாத அரசியலையும், முதலில் இந்துவாக இருந்து பின்னர் தமிழனான கூட்டங்களின் பிள்ளைகள் மதவாத அரசியலையும் வெறி கொண்டு ஆதரிக்கிறார்கள். இதில், "பின் ஏன் முதலில் தமிழராக இருந்து, பின்னர் இந்துவாகி, பின்னர் வேறு ஏதோ மதத்துக்குப் போனவர்களின் பிள்ளைகள் மட்டும் மொழிவாத அரசியலைவிட மதவாத அரசியலை அதிகம் ஆதரிக்கிறார்கள்?" என்ற கேள்வியும் வேறுவிதமான பதில்களை நோக்கித் தொக்கி நிற்கின்றன. வேறு ஏதாகவோ இருந்து பின்னர் இந்துவாகவும் தமிழனாகவும் ஆன கூட்டங்களின் பிள்ளைகள் திராவிட அரசியலை ஆதரிக்கிறார்கள் அல்லது தமிழனாகும் முன்பே இந்துவானதால் மதவாத அரசியலை ஆதரிக்கிறார்கள் என்றும் யாராவது இங்கே பொடி வைக்கக் கூடும். அதுவும் சரிதான் என்பதால் கேட்டுக் கொள்வோம். ஆக, எல்லோரும் தத்தம் பிறப்புக்கு உண்மையாக இருக்கிறார்கள். அதுதானே தர்மம் என்றால், இதில் நல்லது - கெட்டது பற்றி என்ன கருமத்துக்குப் பேச வேண்டும்? இது ஒரு பெரும் ஆராய்ச்சிக்கான பொருள். இதுவும் உணர்ச்சி - வெறுப்பு அரசியலுக்கா

கோடைதான்

உன் வருகைக்கு முன்பும் பிரிவுக்குப் பின்புமான வாழ்க்கை சென்ற கோடைக்கும் இந்தக் கோடைக்கும் இடையிலான வேறுபாடு போலத்தான் வறட்சிதான் என்றாலும் நடுவில் வந்து சென்ற அழகிய மழைக்காலத்தின் நினைவுகள் சூட்டைத் தணிக்கவும் செய்கின்றன தகிப்பையும் தவிப்பையும் பெருக்கவும் செய்கின்றன

உளநோய்

சாமியாடி வழிந்தோடிய எம் தாய்மாரின் உளக்கொதிப்பெல்லாம் உளவுலைக்குள்ளேயே தேங்கி உருக்குலைக்கின்றன எம் பிள்ளைகளை உள நோய்களாய்

பழி

எனக்கு ஒரு கண் போனாலும் உனக்கு இரு கண்கள் போக வேண்டும் என் இரு கண்களையும் இழந்தாவது உனக்கு ஒரு கண்ணாவது போக வைப்பேன் உன் மேல் பழி விழுமென்றால் என் கண்களைக் கூட இழக்கத் தயார்

அரசு அலுவலகம்

தமிழ்ல போட்ற எல்லாத்தையும் இங்கிலீஷ்ல போட முடியாது. ஆனா இங்கிலீஷ்ல போட்ற எல்லாத்தையும் தமிழ்ல போடலாமே! அதனால... இதையும் போட்ருவோம்னு ஒரு முடிவு. கொஞ்சநாள் முன்னாடி, சில ஆவணங்கள் கொடுப்பதற்காக ஒரு தனியார் நிறுவனத்துக்குப் போயிருந்தேன். அங்க இருந்த ஆள், கனிவான சிரிப்போடு, "சார், இது ஒரே பேப்பர்ல முன்னும் பின்னும் பிரிண்ட் பண்ணக் கூடாது. பரவால்ல. குடுங்க" என்றார். ஆனாலும், "இப்பிடிப் பிரிண்ட் பண்ணக் கூடாதுன்னு எந்த விதிமுறைல இருக்குன்னு காட்ட முடியுமா?"-ன்னு கேட்டுத் திமுர் பண்ணேன். விதி வலியது இல்லையா? இன்னைக்கு ஓர் அரசு அலுவலகத்துக்கு ஒரு வேலையாப் போனேன். அங்க இருந்த ஆள் ரெம்பக் கோவமாப் பேசுனாப்ல, "ஹலோ, இப்டிலாம் முன்னும் பின்னுமா ஒரே பேப்பர்ல பிரிண்ட் பண்ணக் கூடாது. போய்த் தனித் தனிப் பேப்பேர்ல பிரிண்ட் பண்ணிக்கிட்டு வாங்க". "சரி, சார்"-னு ரெம்பப் பவ்யமாச் சொல்லிட்டு (இதுல முக்கியமான மேட்டர் என்னன்னா, அவர் சாரெல்லாம் கெடையாது, அங்க இருக்கிற அல்லக்கை, அவ்வளவுதான்), குடுகுடுன்னு கொயந்த மாதிரி பிரிண்டிங் கடைக்குப் போனேன். அங்க போய், "இது கூடத்

மனிதன்

எத்தனை விந்தைகளை மொந்தையாக்கியவன்

நம்பிக்கை

என்னால் அவர்களைப் போல் விண்வெளிக்கெல்லாம் பயணிக்க முடியுமா தெரியவில்லை முதன் முதலில் அ முதல் ஃ வரை சொன்ன அண்ணனைப் பார்த்து அடைந்த மாதிரியாகவே பிரமிப்பாக இருக்கிறது

இதுவும் அதுவும்

இதுக்கு அது பரவாயில்லை என்றோம் அது இதுவானது இது அதுவானது இப்போதும் அதையே சொல்கிறோம் இதுக்கு அது பரவாயில்லை

பிழைத்திருத்தல்

பிழைத்திருத்தலுக்கான உயிரினங்களுக்கிடையிலான தொடர் போராட்டம் போலவே உயிரினங்களிலேயே தன்னை உயர்ந்ததாக எண்ணிக் கொண்டிருக்கிற மனித இனத்துக்குள்ளேயே உள்ள இனங்களுக்கிடையிலேயும் எது உயர்ந்தது என்று தொடர்கின்ற போராட்டமும் பிழைத்திருத்தலுக்கானதுதானே! வலியது வாழ்வதும் எளியது வீழ்வதுமே இங்கும் நியதியாகிப் போனதா என்பது மட்டும் இன்னும் நிச்சயமாகத் தெரியவில்லை எது வலிமை என்பதே இன்னும் தீர்மானமாகத் தெரியவில்லையே! எளிமையுங்கூட வலிமையாகப் படுகிறது சில இடங்களில் எளிமை போல் நடிக்கும் சூழ்ச்சியுங்கூட வலிமையாகப் படுகிறது சில இடங்களில் வலிமை போல் நடிக்கும் சூழ்ச்சியுங்கூட வலிமையாகப் படுகிறது சில இடங்களில் ஆக கடைசியில் வலிய உயிரினங்களும் வலிமை எதுவென்றறிந்த மனித இனங்களும் மட்டும் தப்பிப் பிழைத்திடுமோ?

நினைவுகள் போல்

நிறையக் கேட்கவில்லை நினைவுகள் போலொரு வாழ்க்கை போதும்