இடுகைகள்

அக்டோபர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கடிதங்கள் கழிதலும்

எனக்குச் சிறு வயது முதலே கடிதம் எழுதுவதில் ஓர் ஈர்ப்பு இருந்தது. அது என் முன்னோர்களிடமிருந்து எனக்கு வந்தது. என் தாத்தா முதலில் காந்தியடிகளையும் பின்னர் நேதாஜியையும் பின்பற்றி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். காந்தியைப் போலவே அவரின் தொண்டர்களும் கடிதம் எழுதுவதில் ஆர்வமுடையவர்கள் என்பார்கள். சிறு வயதிலிருந்தே தாத்தா எழுதிய பல வரலாற்றுச் சிறப்பு மிக்க கடிதங்கள் பற்றி வீட்டில் அடிக்கடிப் பேசக் கேள்விப்பட்டது மட்டுமில்லாமல், தாத்தாவின் சீடர்களான சித்தப்பாக்கள் சிலரும் அப்படியே கடிதங்கள் எழுதுபவர்களாக இருந்தது, எனக்கும் கடிதங்கள் மீது அளவில்லா ஈடுபாட்டைக் கொடுத்தது. ஆண்டுக்கு ஒரு முறையோ அதைவிடவும் குறைவாகவோ சந்திக்கும் சில உறவினர்களோடு பேசும் போது, அவர்களுடனேயே இருந்து அவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கும். அவர்களின் வாழ்க்கை அனுபவங்களில் இருந்து நமக்கும் படிக்க எவ்வளவோ கொட்டிக் கிடப்பது போல இருக்கும். ஏனென்றால் அவர்கள் வேறு யாரோ அல்லர்; நம்மில் ஒருவர் - நம்மைப் போன்ற பின்னணியிலேயே பிறந்து வளர்ந்து சாதித்திருப்பவர்கள். அவர்களின் சாதனைக் கதைகளைக் கேட்கும் போது நா