இடுகைகள்

ஜனவரி, 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தின் தியானி காதலி (Eat Pray Love)

மணவாழ்க்கை முறிவுக்குப் பின் அதன் கொடிய நினைவுகளிலிருந்து விடுபடுவதற்காக உலகம் சுற்றப் புறப்பட்ட ஒரு பெண்ணின் சொந்தக் கதைதான் 'Eat Pray Love'. நூலில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு பெயரைத் தவிர மற்ற எல்லாப் பெயர்களும் மாற்றப்பட்டவை என்று சொல்கிறார் இதன் ஆசிரியர் எலிசபெத் கில்பெர்ட். எனவே இது புனைவல்ல. அபுனைவு வகையிலேயே சேரும். ஆனாலும் ஒரு புனைவுக்கு உரிய சுவாரசியம் இருக்கிறது. எனவே அது எங்கு போய் முடியுமோ அங்கு முடியவும் செய்தது. ஆம், பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது. எலிசபெத் கில்பெர்ட் இந்த நூலை எழுதுவதற்கு முன்பே எழுத்தாளர்தான். ஆனால் இந்த நூல்தான் அவரை மிகவும் பிரபலமாக்கியது. இத்தாலி, இந்தியா, இந்தோனேசியா என்று 'இ'யில் தொடங்கும் பெயர் கொண்ட மூன்று வெவ்வேறு நாடுகளுக்குச் செல்கிறார். ஒவ்வொரு நாட்டிலும் என்ன செய்தார் என்பதே இந்த மூன்று சொற்களைத் தலைப்பாகக் கொண்ட நூலின் உள்ளடக்கம். இத்தாலியில் தின்று தின்று தூங்குகிறார். இந்தியாவில் வந்து ஓர் ஆசிரமத்தில் தன்னைத் தேடுகிறார். அடுத்து இந்தோனேசியா போய் ஒரு வயது மூத்த பெரியவரோடு வெறிகொண்டு காதல் செய்கிறார். சிற்றின்பம்-பேரின்