பழையன கழிதலும் & யாதும் ஊரே!
என் நண்பன் ஒருவன் அடிக்கடி BURN THE BRIDGES என்று சொல்வான். அதன் நேரடிப் பொருள் "பாலங்களைக் கொளுத்து" என்ற போதிலும் அது சொல்லப் படும் இடம் பொதுவாக, "பழைய உறவுகளை மற்றும் நினைவுகளைக் கொளுத்து!" என்று அறிவுரைப்பவையாக இருக்கும். நம்முடைய மொழியில் சொல்ல வேண்டுமென்றால், 'பழையன கழித்தல்' ஓரளவு அதற்கு அருகில் வரும். ஆனாலும் அதில் அவ்வளவு மூர்க்கம் தெரியவில்லை. அது போகிப் பண்டிகைக்கே உரித்தான ஒரு சொல்லாடலாக நம் மனதில் பதிந்து விட்டது ஒரு காரணமா என்று தெரியவில்லை. 'பழையன கழித்தல்' என்பதே பாய்-தலையணை முதலான பழைய தட்டு முட்டுச் சாமான்களைக் கொளுத்துதல் என்றே மனதில் தோன்றுகிறது. அதே வேளையில் அவர்களின் பாலத்தைக் கொளுத்தும் வேலையென்பது உறவு, நினைவு மற்றும் அவற்றுக்கும் மேலான பலவற்றையும் குறிக்கக் கூடிய கனம் கூடிய சொல்லாடல். மேலோட்டமாக இந்தக் கருத்தில் உடன்பாடு இல்லை என்ற போதிலும் அந்தச் சொல்லாடல் மிகவும் பிடித்திருந்தது. எல்லோருக்கும் என்றில்லாவிட்டாலும் சிலருக்கு இது ஒரு முக்கியத் தேவையாக இருக்கிறது. அதில் நீங்கள் எப்படி என்று தெரியவில்லை. :) நாம் படிக்கும் இ