இடுகைகள்

2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டான் ப்ளூம் நேர்காணல்: "க்ளை-ஃபை" படைப்பாளி

டான் ப்ளூம் நேர்காணல்: "க்ளை-ஃபை" படைப்பாளி வில்லியம் ஏ. லிகெட் - டிசம்பர் 11, 2018 #க்ளை-ஃபை (#clifi) என்ற கொத்துக்குறியுடன் (hashtag) என் பருவநிலைப் புனைவுப் புதினமான ‘வாட்டர்மெலான் ஸ்னோ’ (Watermelon Snow) பற்றி என் நண்பர் ஒருவர் டிவீட் அனுப்பிய போதுதான் முதலில் டானைச் சந்தித்தேன். பருவநிலைப் புதினம் - கிளைமேட் ஃபிக்ஷன் (cli-fi) என்ற புதிய வகைமைக்கும் டானின் வலைத்தளம் cli-fi.net-க்கும் என் கண்களைத் திறக்கும் வகையில், டானே அந்த டிவீட்டுக்குப் பதிலளித்திருந்தார். அப்போதிருந்தே புனைவு எழுதுதல், கல்வி, மற்றும் பிரபல நூல்கள் பற்றிய கட்டுரைகளில் cli-fi-க்கான மேற்கோள்களைக் காணத் தொடங்கினேன். புதியவர்கள், முதுவர்கள் என இரு சாராரையும் இந்த வகைமையில் எழுத டான் சுறுசுறுப்பாக ஆதரித்து வருகிறார். 2017-இல் ‘வாட்டர்மெலான் ஸ்னோ’ வெளியாகும் நேரத்தில் என்னைப் பற்றியும் அந்த நூலைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதினார். “க்ளை-ஃபை” எப்படி உருவானது என்றும் அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றியும் உரையாட பெருந்தன்மையோடு ஒரு நேர்காணலுக்கு ஒத்துக்கொண்டார். பருவநிலைப் புனைவில் உங்களின் இந்த ஆர்வத்துக்

லியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை

லியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை ஆஸ்கர் விருது பெற்ற இந்த நடிகரின் சூழலியல் செயல்பாடுகள் அவருடைய முதல் ஆஸ்கர் பரிந்துரைப் படமான “வாட்’ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்” (‘What’s Eating Gilbert Grape’) காலத்திலிருந்தே தொடங்கியதில்லைதான். ஆனாலும் அவர் 1990-களிலிருந்தே கடல்கள் பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் தொடர்ந்து தன்னைப் பயிற்றுவித்து வருகிறார். லியனர்டோ டிகாப்ரியோ, ‘ரெவெணண்ட்’ (Revenant) படத்தில் தன் ஆஸ்கர் வென்ற பாத்திரத்திற்காக விலங்குச் சடலத்துக்குள் தன்னைச் சுற்றிக்கொண்டு, காட்டெருமையின் பச்சை ஈரலை வாந்தியெடுத்து, உடல்வெப்பக்குறைவு அபாயத்துக்கு உள்ளாவதற்குப் பல காலம் முன்பே காலநிலைப் போராளியானவர். டிகாப்ரியோ, தன் சிறந்த நடிகருக்கான ஏற்புரையை, உலகெங்கும் உள்ள பார்வையாளர்களை “பேராசை அரசியலை” நிராகரிக்கவும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வரும் தலைவர்களை ஆதரிக்கவும் வற்புறுத்துவதற்குப் பயன்படுத்தினார். “காலநிலை மாற்றம் மெய்யானது, அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது, அதுதான் நம் மனித இனம் முழுமையையும் எதிர்கொண்டிருக்கும் மி

'அச்சம்: வெள்ளை மாளிகையில் டிரம்ப்': நூலுரையாடல்

'Fear: Trump in the White House' என்கிற நூல் வெளிவந்து ஓராண்டு கூட ஆகவில்லை. 2 மில்லியன் பிரதிகளுக்கும் மேல் விற்றுத் தீர்ந்துவிட்டது. இதில் முதல் ஒரு மில்லியன் முதல் வாரமே விற்றது. இப்போது அடுத்த தேர்தலுக்கு சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் இந்த நூலைப் பற்றிய பேச்சு மீண்டும் கூடும். டிரம்ப் அரசு எப்படிப் பட்டது, டிரம்பும் டிரம்பின் ஆட்களும் எப்படிப் பட்டவர்கள் என்பதை அவர்களுடனேயே பேசி வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்தும் வேலையைச் செய்திருக்கிறார் இந்த நூலின் ஆசிரியர் பாப் வூட்வர்ட் (Bob Woodward). பாப் வூட்வர்ட் யார்? இவர் ஓர் எழுபது வயதுக்கும் மேலான, அமெரிக்க அரசியலைப் பழம் தின்று கொட்டை போட்ட, இதுவரை ஒன்பது அதிபர்களின் தூக்கத்தைக் கெடுத்த, முதிய-முதிர்ந்த பத்திரிகையாளர். ஏற்கனவே அமெரிக்காவின் பல பெரும் பெரும் பிரச்சனைகளைப் பற்றி விலாவாரியாக எழுதிக் கொட்டியவர். இதுவரை அவர் எழுதியுள்ள 18 நூல்களில் 12 அந்தந்தக் காலத்தில் விற்பனையில் முன்னணியில் இருந்தவை. கிட்டத்தட்ட அமெரிக்காவில் பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் எல்லா விருதுகளையும் பெற்றவர். இதழியல் துறையில் உ

ஜே டி வான்ஸின் 'ஹில்பிலி எலஜி' ('Hillbilly Elegy' by J D Vance) - மலையக ஒப்பாரி: நூல் அறிமுகம்

நம்மூரில் இவர்கள் இப்படித்தான் என்று சாதி, மத, மொழி மற்றும் இன்னபிற காரணிகளின் அடிப்படையில் அவர்களைப் பொதுமைப்படுத்துவது போல, அமெரிக்காவில் வெள்ளையர்கள் என்றால் மேலான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் கறுப்பர்கள் மற்றும் ஹிஸ்பானியர்கள் கீழான வாழ்க்கை வாழ்பவர்கள் என்பது போலவும் ஒரு பொது எண்ணம் இருக்கும் அல்லவா! மேலானவர்கள் - கீழானவர்கள் என்றில்லை, அவர்களுடைய வாழ்க்கையே மேலானதாகவோ கீழானதாகவோ இருக்கும் என்று எண்ணுவது. அது இயல்புதானே! அது முற்றிலும் உண்மையல்ல என்கிற ஒரு நூல் இது. அது மட்டுமே அல்ல. இன்னும் நிறைய இருக்கிறது. 'ஹில்பிலி' என்பது அமெரிக்காவில் உள்ள உழைக்கும் வெள்ளையர் இனத்தவருக்கான பட்டப்பெயர். அதாவது நாம் 'காட்டான்' என்கிறோமே, அது மாதிரியான ஒரு பெயர். கேரளாவில் நம்மை 'பாண்டி' என்கிறார்களே, பம்பாயில் இந்திக்காரர்களை 'பையா' என்கிறார்களே, அந்த மாதிரியும் சொல்லலாம். அதாவது, படிப்பறிவில்லாத, முரட்டு - முட்டாள் என்பது போன்ற எண்ணத்தில் உயர் வர்க்க வெள்ளையர்களால் இழிவாகச் சொல்லப்படும் விளிச்சொல். இவர்கள் எல்லோருமே பெரும்பாலும் ஸ்காட்லாந்து, அயர்லாந்

நேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ்

நேர்காணல்: தட்பவெப்ப மாற்றத்தின் புதினங்கள், வணிகம் மற்றும் சமூகவியல் பற்றி அமிதவ் கோஷ் ‘தட்பவெப்ப மாற்றப் புனைவுக்கென்று தனி வகைமை இருக்கும் போது, அது அன்றாட வாழ்க்கையின் தீவிரத்தோடு தொடர்பில்லாத தனியான ஒன்றாகிவிடுகிறது. ஆனால் அது நம் அன்றாட வாழ்க்கையோடு முற்றிலும் பின்னிப் பிணைந்துள்ள ஒன்று.’ அமிதவ் கோஷ், தன் புதிய கட்டுரைத் தொகுப்பு நூலான, த கிரேட் டிரேஞ்ஜ்மெண்டில் (The Great Derangement), இன்றைய தட்பவெப்ப நெருக்கடியின் வடிவத்தில் மனித குலத்தை அதன் இன்றைய இக்கட்டான நிலைக்கு இட்டு வந்துள்ள கதை சொல்லல், வரலாறு, அரசியல் ஆகியவற்றின் தோல்விகள் பற்றி ஆய்வு செய்கிறார். அந்த மெல்லிய தொகுதியின் வீச்செல்லை பரந்து விரிந்ததாக இருக்கிறது: மற்ற எத்தனையோ விஷயங்களுக்கு நடுவில், பொதுப்போக்குப் புதினங்களில் (mainstream novel) இயற்கையிலிருந்து தன்னை வேறாகப் பார்க்கும் நிலைக்கு மனிதகுலத்தைத் தள்ளிய கர்டீசிய இருமைவாதத்தின் விளைவுகள் பற்றி ஆராய்கிறார்; தட்பவெப்பப் பேரழிவைத் தன் குடும்பமே எப்படி எதிர்கொண்டது என்ற கதையைச் சொல்கிறார்; புயல் எழுச்சி ஏற்பட்டால் மும்பை போன்ற கடலோரப் பெருநகரத்துக்கு என்ன ஆகும்

யாதும் ஊரே: அமேரிக்கா 4

முதல் பாகம் அமேரிக்கா பற்றி, இரண்டாம் பாகம் கலிஃபோர்னியா மாநிலம் பற்றி, மூன்றாம் பாகம் லாஸ் ஏஞ்சலஸ் பற்றி என்றால், நான்காம் பாகம் எது பற்றி இருந்துவிடப் போகிறது! அதேதான். லாஸ் ஏஞ்சலசில் எந்தப் பகுதியில் வாழ்கிறோம் என்பது பற்றிப் பேசிவிடுவோம் இப்போது. அத்தோடு பொதுவாகவே அமேரிக்காவில் வாழும் இந்தியர்கள் பற்றி நிறையக் கதைகள் உண்டு. அவை பற்றியும் பேசிவிடுவோம். நாங்கள் வீடு பிடித்துத் தங்கி இருக்கும் இடத்தின் பெயர் 'டாரன்ஸ்'. டாரன்ஸ் என்பது லாஸ் ஏஞ்சலசில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் ஒன்று. இது போலப் பல பகுதிகள் இருக்கின்றன. பொதுவாகவே இங்கே இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதி எல்லாமே நல்ல பள்ளிகளைக் கொண்டிருக்கின்றன. நம்மவர்கள் நல்ல பள்ளிகள் உள்ள இடங்களைத் தேடி அடைவதும் உண்டு. நம்மவர்கள் குடியேறிய உடனேயே பள்ளிகளின் தரம் கூடிவிடுவதும் உண்டு. இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு நம்மூரில் கல்விக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தோமா என்று தெரியவில்லை. ஊருக்கு இரண்டு வீடுகளோ சிறிது பெரிய ஊராக இருந்தால் ஓரிரு தெருக்களோதான் நன்றாகப் படிக்கும் பிள்ளைகள் கொண்டிருக்கும். ஆனால் ஒழுங்காகப் பட