இடுகைகள்

அக்டோபர், 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கிரிக்கெட், மக்கட்தொகை மற்றும் இந்தியா

படம்
சிறு வயதில் இருந்தே கிரிக்கெட் பார்க்கும் போதெல்லாம் இந்தியா வெல்ல வேண்டும் என்றே வேண்டிக் கொள்வேன். அதுவும் முக்கியமான தொடர்களிலும் உலகக் கோப்பையிலும் என்ன விலை கொடுத்தாவது இந்தியா வென்று விட வேண்டும் என்று துடிப்பேன். ஏன்? அதேதான். சரியான விடை. ஏனென்றால், நான் இந்தியன். அது மட்டுமில்லை. இன்னொரு காரணமும் இருந்தது. என்ன அது? மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், இந்தியா வெல்கிற போதெல்லாம் ஒப்பற்ற அளவிலான உலக மக்கட்தொகை கொண்டாடிக் குதிக்கிறது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலேயே இந்தியாதான் அதிக மக்கட்தொகை கொண்டுள்ளது. எனவே இந்தியாதான் வெல்ல வேண்டும் என்றே சொல்வேன். இந்த உண்மையை அறிய உலகளாவிய அறிவெல்லாம் வேண்டியதில்லை. ஏனென்றால், சீனா கிரிக்கெட் ஆடுவதில்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும். ஆனால், நீண்ட காலமாகவே சரியான புள்ளிவிபரம் பற்றி அறிந்து கொள்ள ஆசைப் பட்டேன். இன்றுதான் அதற்கான நேரம் கொஞ்சம் கிடைத்தது. அதைப் பார்த்து சில அருமையான (!) கருத்துக்களைக் கண்டெடுத்திருக்கிறேன். இதோ... ஆஸ்திரேலியா 22,567,780 நியூ சிலாந்து 4,393,500 இலங்கை 21,513,990 பாகிஸ்தான் 174,578,558 இ

சிறார்-பெரார்

படம்
இளமைப் பருவம் முழுக்க எல்லோரும் போலவே எண்ணிக் கொண்டிருந்தேன்... சிறியோரெலாம் விபரமிலார்! பெரியோரெலாம் விபரமுளோர்! சிறிது பெரியவனாகையில்... சிறியோர் சிலர் பெரியோர் போலும் பெரியோர் பலர் சிறியோர் போலும் உருமாறி உருமாறி உணர்த்தினார்கள்... அதற்கும் வயதுக்கும் உறவே இல்லை!

அதே சாம்பல்

படம்
நம்மைக் காட்டிலும் நல்லோருடன் முடியவில்லை... நாம் அவர்களுக்குக் கெட்ட பிள்ளையாகி விடுகிறோம்! நம்மைக் காட்டிலும் கெட்டோருடன் முடியவில்லை... அவர்கள் நமக்குக் கெட்ட பிள்ளையாக இருக்கிறார்கள்! நம் போலவே நல்லோர் நம் அளவே நல்லோர் நம் போலவே கெட்டோர் நம் அளவே கெட்டோர் அதே அளவு கருப்பு அதே அளவு வெள்ளை அதே அளவு சாம்பல் தேடிக் கொண்டே இருக்கிறோம்... அவ்வப்போது அகப்படும் அது போன்ற சில ஆட்களும் அப்படியே தொடர்ந்திடுவதில்லை அது போன்றே இருந்திடுவதில்லை அதையும் மீறி அப்படியே இருந்து விட்டாலும் நாம் அவர்களையோ அவர்கள் நம்மையோ அப்படியே இருக்க விடுவதில்லை... அல்லது இருக்கவே விடுவதில்லை...

பெரும்பான்மை-சிறுபான்மை

படம்
பேசா விட்டாலும்  பெரும்பான்மைகளின் உரிமைகள் பெரிதும் பேணப்படும் சில முறை பேசினால் போதும்  சிறுபான்மைகளின் உரிமைகள் சிரத்தையோடு காக்கப் படும் பெரும்பான்மைப் போர்வையோடு பெரிதாய்க் கூச்சலிடும் சிறுபான்மைகளின் குரல்கள் பெரும்பாலும் புரிந்து கொள்ளப் படும் அவை செவிடன் காதில் சங்கு! பேசக்கூட முடியாத அளவு  பெரிதும் சிறுகி இருக்கும் சிறுபான்மைகளின் குரல்கள் சிறிதும் மதிக்கப் படா அவை செத்தவன் காதில் சங்கு!

உள்ளாட்சித் தேர்தல்: சில அனுபவங்களும் சிந்தனைகளும் - 3/3

படம்
அரசியல் என்றாலே துரோகங்கள் அதில் ஒரு முக்கிய அங்கம் என்ற போதிலும் உள்ளாட்சித் தேர்தல்கள்தான் ஒரே நேரத்தில் அதிக பட்சத் துரோகங்களை ஒருங்கே அரங்கேற்ற விட்டு வேடிக்கை பார்ப்பது. போட்டியில் இருக்கும் எல்லோருமே தெரிந்த ஆட்களாக இருக்கும் போது யாருக்கு ஆதரவு என்ற குழப்பம் உருவாகிறது. அதுவே பக்கம் விட்டுப் பக்கம் பாயும் பாதகச் செயலுக்கு வழி கோலுகிறது. கடைசி வரை வெளியில் ஒருவரை ஆதரிப்பது போல் பேசிவிட்டு திரை மறைவில் இன்னொருவருக்கு வேலைகள் செய்தல் நடக்கிறது. தலைவனாக வேண்டும் என்று ஆசையில் திரியும் ஒருவரிடம் ஐந்து வருடங்கள் ஏமாற்றி ஏமாற்றிப் பிடுங்கித் தின்று விட்டு, கூடுதலாகக் கொஞ்சம் பணத்தைப் பெற்றுக் கொண்டு சரியான நேரத்தில் அணி மாறி விடுகிற அவலங்கள் நடக்கின்றன. ஊர்க்காசைத் தின்ன ஆசைப் படுபவன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஊர்க்காரர்களின் இழுத்த இழுவைக்கெல்லாம் போக வேண்டும்; உண்மை பேசக் கூடாது; கேட்கும் உறுதிமொழிகளை எல்லாம் அள்ளிக் கொடுக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால், ஆசை நிறைவேறாது. எது பெட்டர்? எதிராளியைப் பலவீனப் படுத்த, தனிப்பட்ட முறையில் ஒருவருடைய செல்வாக்கை வீழ்த்தும் வகையில் என்னென

உள்ளாட்சித் தேர்தல்: சில அனுபவங்களும் சிந்தனைகளும் - 2/3

படம்
முன்னுரை: நான் இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவன் அல்ல. ஒடுக்கப் பட்ட மக்கள் ஒடுங்கியே கிடக்க வேண்டும் என்று எண்ணுபவனும் அல்ல. என் குடும்பப் பின்னணி மற்றும் இளமைக் கால வாழ்க்கை பற்றி அறிந்தவர்கள் இதை அறிவார்கள். பெண்கள் அடுப்பூதிக் கொண்டே இருக்க வேண்டும் என்றே எண்ணிக் கொண்டிருக்கும் ஆளும் இல்லை. உண்மையை என் மனைவியிடம் வந்து விசாரித்துப் பாருங்கள் (எனக்குள்ளும் கொல்ல முடியாத ஆணாதிக்க குணங்கள் இருக்கிறது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்; ஆனால் பெண்கள் நிறைய முன்னுக்கு வரவேண்டும் என்று மனமார விரும்புகிறேன்; பல இடங்களில் அவர்கள் ஆண்களை விட மிகச் சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள் என்பதையும் பார்த்திருக்கிறேன்; ஏற்றுக் கொள்கிறேன்!). உண்மையில், சாதிகள் மற்றும் பாலினம் கடந்து சமத்துவம் தலை தூக்க வேண்டும் என்று மனமார ஆசைப் படுவோரில் நானும் ஒருவன். "இதை நம்ப முடியாது. சும்மா வெளிப் பேச்சுக்கு அப்படிப் பேசுகிறாய்!" என்று சொல்வீர்களேயானால் உங்களிடம் ஒன்றும் சொல்வதற்கில்லை. விட்டு விடுங்கள். நான் சொல்வதில் சிறிதேனும் நம்பிக்கை இருந்தால், நான் சொல்லப் போகும் கருத்துக்களைத் திறந்த மனதோடு படித்து, ஆரோ

உள்ளாட்சித் தேர்தல்: சில அனுபவங்களும் சிந்தனைகளும் - 1/3

படம்
ஒட்டுமொத்தமாகவே நம் அரசியல் நாறிப் போய் விட்டது என்றாலும், உள்ளாட்சித் தேர்தல்தான் அது எவ்வளவு நாறிக் கிடக்கிறது என்பதைச் சரியாகப் புரிந்து கொள்ளச் சரியான தருணம் போலத் தெரிகிறது. பொதுத் தேர்தல்களில் பணி புரியும் மூஞ்சிகளைக் கண்டுதான் அது எவ்வளவு கேவலமாகி இருக்கிறது என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லக்கை வேலை பார்த்த அதே மூஞ்சிகள் இப்போது அவரவர் தகுதிக்கேற்ப ("இங்கே எங்கிருந்துடா தகுதி வந்தது?" என்கிறீர்களா?) வேட்பாளராகி வலம் வருகின்றன. வேட்பு மனுத் தாக்கல் செய்யும் பகுதிப் பக்கம் போனாலே, இதையெல்லாம் பார்த்து எங்கே சீக்கிரம் செத்துப் போவேனோ என்று பயமாக இருக்கிறது. கடுமையான மது வாடை, குண்டக்க மண்டக்கச் சேட்டைகள் செய்யும் அடாவடித்தனம், முகம் சுளிக்கும் அளவுக்கு அநாகரிகமான கெட்ட வார்த்தைப் பேச்சுகள்... இவற்றுக்கெல்லாம் உள்ளாட்சி அமைப்புகளில் எப்போது இடம் கொடுக்கப் பட்டது? இவர்கள் எல்லாம் உள்ளே வந்து என்ன 'முடி'யைப் பிடுங்கி விடப் போகிறார்கள்? இதிலும் ஏகப்பட்ட நியாயங்கள் சொல்லப் படுகின்றன. குடிகாரன், ரவுடி, கெட்ட வார்த்தை பேசுபவன் எல்லாம் பதவிக்கு வரக் கூடாதா?

ஆஸ்கார் நாயகனின் அம்'மனம்'!

படம்
கமலின் ரசிகன் என்று சொல்ல முடியாது. எப்போதுமே யாருக்குமே ரசிகனாக இருக்க விரும்பியதில்லை. ஆனால், நீண்ட காலமாகத் தமிழ்ச் சினிமாவில் அதிகம் மதித்த ஆள் கமல். நடிப்புக்காக மட்டுமல்ல... அவருடைய பேச்சுக்காகவும் அறிவாற்றலுக்காகவும் ஒட்டு மொத்தத் திறமைக்காகவும்! சில மாதங்களுக்கு முன் கமல் பேசிய ஒரு பேச்சு பற்றி இன்று கேள்விப் பட்ட போது காறித் துப்பலாம் போல உணர்ந்தேன். சிறந்த கலைஞர்கள் பெரும்பாலும் திறந்த கலைஞர்களாகவே இருப்பது நம் சாபக் கேடா? 'திறந்த' என்றால் 'மனம் திறந்த' என்று அதைப் பெருமைப் படுத்தி விட வேண்டாம். மனதின் அசிங்கத்தை மறைக்கத் தெரியாத அசிங்கம் அது. "எம்.எஸ்.விஸ்வநாதனும் இளையராஜாவும் விட்டுச் சென்ற சிம்மாசனம் இன்னும் காலியாகவே உள்ளது. அதை தேவிஸ்ரீ பிரசாத் தான் நிரப்ப வேண்டும்!" என்று சொல்லியிருக்கிறார். இப்படியொரு கருத்தைச் சொல்வதன் உள்நோக்கம் என்னவென்று இதைப் படிக்கும் எவருக்கும் மிக எளிதாகவே புரிந்து விடும். ரஹ்மான் என்ற கலைஞனை அவமானப் படுத்த முனைந்த அரைவேக்காட்டுத்தனம்தான் அது. அது எதற்காக? ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியபோதே என் தம்பி சொன்னான் - "இனி

திராவிடத் திருடர்களும் தேசியத் திருடர்களும்

படம்
திராவிடத் திருடர்களுக்கும் தேசியத் திருடர்களுக்கும் (திருடுபவர்கள் பற்றி மட்டுமே பேசுகிறேன். அதனால் மற்றவர்கள் கோபப் பட வேண்டியதில்லை!) என்ன வேறுபாடு? திராவிடத் திருடர்கள் பார்க்கவும் திருடர்கள் போலவே இருக்கிறார்கள். அதனால் மக்கள் அவர்கள் செய்யும் திருட்டை எளிதில் நம்பி விடுகிறார்கள்; அவர்களை எளிதில் வெறுத்து விடுகிறார்கள். தேசியத் திருடர்கள் எவ்வளவு திருடினாலும் நம்ப முடிவதில்லை; நம்பினாலும் வெறுக்க முடிவதில்லை. காரணம்? வெள்ளைத் தோலா? அல்லது வேறு எதுவுமா?

காங்கிரசும் சத்தியமூர்த்தி பவனும்

படம்
காங்கிரஸ்காரர்கள் ஒவ்வொரு தேர்தலிலும் ஓட்டுப் போடுகிறார்களோ இல்லையோ சத்தியமூர்த்தி பவனைச் சூறையாடுகிறார்கள். அடித்து நொறுக்கும் வேலையைச் செய்யும் ஆட்கள் மட்டும் வாக்களித்தால் போதும். கட்சிக்கு டெபாசிட் மட்டும் கிடைத்து விடும். காசை வாங்கிக் கொண்டு எங்கு வேண்டுமானாலும் போய் கலாட்டப் பண்ணுபவர்கள் அதே காசை இன்னும் கொஞ்சம் அதிகமாக வாங்கிக் கொண்டு ஓட்டை மட்டும் வேறு யாருக்காவது போட்டு விடுகிறார்கள். அது சரி, தயவுசெய்து அந்தக் கட்டடத்தின் பெயரையாவது மாற்றுங்கள் சாமிகளா. அந்த நல்ல மனிதரை ஏன் போட்டு அடித்து நொறுக்கிக் கேவலப் படுத்துகிறீர்கள்?