கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 6/9
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... பாதுகாப்பு இந்தியாவில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றன. வளர்ந்த நாடுகளுக்கும் வளரும் நாடுகளுக்கும் வளரா நாடுகளுக்கும் எவ்வளவோ வேறுபாடுகள். வன விலங்குகளைவிட மனித இனம் எவ்வளவு மேலானது என்று படுகிறதோ அதே அளவுக்கு மனிதருக்குள்ளேயே ஒரு சாரார் பண்பட்ட மனிதர் போல் மேலான வாழ்க்கையும் இன்னொரு சாரார் விலங்குகளைப் போலக் கொடூரமான வாழ்க்கையும் வாழ்கிறார்கள். விதிகளை மதித்தல், மனிதர் உயிர்க்குக் கொடுக்கும் மரியாதை போன்று பல விசயங்களில் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் மேலானவையாகப் பட்டாலும், அடிப்படையான சில