இடுகைகள்

மே, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கலாச்சார வியப்புகள் - மீண்டும் இங்கிலாந்து - 9/9

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! வியப்புகள் தொடர்கின்றன... குதிரைகள் இங்கிலாந்தில் இன்னும் குதிரைகள் மற்றும் குதிரை வண்டிகள் நிறைய இருப்பது போற் தெரிகிறது. நகரத்துக்குள்ளேயே பல இடங்களில் பார்த்திருக்கிறேன். கிராமங்களில் ஒருவேளை இதை விட அதிகமாக இருக்கக் கூடும். ஓட்டுனர் உரிமத்துக்காக வண்டி ஓட்டிப் பழகும் போது கூட குதிரை வண்டிகள் வரும் போதும் குதிரை வரும் போதும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விலாவாரியாகப் பாடம் எடுக்கிறார்கள். நம்ம ஊரில் மாட்டு வண்டிகள் மற்றும் மாடுகள் போல இருக்கலாம் என்று நினைக்கிறேன். தினமும் ராணியின் அரண்மனையில் காவலர் மாற்ற நிகழ