இடுகைகள்

ஜனவரி, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஏக்கம்

படம்
என் மூன்றாம் வகுப்பில் மூன்று கருப்பசாமிகள் இருந்தார்கள் ஏழாம் வகுப்பில் இரண்டு மாரியம்மாக்கள் இருந்தார்கள் பத்தாம் வகுப்பில் கூட ஒரே ஒரு ரமேஷோ சுரேஷோ இருக்கவில்லை பன்னிரண்டாம் வகுப்பில் கூட ஒரே ஒரு ஆஷாவோ உஷாவோ இருக்கவில்லை பின்குறிப்பு: "இது போன்று கேவலமாக ஏதாவது எழுதிக் கொண்டு அதற்குக் கவிதை  என்று பெயர் கொடுக்காதேடா வெங்காயம்!" என்று திட்டுபவர்கள் கூட ரமேஷ்-சுரேஷாக இருந்தால் நன்றாக இருக்கும் (பெண்கள் அப்படியெல்லாம் மண்டையாகப் பேச மாட்டார்கள் - பிடிக்காவிட்டால் ஒதுங்கிப் போய் விடுவார்கள் என்பதால் ஆஷா-உஷா பற்றிப் பேச வேண்டியதில்லை இங்கே!). :)

கலாச்சார வியப்புகள் - மீண்டும் சிங்கபுரம் - 6/7

படம்
கலாச்சார அதிர்ச்சி (CULTURE SHOCK) என்றொரு சொல்லாடல் இருக்கிறதே ஆங்கிலத்தில். அது போல இது கலாச்சார வியப்புகள் (CULTURE SURPRISES). கலாச்சார வியப்புகள் என்பது என் பயணக் கட்டுரைகள் மற்றும் வேறுபட்ட கலாச்சாரத்தவருடனான பழக்கக் கட்டுரைகள். புதிதாக நான் போய் இறங்கும் ஊர்களைப் பற்றியும் இதில் நிறைய வரும். எனவே, இதில் நான் பேசும் விஷயங்கள் எல்லாமே கலாச்சாரம் பற்றியதாகவே இருக்கும் என்று எதிர் பார்க்க வேண்டியதில்லை. எனக்குப் புதிதாகப் பட்ட எல்லாமே இதில் வரும். பொறுத்தருள்க! தொடரும் வியப்புகள்... இங்கே இருக்கும் 70% சீனர்கள் யாவரும் புத்த மதத்தவர் அல்லர். கிறித்தவர்களும் இருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையானவர்கள் புத்த மதத்தினரே. எனவே, புத்த மதப் பழக்க வழக்கங்களையும் நேரில் இருந்து பார்க்கும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. புத்த மதம் பல வகைகளில் இந்து மதப் பழக்கங்களைக் கொண்டுள்ளது. சீனர்களின் கடையில் காலையில் நம்மைப் போன்றே கடவுளுக்குப் படையல் இட்டு வணங்கிய பின்தான் தொழில் ஆரம்பிக்கிறார்கள். பூசைச் சாமான்கள் மட்டும் விற்கும் கடைகள் கூட இருக்கின்றன. காவியும் மஞ்சளுமாக அவையும் கூட இந்து மத