இடுகைகள்

ஜனவரி, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அலைக்கற்றை: ஊழல் அலையும் சாதிக் கற்றையும்!

படம்
சில ஊழல்ப் பேர்வழிகளால் நாடு சந்தித்திருக்கும் அரசியல் நெருக்கடி பற்றி பல்வேறு சாரார் பல்வேறு பட்ட கருத்துகள் கொண்டிருக்கிறார்கள். அவரவருடைய ஆர்வத்துக்கேற்ப ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் பார்க்கிறார்கள் இதை. பெரும் வணிக நிறுவனங்கள் எப்படி இந்திய அரசியலை ஆட்டிப் படைக்கின்றன என்பதை இது வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது என்கிறார்கள் சிலர். இது ஒரு அமைச்சரால் அவருடைய சொந்த நலனுக்காகப் பண்ணப் பட்டிருக்க முடியாது; இதன் பின்னால் ஒரு பெரிய வலைப்பின்னலே இருக்கிறது (காலம் காலமாக ஊழல் பண்ணுவதே தன் தலையாய பணியாய்க் கொண்டிருக்கும் ஒரு குடும்பமும் அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் கட்சிக்கும் மேலே) என்று கூறுகிறார்கள் வேறு சிலர். இரண்டிலுமே அர்த்தம் இருப்பது புரிகிறது.அவை உண்மை எனவும் நினைக்கிறேன். என் இரத்தத்தைக் கொதிக்க வைப்பது என்னவென்றால், இந்த ஊழலைக் கூட சில மானங்கெட்டவர்கள் நியாயப் படுத்துகிறார்கள் - எவ்வளவு பெரிய தொகை என்று பெருமையாய்ப் பேசுகிறார்கள். ஆட்சியில் இருக்கும் போதெல்லாம் ஏதோவொரு படிவத்தில் அவர்களுக்கு சில எலும்புத் துண்டுகளை வீசிய ஒரு கட்சி மீது தம் விசுவாசத்தைக் காட்டுவதில்