இடுகைகள்

உளவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்

பெரும வரலாற்றாசிரியரும் (Macro Historian), பேராசிரியரும், ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டேயஸ்’ஆகிய மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூல்களின் ஆசிரியரும், இந்த உலகின் மிகவும் புதுமையான மற்றும் கிளர்ச்சியூட்டும் சிந்தனையாளர்களில் ஒருவருமான யுவால் நோவா ஹராரி, தன் புத்தம்புதிய பணியான "21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்" நூல் பற்றி உரையாடுகிறார்.  இன்றைய மிக முக்கியமான பிரச்சனைகளின் வழியே “மிகவும் மனதை விரிவாக்கும்” ஒரு பயணமாகச் சொல்லப்படும் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூல், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் தலைசுற்றவைக்கும் - குழப்பமான மாற்றங்களுக்கு நடுவே நம் கூட்டு கவனத்தைப் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவுறுத்துகிறது.  நெறியாளர்: வில்சன் ஒயிட்.  நூல் வாங்க:  https://goo.gl/CVDJzG   யுவால் நோவா ஹராரியின் யூட்யூப் அலைவரிசை:  https://www.youtube.com/user/YuvalNoahHarari   யுவால் நோவா ஹராரி  21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்  செப்டம்பர் 14, 2018  வில்சன் ஒயிட்: அனைவருக்கும் மதிய வணக்கம், குறிப்பாக இங்கே கலிஃபோர்னியாவில் இருப்போரு...

உள்ளிருக்கும் மிருகம்

பச்சை விளக்கு மஞ்சளாகும் வேளையில் மிருகமாகி... எல்லை தாண்டியதும் மீண்டு(ம்) மனிதத்துக்குத் திரும்பி விடுகிறோம்!

ஏற்றத்தாழ்வுகள்தாம் எத்தனை வகை?!

இடம்: இலண்டனில் ஓர் ஓட்டல் இன்று காலை உணவுக்குச் செல்லும் போது என் இருக்கைக்கு அடுத்த இருக்கையில் ஒரு மிக அழகான ஐரோப்பிய இளம்பெண் அமர்ந்திருந்தாள். சிறிது நேரத்தில் அவளோடு வந்து ஓர் அழகான இளைஞன் இணைந்தான். நம் பிராமண முகத்துக்கும் மத்தியக் கிழக்கு முகத்துக்கும் ஐரோப்பிய முகத்துக்கும் இடைப்பட்ட ஒரு முகம் கொண்டிருந்தான். பேரழகன் என்று சொல்ல முடியாது (பெரும்பாலான ஆண்களுக்குத்தான் இன்னோர் ஆண் மகனை அழகனென்று ஏற்றுக் கொள்ள முடியாதே!). ஆனால் பெண்களைக் கவர்வதற்கே உரிய செயற்கையான இயற்கைச் சிரிப்பு, சினுங்கல் என்று எல்லாம் கொண்டிருந்தான். மத்தியக் கிழக்கு என்று நினைக்கக் காரணம், அவன் வைத்திருந்த குறுந்தாடி. ஐரோப்பியனாக இருக்கலாம் என்று எண்ண வைத்தது, இதற்கு முன்பு அலுவலகத்தில் நான் சந்தித்த கிரீஸ் நாட்டு சகா போன்ற ஒரு சாயல் கொண்டிருந்தான் என்பதால். கண்டிப்பாக ஆங்கிலேயன் அல்ல. அந்தப் பெண்ணும் ஆங்கிலேயையாக இருக்க வாய்ப்பில்லை. இருவரும் இணையாக இருக்கலாம் அல்லது நண்பர்களாக இருக்கலாம் என்று எண்ணிக் கொண்டேன். நான் பொறாமைப் பட்டேன் என்று சொல்லும் தைரியமோ நேர்மையோ வயதோ என்னிட...

என் காதல் - புடலங்காயும் பூசணிக்காயும்!

படம்
ஒரு மனிதனைப் பிடிப்பதற்கு அவர் நல்லவராக இருக்க வேண்டும் அல்லது அறிவாளியாக இருக்க வேண்டும் அல்லது நம் மீது பாசக்காரராக இருக்க வேண்டும் என்று எந்தவொரு குறிப்பிட்ட காரணமும் இருக்க வேண்டியதில்லை. இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட பெயர் சொல்லி விளங்க வைக்க முடியாத ஒரு காரணம் கூட இருக்கலாம். நம் வாழ்வின் மறக்க முடியாத ஒரு குறிப்பிட்ட காலத்தில் உடன் இருந்திருந்தால் கூட அத்தகைய பிடிப்புகள் ஏற்படலாம். அது மனிதர்களுக்கு மட்டுமில்லை. பொருட்களுக்கும் கண்ணால் காண முடியாத மற்ற பல்வேறு விஷயங்களுக்கும் கூடப் பொருந்தும் என்று உணர்கிறேன். எடுத்துக்காட்டாக, ஒரு பாடல் பிடித்துப் போவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சில சொல்லி விளக்க முடிந்தவை. சில அப்படி முடியாதவை. சில நேரங்களில் குரல், சில நேரங்களில் மெட்டு, சில நேரங்களில் இசை என்று பாடலின் அடிப்படையான பண்புகள் தவிர்த்து முதல் முறை அந்தப் பாடலைக் கேட்ட சூழல் கூட அத்தகைய பிடிப்பைத் தீர்மானிக்க முடியும். முதல் முறையை விடுங்கள், பல முறை கேட்டுப் பிடிக்காத ஒரு பாடல் திடீரென ஒரு குறிப்பிட்ட சூழலில் கேட்டபின் பிடிக்க ஆரம்பித்து விடுகிறது. இதுவரை பேசியதெல்லாம...

வேற வியப்புகள் - உள்ளுணர்வும் கனவுகளும்!

படம்
இன்று கலாச்சார வியப்புகள் பற்றி எழுதுவதாகச் சொல்லி இருந்தேன். அதற்குள் வேறொரு வியப்பு வந்து இன்றைய நாளையே ஆட்டி விட்டது. வியப்பு என்பதை விட அதிர்ச்சி என்றே சொல்லலாம். காலை படுக்கையில் இருந்து எழும் போதே பயத்துடனேயே எழுந்தேன். அதிகாலை அயர்ந்த தூக்கத்தில் ஒரு கனவு. தலைக்கு மேலே பறக்கும் விமானம் ஒன்று தலைக்கு மேலேயே விழுகிற மாதிரிக் கனவு. 'ஐயோ, சோலி முடிஞ்சதே!' என்று அலறுகையில் தரையில் முட்டிய விமானம் சிரிக்கும் பலூனாக (விமானம் அளவுக்கு இராட்சத பலூன்!) மாறி ஏதோ வாழ்த்துச் சொல்கிறது. கெட்ட கனவாக ஆரம்பித்து சுபமாக முடிந்ததால் பயப்பட வேண்டியதில்லை என்று மனதைத் தேற்றிக் கொண்டு அலுவலகம் சென்றேன். அலுவலகம் விமான நிலையத்துக்கு அருகில் என்பதால் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு விமானம் மேலெழும்புவதைக் காண முடியும். அப்படிக் கண்ட முதல் விமானம் எங்கே கீழே விழுந்து விடுமோ என்கிற பயத்திலேயே நடந்து அலுவலகத்துக்குள் சென்றேன். பின்னர் செய்தித் தளங்களைத் திறந்ததும், நைஜீரியாவில் விமானம் ஒன்று விழுந்து விட்ட செய்தி. சிறிது நேரம் கழித்து, நான் பார்த்த காட்சியைப் போன்றே  ஒரு காட்சிய...

சிறார்-பெரார்

படம்
இளமைப் பருவம் முழுக்க எல்லோரும் போலவே எண்ணிக் கொண்டிருந்தேன்... சிறியோரெலாம் விபரமிலார்! பெரியோரெலாம் விபரமுளோர்! சிறிது பெரியவனாகையில்... சிறியோர் சிலர் பெரியோர் போலும் பெரியோர் பலர் சிறியோர் போலும் உருமாறி உருமாறி உணர்த்தினார்கள்... அதற்கும் வயதுக்கும் உறவே இல்லை!

அதே சாம்பல்

படம்
நம்மைக் காட்டிலும் நல்லோருடன் முடியவில்லை... நாம் அவர்களுக்குக் கெட்ட பிள்ளையாகி விடுகிறோம்! நம்மைக் காட்டிலும் கெட்டோருடன் முடியவில்லை... அவர்கள் நமக்குக் கெட்ட பிள்ளையாக இருக்கிறார்கள்! நம் போலவே நல்லோர் நம் அளவே நல்லோர் நம் போலவே கெட்டோர் நம் அளவே கெட்டோர் அதே அளவு கருப்பு அதே அளவு வெள்ளை அதே அளவு சாம்பல் தேடிக் கொண்டே இருக்கிறோம்... அவ்வப்போது அகப்படும் அது போன்ற சில ஆட்களும் அப்படியே தொடர்ந்திடுவதில்லை அது போன்றே இருந்திடுவதில்லை அதையும் மீறி அப்படியே இருந்து விட்டாலும் நாம் அவர்களையோ அவர்கள் நம்மையோ அப்படியே இருக்க விடுவதில்லை... அல்லது இருக்கவே விடுவதில்லை...

உளறல்.காம்

படம்
எத்தனையோ அரசியல் அறிஞர்கள், ஆன்மீக ஆய்வாளர்கள், இலக்கியச் சொற்பொழிவாளர்கள், தத்துவ ஞானிகளின் பேச்சுகளும் உரைகளும் கேட்கிறோம். ஒவ்வொருவருடைய பேச்சும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையதாக இருக்கிறது. சிலர் பேச்சில் அனல் பறக்கிறது; சிலர் பேச்சில் இடி இடிக்கிறது; சிலர் பேச்சில் கருத்துக்கள் கொத்துக் கொத்தாய் விழுகின்றன; சிலர் பேச்சில் நகைச்சுவையும் நையாண்டியும் அருவியாய்க் கொட்டுகின்றன; சிலர் பேச்சில் அடுக்கு மொழி வசனங்கள் அழகழகாய் அலங்காரம் செய்கின்றன; சிலர் பேச்சு கவிதைகளும் பாடல்களுமாக இனிக்கின்றன. சிலர் பேச்சில் எங்கெங்கிருந்தோ மேற்கோள்கள் வந்து இறங்குகின்றன. இப்படி அத்தனை விதமான பேச்சுகளிலும் ஒவ்வோர் அழகு. இவை எல்லாவற்றையும் விட குடிகாரர்களின் உளறலிலும் மனநிலைக் கோளாறு உள்ளவர்களின் பேச்சிலும் எனக்கொரு தனிவித சுவையை உணர முடிகிறது. சிலர் இயற்கையாகவே எது பற்றிப் பேசினாலும் தெள்ளத் தெளிவாகப் பேசும் ஆற்றல் படைத்தவர்கள். அவர்களைப் பேச விட்டுக் கேட்பதில் ஓர் அலாதி இன்பம் இருக்கிறது. அவர்கள்தாம் சரியான வாய்ப்புகள் கிடைக்கும் போது, மிகச் சிறந்த பேச்சாளர்கள் ஆவது. இயல்பாகவே பேசப் பிடிக...

தோல்விக்கழும் துரோகி

படம்
அசார் டெண்டுல்கரின் அதிரடி ஆட்டத்தாலும் பரபரப்பான போட்டியின் பதற்றமான கடைசி ஓவரில் பறக்கடிக்கப்பட்ட சிக்சர்களாலும் கோப்பையை வென்றுவிட்ட கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் என்னைச் சுற்றியுள்ள எல்லோரும் அடிபட்ட பவுலர் அழுதுகொண்டே போன கேப்டன் ஏமாந்த ரசிகர்கள் எதிர்நாட்டவர் எல்லோருக்காகவும் என் மனம் கவலையில் இதற்கு முந்தைய தொடரில் இது எல்லாமே இந்தப் பக்கம் நடந்தது எப்போதுமே தோல்விக்காகத் துயரப் படுவதே தொழிலாகப் போய்விட்டது எனக்கு இந்நாடு வென்றாலும் எந்நாடு வென்றாலும் விளையாட்டு வெற்றிக்கு வெடி போடுவதுதான் தேசப் பற்றாகி விட்ட வேளையில் விளையாட்டு அரசியலானதும் அரசியல் விளையாட்டனதும் வியப்புமில்லை ஆச்சரியமுமில்லை அணுகுண்டு விளையாட்டிலும் அப்படித்தான் எதிரியைத் தாக்க எம்மிடம் இருக்கும் எண்ணிக்கையைச் சொல்லிச் சொல்லி துள்ளிக் குதிக்கிறார்கள் என்னைச் சுற்றியுள்ள எல்லோரும் எனக்கு மட்டும் அழியப் போகும் அந்நாட்டு அப்பாவிகள் விதவைகளாகப் போகும் வீரர்களின் மனைவிகள் அனாதைகளாகப் போகும் அவர்களின் பிள்ளைகள் வழக்கம் ...

நானொரு சமத்துவவாதி!

படம்
எல்லோரும் சமம் என்கிறது என் சமுத்திரத் துளியளவு சமத்துவ ஞானம் அதுதான் சமத்துவமா என்று கூடச்  சரியாகத் தெரியவில்லை... ஆனாலும்,  நானொரு சமத்துவவாதி! ஆனாலும், சமத்துவம் பற்றி பேசக் கூடத் தெரியாதோரை விட பெரியவன் இல்லையா நான்? * 2006 வாக்கில் கிறுக்கித் தொலைத்தது...