இடுகைகள்

அக்டோபர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டான் ப்ளூம் நேர்காணல்: "க்ளை-ஃபை" படைப்பாளி

டான் ப்ளூம் நேர்காணல்: "க்ளை-ஃபை" படைப்பாளி வில்லியம் ஏ. லிகெட் - டிசம்பர் 11, 2018 #க்ளை-ஃபை (#clifi) என்ற கொத்துக்குறியுடன் (hashtag) என் பருவநிலைப் புனைவுப் புதினமான ‘வாட்டர்மெலான் ஸ்னோ’ (Watermelon Snow) பற்றி என் நண்பர் ஒருவர் டிவீட் அனுப்பிய போதுதான் முதலில் டானைச் சந்தித்தேன். பருவநிலைப் புதினம் - கிளைமேட் ஃபிக்ஷன் (cli-fi) என்ற புதிய வகைமைக்கும் டானின் வலைத்தளம் cli-fi.net-க்கும் என் கண்களைத் திறக்கும் வகையில், டானே அந்த டிவீட்டுக்குப் பதிலளித்திருந்தார். அப்போதிருந்தே புனைவு எழுதுதல், கல்வி, மற்றும் பிரபல நூல்கள் பற்றிய கட்டுரைகளில் cli-fi-க்கான மேற்கோள்களைக் காணத் தொடங்கினேன். புதியவர்கள், முதுவர்கள் என இரு சாராரையும் இந்த வகைமையில் எழுத டான் சுறுசுறுப்பாக ஆதரித்து வருகிறார். 2017-இல் ‘வாட்டர்மெலான் ஸ்னோ’ வெளியாகும் நேரத்தில் என்னைப் பற்றியும் அந்த நூலைப் பற்றியும் ஒரு கட்டுரை எழுதினார். “க்ளை-ஃபை” எப்படி உருவானது என்றும் அது ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் பற்றியும் உரையாட பெருந்தன்மையோடு ஒரு நேர்காணலுக்கு ஒத்துக்கொண்டார். பருவநிலைப் புனைவில் உங்களின் இந்த ஆர்வத்துக்

லியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை

லியனர்டோ டிகாப்ரியோ உலகின் தலைசிறந்த காலநிலை மாற்றப் போராளிகளில் ஒருவரான கதை ஆஸ்கர் விருது பெற்ற இந்த நடிகரின் சூழலியல் செயல்பாடுகள் அவருடைய முதல் ஆஸ்கர் பரிந்துரைப் படமான “வாட்’ஸ் ஈட்டிங் கில்பர்ட் கிரேப்” (‘What’s Eating Gilbert Grape’) காலத்திலிருந்தே தொடங்கியதில்லைதான். ஆனாலும் அவர் 1990-களிலிருந்தே கடல்கள் பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் தொடர்ந்து தன்னைப் பயிற்றுவித்து வருகிறார். லியனர்டோ டிகாப்ரியோ, ‘ரெவெணண்ட்’ (Revenant) படத்தில் தன் ஆஸ்கர் வென்ற பாத்திரத்திற்காக விலங்குச் சடலத்துக்குள் தன்னைச் சுற்றிக்கொண்டு, காட்டெருமையின் பச்சை ஈரலை வாந்தியெடுத்து, உடல்வெப்பக்குறைவு அபாயத்துக்கு உள்ளாவதற்குப் பல காலம் முன்பே காலநிலைப் போராளியானவர். டிகாப்ரியோ, தன் சிறந்த நடிகருக்கான ஏற்புரையை, உலகெங்கும் உள்ள பார்வையாளர்களை “பேராசை அரசியலை” நிராகரிக்கவும் காலநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முன்வரும் தலைவர்களை ஆதரிக்கவும் வற்புறுத்துவதற்குப் பயன்படுத்தினார். “காலநிலை மாற்றம் மெய்யானது, அது இப்போது நடந்து கொண்டிருக்கிறது, அதுதான் நம் மனித இனம் முழுமையையும் எதிர்கொண்டிருக்கும் மி