இடுகைகள்

மார்ச், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மறைந்த ஸ்டீபன் ஹாக்கிங் 2006-இல் ஈவினிங் போஸ்ட்டுக்கு அளித்த நேர்காணல்: - பிரபஞ்சத்தில் கடவுளுக்கு எந்தப் பாத்திரமுமில்லை

ஸ்டீபன் ஹாக்கிங் இரண்டு செய்திகள் வைத்திருக்கிறார், ஒன்று கெட்டது, இன்னொன்று நல்லது. நல்லது முதலில்: “பிரபஞ்சம் என்றென்றைக்கும் எஞ்சி நிற்கும்”. கெட்டது: “கடவுளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அநேகமாய்.” மார்ச் 14, 2018, புதன்கிழமையன்று, ஸ்டீபன் ஹாக்கிங் தன் 76-ஆம் வயதில் மரணமடைந்தார். உலகப்புகழ் பெற்ற இயற்பியல் அறிஞரின் “காலம்: ஒரு வரலாற்றுச் சுருக்கம்” (நம் நம்பமுடியாப் பிரபஞ்சம்) ["A briefer history of time" (Our Incredible Universe)] என்ற நூல் வெளியீடு தொடர்பான ஈவினிங் போஸ்டின் அவரது பேட்டியை இங்கு படிக்கலாம். முதன்முறையாக இந்தப் பேட்டி 2006-இல் வெளியிடப்பட்டது. உலகின் தலைசிறந்த அறிவியல் பிரபலத்தின் பார்வையாளர்களாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். கருந்துளைகளின் உட்புறத்தில் பேரார்வம் கொண்டவர்கள் போலப் படுகிற மாணவர்கள், லண்டனுக்கு வெளியே உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயர்கணிதத் துறைக்காகப் (Advanced Mathematics) புதிதாகக் கட்டப்பட்டுள்ள மையத்தின் வரவேற்பறைக்கு உள்ளேயும் வெளியேயுமாக நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த ஒப்புதலைப் பெற ஆறு மாதங்கள் எடுத்துள்ளது. நூலா