இடுகைகள்

ஜூன், 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நான் ஏன் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன்: சிவம் சங்கர் சிங்

நான் ஏன் பா.ஜ.க.வில் இருந்து விலகுகிறேன்: சிவம் சங்கர் சிங் நரேந்திர மோதி ஆதரவாளரும் கட்சியின் பிரச்சார ஆய்வாளருமான ஒருவர் விளக்குகிறார் ‘இந்த அரசின் உண்மையான எதிர்மம் என்பது, நன்கு எண்ணித் தேர்ந்த ஓர் உத்தியோடு அது எப்படி தேசிய உரையாடலைப் பாதித்திருக்கிறது என்பதே. இது தோல்வியல்ல, இதுதான் திட்டமே.’ அரசியல் உரையாடல் ஆகக் கீழான புள்ளியில் இருக்கிறது, குறைந்தபட்சம் என் வாழ்நாளில் இதுதான் ஆகக் கீழான புள்ளி. கண்மூடித்தனமான சார்புநிலைப்பாடு நம்ப முடியாத அளவில் இருக்கிறது. என்ன ஆதாரம் என்பது பற்றியெல்லாம் எந்தக் கவலையுமில்லாமல் தன் பக்கம் எதுவோ அதை ஆதரிக்கிறார்கள் மனிதர்கள். அவர்கள் பொய்ச்செய்தி பரப்புகிறார்கள் என்பதை நிரூபித்தாலும் கூட எந்த மன உறுத்தலும் இல்லாமல் இருக்கிறார்கள். இதற்கு - கட்சிகள், வாக்காளர்கள், ஆதரவாளர்கள் என்று எல்லோரையுமே பழிக்கலாம். பாரதீய ஜனதா கட்சி, ஆற்றல்மிக்கதொரு பிரச்சாரத்தின் துணை கொண்டு சில குறிப்பிட்ட செய்திகளைப் பரப்புவதில் நம்பமுடியாத அளவுக்கு அருமையானதொரு பணியைச் செய்திருக்கிறது. இந்தச் செய்திகள்தாம் நான் அந்தக் கட்சியை இனியும் ஆதரிக்க முடியாது என்பதற்கான முதன

கில்லியர்மோ தெல் தோரோ (‘த ஷேப் ஆஃப் வாட்டர்’): 'துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை' [முழுமையான நேர்காணல் எழுத்துப்படி]

கில்லியர்மோ தெல் தோரோ (‘த ஷேப் ஆஃப் வாட்டர்’): 'துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை' [முழுமையான நேர்காணல் எழுத்துப்படி] கிறிஸ் பீச்சம், மார்கஸ் ஜேம்ஸ் டிக்சன்  திரைப்படம்  டிசம்பர் 26, 2017 11:00மு.ப.  கில்லியர்மோ தெல் தோரோ இதுவரை அவரது வாழ்க்கையில் ஒரேயோர் அகாடமி விருதுகளுக்கான பரிந்துரை மட்டுமே பெற்றுள்ளார் - "பான்’ஸ் லேபரிந்த்"-க்கான சிறந்த மூலத் திரைக்கதை (2006) - ஆனால் விரைவில் இதில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படலாம். அவரது சமீபத்திய திரைப்படமான “த ஷேப் ஆஃப் வாட்டர்”-இன் தயாரிப்பு, இயக்கம், மற்றும் எழுத்துக்காக சமீபத்தில் ‘கோல்டன் குளோப்’ மற்றும் ‘கிரிட்டிக்ஸ் சாய்ஸ்’ விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். உண்மையில், ஒளிபரப்புத் திரைப்பட விமர்சகர்களின் (Broadcast Film Critics) 14 பரிந்துரைகள் மற்றும் ஹாலிவுட் வெளிநாட்டுப் பத்திரிகைக் கழகத்தின் (Hollywood Foreign Press) 7 பரிந்துரைகளுடன் இந்தத் திரைப்படம்தான் இந்த ஆண்டில் ஒட்டுமொத்த விருதுகளுக்கான பரிந்துரைகளில் முன்னணி வகிக்கிறது. அவருடனான நம் சமீபத்திய உரையாடலில், இதை "துன்ப காலங்களுக்கான ஒரு மாயக் கதை&