இடுகைகள்

2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அண்டம்

நான் உள்வாங்காத காற்றை வெளியிட்டவர் நான் வெளியிட்ட காற்றை உள்வாங்காதவர் வந்து விளக்கினால் விளங்கிக்கொள்வேன் இந்தப் பேரண்டத்தின் அமைப்பை

வாய்மையிடத்து

அவனுக்கு நிலவாக  பூவாக  போதையாக  இருந்தவள்  இவனுக்கு  பெண்ணாக மட்டுமே  தெரிகிறாள் 

தாய்

படும் பாட்டையெல்லாம் அவளோடு பகிர்ந்துகொள்வதால் பயனென்ன இருக்கப் போகிறது? அவள் கவலையும் பெருகுவதன்றி படும் பாடெல்லாம் அவளுக்குத் தெரியவே தெரியாதே என்றாவது ஒரு நாள் எல்லாத்தையும்  அவளிடம் சொல்லி அழுது தீர்க்க வேண்டும் அவள் அழுது தீர்த்த பின்தான்  சுமை குறையும்

அருமை

கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டிருந்த வேளைகளில்  வாட்டி வதக்கிய வெயிலை மறக்கவே முடியவில்லை  ஆங்காங்கே இளைப்பாறக் கிட்டிய நிழல்களையும் நிலத்தில் கால் படாது  தேருலா சென்ற பொழுதுகளில் எப்போதேனும்  சுரீரென்று மூஞ்சியில் சுட்டிருக்கத்தானே செய்யும்  அது மட்டும் எப்படி நிழலாகத் தொடரவில்லை!

அயலவர்

"கட்டுனா அவளத்தான் கட்டுவேன். இல்லன்னா இப்பிடியே இருந்துட்டுப் போறேன்." "ராசா அப்பிடிப் பேசாத ராசா. உங்கப்பா இதெல்லாம் கேட்டாத் தாங்க மாட்டாரு. நானே மாமாவ விட்டுப் பேசச் சொல்றேன். நானும் உங்கம்மாட்டப் போய்ப் பேசுறேன். ரெண்டு பேர்ல ஒருத்தரு எறங்கி வந்துதானே ஆகணும். ரெண்டு பேரும் நாம் பிடிச்ச மொசலுக்கு மூணு கால்னு நின்னா எப்பிடி?" “நான் என்ன சீமைலயா போய்ப் பொண்ணு கட்டணுங்கறேன்? இந்தாருக்கு மாதலப்புரம். ஒன்ற மைல் தொலவட்டு. அதுக்கு எதுக்கு இம்புட்டு வீம்பு? பாத்துருவமே. நானா அவரான்னு. நாப்பத்தஞ்சு வயசுக் கெழவனுக்கு அம்புட்டு மொரண்டு இருந்தா இருபது வயசு எளவட்டம் எனக்கு எம்புட்டு இருக்கும்? நீங்க ஒன்னும் உங்கொண்ணங்கிட்ட எனக்காகப் பரிஞ்சு பேச வேணாம். நான் பாத்துக்கிறேன் எம் பிரச்சனய.” “இல்ல, ராசா. அவர் என்ன சொல்றாரு? நம்ம ஊர்ல இல்லாத பொண்ணா? நம்ம வம்சத்துலயே அந்தப் பழக்கம் இல்லையே ராசா. உள்ளூர்லயே சாதி மாறிக்கூட சம்பந்தம் செஞ்சிறலாம். ஊரு விட்டு ஊரு போயிச் செய்யிறது சாதாரணப்பட்ட வேலையா? நமக்கும் அவங்களுக்கும் ஏணி வச்சாக்கூட எட்டாது ராசா. அவங்க பேச்சு, பழக்கவழக்கமே வேற மாதி

கர்ணன் பேசும் அரசியல்

மாரி செல்வராஜின் ‘பரியேறும் பெருமாள்’ பெரிதளவில் பேசப்பட்டாலும் எல்லோரும் சொன்னதைப் போல் மனதைக் குத்திக் குடையவில்லை. அதைவிட வெற்றிமாறனின் ‘அசுரன்’ கூடுதலான தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது வந்திருக்கும் மாரி செல்வராஜின் ‘கர்ணன்’, ‘பரியேறும் பெருமாளை’ விடப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இருக்கிறது. முதலில் இலக்கியங்கள் எந்தப் பாதையில் செல்கின்றனவோ அதே பாதையை அடுத்துத் திரைத்துறை பின்பற்றும். அழகியல் என்ற பெயரில் தஞ்சாவூரின் வாழ்க்கையையும் சென்னையில் வாழ்க்கையையும் மட்டும் பேசிய இலக்கியங்கள் பின்னர்தான் பாண்டிய நாட்டின் - கரிசல் பூமியின் பக்கமெல்லாம் வந்தன. உயர் - ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையை மட்டும் பேசிய இலக்கியங்கள் அடுத்து நடுத்தர - போலி ஆதிக்க வர்க்கத்தின் வாழ்க்கையைப் பேசின. பின்னர்தான் அடித்தட்டு - ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் வந்தன. அதற்குப் பின்னால் உயர் - ஆதிக்க வர்க்கத்தின், நடுத்தர - போலி ஆதிக்க வர்க்கத்தின் படைப்பாளிகளும் இருந்தார்கள். அந்த வாழ்க்கையைப் பட்டு உணர்ந்த அடித்தட்டு - ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வெளிவந்த படைப்பாளிகளும் இருந்தனர். “என் வலியை உணர்ந்து அதை

ஸ்டெர்லைட்-கோவிட் அரசியல்: ஐயங்கள்

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படப் போகிறது. நான்கு மாதங்களுக்கு மட்டும், அதுவும் ஆக்சிஜன் கிடைக்காமல் செத்து விழும் கோவிட் நோயாளிகளைக் காக்கும் பொருட்டு, ஆக்சிஜன் தயாரிக்க மட்டும் என்று தொடங்கியிருக்கிறார்கள். இது இப்படியே முடியுமா என்றால், அதற்கான விடை நம் எல்லோருக்குமே தெரியும். இது எதில் போய் முடியும் என்பதும் நமக்குத் தெரியும். இப்போதைய கோவிட் நோயின் பரவல் வேகத்தையும் கொடூரத்தையும் வைத்துப் பார்த்தால், இந்தியா இதைவிட்டு முழுமையாக வெளியே வர இன்னும் ஓர் ஆண்டாவது ஆகும் போலத் தெரிகிறது. நோம் சோம்ஸ்கியின் சொற்களில் சொல்வதானால், ஒரு கோமாளியின் கையில் சிக்கிச் சீரழிந்துகொண்டிருந்த அமெரிக்கா இப்போது வெகுவேகமாக அந்தக் கொடுங்கனவிலிருந்து மீண்டு வெளியேறிக்கொண்டிருக்கிறது. அது போலவே சென்ற ஆண்டில் கோவிட் வரைபடங்களில் முன்னணியில் இருந்த மற்ற பல நாடுகளும் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டன. “பிறப்பிலேயே எதிர்ப்பு சக்தியோடு பிறந்தவர்கள், எங்களை எந்தக் கிருமியும் நெருங்க முடியாது” என்று சொல்லிக்கொண்டு திரிந்தோம். நம் கேடு கெட்ட அரசியலும் அடிப்படை அறிவற்ற நம்பிக்கைகளும் சேர்ந்து விளையாண்ட வி

சலுகை முதலியம் விவசாயிகளையும் நுகர்வோரையும் கூடச் சுரண்டும்: ரத்தன் கஸ்னபிஸ்

புகழ்பெற்ற மார்க்சிய - பொருளியல் பேராசிரியர் இந்த முரண்பாட்டை ஆராய்கிறார்   சுபோரஞ்சன் தாஸ்குப்தா முதலாளித்துவத்தின் கோட்டைகளான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் அவர்களின் விவசாயத் துறைக்குப் பெருமளவில் மானியமளித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ‘சந்தை-ஆதரவு’ (pro-market) ‘முதலிய-ஆதரவு’ (pro-capital) நரேந்திர மோதி ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’க்குக்  (MSP) கூட சட்டப்படியான உத்தரவாதம் வழங்கத் தயாராக இல்லை. ஏன்? முன்னேறிய மேற்கத்திய முதலாளித்துவத்துக்கும் சலுகைசார் இந்திய முதலாளித்துவத்துக்கும் என்ன வேறுபாடு? இந்த முரண்பாட்டைப் புகழ்பெற்ற மார்க்சிய - பொருளியல் பேராசிரியர் ரத்தன் கஸ்னபிஸ், மானுட அறிவியல் பேராசிரியரான இக்கட்டுரையாளருடன் ஒரு நேர்காணலில் ஆராய்கிறார். கே: நம் நாட்டின் ஆளும் அரசு சந்தைப் பொருளாதாரத்தின் கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு வலதுசாரிப் பழமைவாத அரசாங்கமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அது உண்மை என்றால், ஏன் இந்தத் தே.ஜ.கூ. (NDA) அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சந்தைக் கொள்கைகளைப் பின்பற்றி வேளாண்மைத் துறைக்குப் பெரிதும் மானியம் அளிக்கவில்லை? கஸ்னப

மாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…)

மாலை மாற்று - அன்னா அகானா (லைஸெல் மல்லர்-ஐத் தழுவி…) அவளின் கடைசி மூச்சு அவள் நுரையீரலை நிறைக்கிறது பொம்மைப் பேழைக்கு மேலே கால்கள் மிதக்கின்றன சிவப்புச் சீலை அவள் கழுத்திலிருந்து அவிழ்கின்றது கொரியப் பாப் பாடல் திரும்பத் திரும்பத் திருப்பி ஒலிக்கிறது கண்ணீர் தவழ்ந்து மேலேறி அவள் கண்ணுக்குள் நுழைகின்றன துயரம் குருடாக்கும் கோபமாக மடிப்பவிழ்த்துக்கொள்கிறது காகிதத்தின் கறைபடிந்த எழுத்துக்கள் கண்ணுக்குள் வருகின்றன அந்த எண்ணம் அவள் மனதை நீங்குகிறது கதவுகள் படார் படாரென்று திறக்கின்றன சொற்கள் வாய் பிளந்து உள்நுழைந்து பற்றியெரியும் வயிற்றுக்குள் அடங்குகின்றன என்னுடன் அவளுடைய கடைசிச் சண்டையைப் போட்டுக்கொண்டிருக்கிறாள் அது எனக்கு இன்னும் தெரியாது நான் உன்னை வெறுக்கிறேன், படாரென்று வாய் திறந்து உள்ளே போய்விடுகிறது அவள் தட்டிவிட்ட கைவினை இளஞ்சிவப்பு வாலெண்டைன் அட்டை தரையிலிருந்து தாவி மேசை மேல் இடம் கொள்கிறது யாருக்குமே புரியல யாருக்குமே தெரியல யாருமே காது கொடுக்கிறதில்ல யாருக்குமே அக்கறையில்ல யாருக்குமே என்னைப் பிடிக்கல நான் நாதியற்றவள் என்று கக்கியவற்றை விழுங்கிக்கொண்டு விரைந்து பின்செல்கிறாள் அ

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன்

வாசிப்பு குறைவுதான் எனினும் இதுவரை வாசித்த தமிழ் நூல்களில் சிறந்த நூல் இதுதான் என்று சொல்லலாம். இது எவ்வளவு சீக்கிரம் மாறும் என்று தெரியவில்லை. எவ்வளவு வேகமாக வாசிக்கிறோம் என்பதைப் பொறுத்து அது மாறும் என நினைக்கிறேன். ஜெயகாந்தன் தன் புதினங்களிலேயே தனக்கு அதிகம் பிடித்தது என்று சொன்னது இதைத்தான் என்பார்கள். ஜெயகாந்தனின் வாசகர்கள் நிறையப் பேரும் இதைச் சொல்வதுண்டு. ஓரளவுக்கு நகரப் பின்னணியில் இருந்து வருபவர்கள், பெண்களுக்கு 'சில நேரங்களில் சில மனிதர்கள்', ஊரகப் பின்னணியில் இருந்து வருபவர்கள், இளைஞர்களுக்கு 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' என்று மேலோட்டமாகச் சொல்லலாம். மொத்தக் கதையிலும் வரும் கதாபாத்திரங்கள் பத்துப் பேர்தான் இருக்கும். அவற்றில் ஒவ்வொரு கதாபாத்திரமும் செதுக்கிச் செதுக்கிச் செய்தது போல இருக்கிறது. ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் ஒரு கோட்டில் வந்து இணைத்த விதம் பிசிறில்லாமல் இருந்தது. தொடங்கிய சிறிது நேரத்திலேயே இதை எழுதும் போது ஜெயகாந்தன் ஏதோவொரு தேவபானம் அருந்திவிட்டுத்தான் இப்படியொரு கதையை எழுதியிருக்க முடியும் என்று தோன்றியது ("ஆமாமா... அவருக்கு அந்தப் பழ