இடுகைகள்

அக்டோபர், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அண்டம்

நான் உள்வாங்காத காற்றை வெளியிட்டவர் நான் வெளியிட்ட காற்றை உள்வாங்காதவர் வந்து விளக்கினால் விளங்கிக்கொள்வேன் இந்தப் பேரண்டத்தின் அமைப்பை

வாய்மையிடத்து

அவனுக்கு நிலவாக  பூவாக  போதையாக  இருந்தவள்  இவனுக்கு  பெண்ணாக மட்டுமே  தெரிகிறாள் 

தாய்

படும் பாட்டையெல்லாம் அவளோடு பகிர்ந்துகொள்வதால் பயனென்ன இருக்கப் போகிறது? அவள் கவலையும் பெருகுவதன்றி படும் பாடெல்லாம் அவளுக்குத் தெரியவே தெரியாதே என்றாவது ஒரு நாள் எல்லாத்தையும்  அவளிடம் சொல்லி அழுது தீர்க்க வேண்டும் அவள் அழுது தீர்த்த பின்தான்  சுமை குறையும்

அருமை

கண்ணைக் கட்டிக் காட்டில் விடப்பட்டிருந்த வேளைகளில்  வாட்டி வதக்கிய வெயிலை மறக்கவே முடியவில்லை  ஆங்காங்கே இளைப்பாறக் கிட்டிய நிழல்களையும் நிலத்தில் கால் படாது  தேருலா சென்ற பொழுதுகளில் எப்போதேனும்  சுரீரென்று மூஞ்சியில் சுட்டிருக்கத்தானே செய்யும்  அது மட்டும் எப்படி நிழலாகத் தொடரவில்லை!