இடுகைகள்

பொருளியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சலுகை முதலியம் விவசாயிகளையும் நுகர்வோரையும் கூடச் சுரண்டும்: ரத்தன் கஸ்னபிஸ்

புகழ்பெற்ற மார்க்சிய - பொருளியல் பேராசிரியர் இந்த முரண்பாட்டை ஆராய்கிறார்   சுபோரஞ்சன் தாஸ்குப்தா முதலாளித்துவத்தின் கோட்டைகளான அமெரிக்காவும் மேற்கு ஐரோப்பாவும் அவர்களின் விவசாயத் துறைக்குப் பெருமளவில் மானியமளித்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ‘சந்தை-ஆதரவு’ (pro-market) ‘முதலிய-ஆதரவு’ (pro-capital) நரேந்திர மோதி ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’க்குக்  (MSP) கூட சட்டப்படியான உத்தரவாதம் வழங்கத் தயாராக இல்லை. ஏன்? முன்னேறிய மேற்கத்திய முதலாளித்துவத்துக்கும் சலுகைசார் இந்திய முதலாளித்துவத்துக்கும் என்ன வேறுபாடு? இந்த முரண்பாட்டைப் புகழ்பெற்ற மார்க்சிய - பொருளியல் பேராசிரியர் ரத்தன் கஸ்னபிஸ், மானுட அறிவியல் பேராசிரியரான இக்கட்டுரையாளருடன் ஒரு நேர்காணலில் ஆராய்கிறார். கே: நம் நாட்டின் ஆளும் அரசு சந்தைப் பொருளாதாரத்தின் கொள்கைகளுக்கும் நடைமுறைகளுக்கும் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ஒரு வலதுசாரிப் பழமைவாத அரசாங்கமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. அது உண்மை என்றால், ஏன் இந்தத் தே.ஜ.கூ. (NDA) அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பாவின் சந்தைக் கொள்கைகளைப் பின்பற்றி வேளாண்மைத் துறைக்குப் பெரிதும் மானியம் அளிக்கவில்...

நோம் சோம்ஸ்கி: கொரோனாக்கிருமி - இடரில் இருப்பது என்ன? | DiEM25 தொலைக்காட்சி | ஸ்ரெச்கோ ஹோர்வத்

Noam Chomsky: Coronavirus - What is at stake? | DiEM25 TV | Srećko Horvat ஸ்ரெச்கோ ஹோர்வத்: மற்றுமொரு ‘கொரோனாக்கிருமிக்குப் பிந்தைய உலகம்’ நிகழ்ச்சிக்கு வரவேற்கிறேன். இந்தச் சிறப்பு அத்தியாயத்துக்காக மிக்க மகிழ்ச்சியாகவும் கௌரவமாகவும் உணர்கிறேன். ஏனென்றால், இன்று ஒரு சிறப்பு விருந்தினர் நம்முடன் இணைகிறார். அந்தச் சிறப்பு விருந்தினர் எனக்கு மட்டுமல்ல, பல தலைமுறைகளுக்கு நாயகன். துரதிர்ஷ்டவசமாக நாங்கள் இருவருமே சுயதனிமையில் இருக்கிறோம். இது ஒரு சிறப்புச் சந்தர்ப்பமும் கூட. அறிமுகத்தை இன்னும் நீட்டிக்காமல்... இதைப் பார்க்கும் உங்களில் பெரும்பாலானவர்களுக்கு நோம் சோம்ஸ்கி யாரென்று தெரியும். நோம் இன்று நம்மோடு இணைகிறார் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஹலோ நோம்! எங்கே இருக்கிறீர்கள்? ஏற்கனவே சுயதனிமையில் இருக்கிறீர்களா? எவ்வளவு காலம்? இதையெல்லாம் எங்களுக்குச் சொல்வீர்களா? நோம் சோம்ஸ்கி: நன்று, நான் அரிசோனா மாநிலம் டுசாயன் நகரத்தில் சுயதனிமையில் இருக்கிறேன்.  ஸ்ரெச்கோ: சரி, நீங்கள் 1928-இல் பிறந்தீர்கள். எனக்குத் தெரிந்தவரை உங்கள் முதல் கட்டுரையை நீங்கள் பத்து வயதாக இருக்கும் போது எழுதினீ...

கொரோனாக்கிருமிக்கு முன்பும் அதன் காலத்திலும் அதற்குப் பின்பும் உலகம்: யுவால் நோவா ஹராரியுடன்

யுவால்: இன்றுவரை, பெரும்பாலான கண்காணிப்புகள் தோலுக்கு மேலேயே நடந்தன. அது இப்போது தோலுக்குக் கீழே போகப் போகிறது. இதன் மூலம் நான் சொல்வது என்னவென்றால், இன்றுவரை, பெரும்பாலான கண்காணிப்புகள், ஃபேஸ்புக் அல்லது அமேசான் போன்ற பெருநிறுவனங்களால் செய்யப்படும் கண்காணிப்புகள் என்றாலும் சரி, அரசாங்கங்களால் செய்யப்படும் கண்காணிப்புகள் என்றாலும் சரி, அவை இந்த உலகத்தில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், எங்கே போகிறீர்கள், யாரைச் சந்திக்கிறீர்கள், எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்க்கிறீர்கள், இணையத்தில் எந்தச் செய்திகளைப் படிக்கிறீர்கள் என்பனவற்றைப் பற்றியவையே. ஆனால் அவை தோலுக்குக் கீழேயோ, உங்கள் உடலுக்கு உள்ளேயும் உங்கள் மூளைக்கு உள்ளேயும் என்ன நடக்கிறது என்றோ பார்க்கவில்லை. ஆனால் இப்போது நாம் தெரிந்துகொள்ள விரும்பும் முக்கியமான விஷயம் உடலுக்குள் இருக்கிறது. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருக்கிறீர்களா இல்லையா, உங்களுக்கு கோவிட்-19 இருக்கிறதா, உங்கள் உடல் வெப்பநிலை என்ன, உங்கள் இரத்த அழுத்தம், உங்கள் இதயத்துடிப்பின் வேகம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இது கண்காணிப்பின் தன்மையையே மாற்றுகிறது. இப்போ...

யுவால் நோவா ஹராரி: “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” | கூகுள் உரையாடல்கள்

பெரும வரலாற்றாசிரியரும் (Macro Historian), பேராசிரியரும், ‘சேப்பியன்ஸ்’, ‘ஹோமோ டேயஸ்’ஆகிய மிகச் சிறப்பாக விற்றுக்கொண்டிருக்கும் நூல்களின் ஆசிரியரும், இந்த உலகின் மிகவும் புதுமையான மற்றும் கிளர்ச்சியூட்டும் சிந்தனையாளர்களில் ஒருவருமான யுவால் நோவா ஹராரி, தன் புத்தம்புதிய பணியான "21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்" நூல் பற்றி உரையாடுகிறார்.  இன்றைய மிக முக்கியமான பிரச்சனைகளின் வழியே “மிகவும் மனதை விரிவாக்கும்” ஒரு பயணமாகச் சொல்லப்படும் “21-ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்” நூல், நம்மைச் சுற்றி நடந்துகொண்டிருக்கும் தலைசுற்றவைக்கும் - குழப்பமான மாற்றங்களுக்கு நடுவே நம் கூட்டு கவனத்தைப் பேணிக் காக்க வேண்டிய அவசியத்தை நினைவுறுத்துகிறது.  நெறியாளர்: வில்சன் ஒயிட்.  நூல் வாங்க:  https://goo.gl/CVDJzG   யுவால் நோவா ஹராரியின் யூட்யூப் அலைவரிசை:  https://www.youtube.com/user/YuvalNoahHarari   யுவால் நோவா ஹராரி  21-ஆம் நூற்றாண்டிற்கான 21 பாடங்கள்  செப்டம்பர் 14, 2018  வில்சன் ஒயிட்: அனைவருக்கும் மதிய வணக்கம், குறிப்பாக இங்கே கலிஃபோர்னியாவில் இருப்போரு...